சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சூரிய கிரகணத்தின் போது உலக்கையும் அம்மிக்கல்லும் செங்குத்தாக நிற்கும் அரிய காட்சி

Google Oneindia Tamil News

சென்னை: சூரிய கிரகணத்தின் போது உலக்கையும் அம்மிக்கல்லும் செங்குத்தாக நிற்கும் காட்சி வைரலாகி வருகிறது.

அபூர்வமான சூரிய கிரகணம் இன்று தெரிந்தது. அதாவது பூமி, சூரியன் ,நிலவு ஆகியன ஒரே நேர்கோட்டில் வருவது. காலை 8 மணி முதல் முன்பகல் 11.19 மணி வரை இந்த அபூர்வ நிகழ்வு நிகழ்ந்தது.

60 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த அரிய நிகழ்வு தமிழகத்திலும் நன்கு தெரிந்தது. இதற்காக தமிழகம் முழுவதும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அபூர்வ சூரிய கிரகணம்.. வித்தியாசமாக காட்சியளித்த மரத்தின் நிழல்.. கடலூரில் செம!அபூர்வ சூரிய கிரகணம்.. வித்தியாசமாக காட்சியளித்த மரத்தின் நிழல்.. கடலூரில் செம!

வீடியோ

வீடியோ

இந்த நிலையில் கடலூரில் உள்ள வீடுகளில் கிரகணத்தின் போது அம்மிக்கல்லை செங்குத்தாக நிற்க வைக்கும் அற்புதத்தை மக்கள் செய்திருந்தனர். இது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

அம்மிக்கல்

அம்மிக்கல்

அதுபோல் உலக்கையையும் நிற்க வைத்திருந்தனர். அம்மிக் கல், உலக்கையின் முனைகளும் தட்டையாக இருக்காது. அம்மியில் கூம்பு வடிவாகவும் உலக்கையின் முனை நிற்க வைக்க முடியாத படியும் இருக்கும்.

நிகழ்வு

நிகழ்வு

இது போல் கிரகணத்தின்போது நிற்க வைக்கப்படும் அம்மிக்கல்லும் உலக்கையும் கிரகணம் முடிந்த பிறகு கீழே விழுந்துவிடும். இந்த நிகழ்வை பல்வேறு தரப்பினர் பார்த்து ரசித்தனர்.

சிறப்பு

சிறப்பு

தமிழகத்தில் மீண்டும் சூரிய கிரகணம் வரும் 2031-ஆம் ஆண்டு ஏற்படும். அச்சமயம் தேனி உள்ளிட்ட பகுதிகளில் முழு கிரகணத்தை காணலாம். அதோடு 60 ஆண்டுகள் கழித்துதான் மீண்டும் தமிழகத்தில் நடக்கும் என்பதால் இந்த நிகழ்வு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

கன்னங்குறிச்சி

கன்னங்குறிச்சி

சேலத்திலும் இதேபோல கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த விவசாயி கார்த்திக் என்பவரது வீட்டில் கிரகணம் துவங்கியபோது நிற்க வைக்கப்பட்ட உலகை கிரகணம் சூரிய கிரகணம் நீடித்த வரை நின்றது. அதன் பிறகு கிரகணம் முடிந்தவுடன் தானாக கீழே விழுந்ததாக தெரிவித்தார் விவசாயி கார்த்திக். தமிழகத்தின் பல பகுதிகளிலும் குறிப்பாக கிராமப்புறங்களில் இதுபோல உலக்கையை நிற்க வைப்பது தொடர்ந்து நடந்து வருகிறது.

English summary
Cuddalore Village people made Ammikal and Ulakkai to stand vertically during Eclipse. It will fell down after solar eclipse over.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X