பிரத்யேக செயலிகள் தேவையில்லை.. இனி வாட்ஸ் அப் மூலம் ஃபாஸ்டேக் ரீசார்ஜ்.. எப்படி தெரியுமா?
சென்னை: வாட்ஸ் அப் செயலி மூலம் நேரடியாக ஃபாஸ்டேக் ரீசார்ஜ் செய்யும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஃபாஸ்டேக் ரீசார்ஜ் செய்வதற்காக பிரத்யேக செயலிகல் பயன்படுத்த தேவை இல்லாத சூழல் உருவாகியுள்ளது.
இந்தியாவில் உள்ள நெடுஞ்சாலைகளில் பயணிக்கையில் சுங்கச்சாவடிகள் பணம் செலுத்த வேண்டும். அப்படி ஒவ்வொரு வாகனமாக பணி செலுத்தும்போது, நீண்ட நேரமாகிறது. அதுமட்டுமல்லாமல் பணம் செலுத்த தாமதாம் ஆகும்போது, போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுவதாகவும், பணப்பரிமாற்றத்தில் முறைகேடு நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை சார்பாக ஃபாஸ்டேக் (FASTAG) முறை மத்திய அரசு அறிமுகம் செய்யப்பட்டது.

ஃபாஸ்டேக் முறை
இந்த ஃபாஸ்டேக் முறை அறிமுகமான சில மாதங்களிலேயே, நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. ஃபாஸ்டாக் மூலம் எளிதாகவும் விரைவாகவும் சுங்கக்கட்டணம் செலுத்தப்படுவதாக பயணிகளும் கூறுகின்றனர். ஃபாஸ்டேக் மூலம் சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த பயணிகள், ஃபாஸ்டேக் அக்கவுண்டில் ரீசார்ஜ் செய்திருக்க வேண்டும்.

வாட்ஸ் அப் மூலம் ஃபாஸ்டேக் ரீசார்ஜ்
ஃபாஸ்டேக்கில் ரீசார்ஜ் செய்வதற்காக பயணிகள் பல்வேறு தொலைபேசி நிறுவனங்களின் ரீசார்ஜ் செயலிகள் மூலமாகவும், எஸ்பிஐ, ஐசிஐசிஐ உள்ளிட்ட வங்கி செயலிகள் மூலமாகவும் ரீசார்ஜ் செய்து வந்தனர். இந்த நிலையில் வாட்ஸ் அப் மூலமாக ஃபாஸ்டேக் ரீசார்ஜ் செய்யும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் ( IDFC FIRST ) வங்கி வாட்ஸ் அப் மூலம் ஃபாஸ்டேக் ரீசார்ஜ் செய்யும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் வாட்ஸ் அப் சேப் பாட் பக்கத்தில் இந்த வசதியை பெற முடியும்.

ரீசார்ஜ் செய்வது எப்படி?
அதற்கு வாடிக்கையாளர்கள், ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் அதிகாரப்பூர்வ வாட்ஸ் அப் சேட் பாட் எண்: 919555555555-னை மொபைலில் முதலில் சேவ் செய்து பின்னர் மெசேஜ் அனுப்ப வேண்டும். அதனைத்தொடர்ந்து வாட்ஸ் அப் சேட் பாட் பக்கத்தை ஓப்பன் செய்து ரீசார்ஜ் ஆப்சனை செலக்ட் செய்து எவ்வளவு தொகை என்பதை குறிப்பிட வேண்டும். பின்னர் மொபைலுக்கு வரும் ஓடிபி மூலம் பரிவர்த்தனையை உறுதி செய்த பின்னர், ரீசார்ஜ் செய்ததற்கான மெசேஜ் வந்துவிடும்.

வங்கி அதிகாரிகள் கருத்து
இதுகுறித்து ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் அதிகாரிகள் கூறுகையில், ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி ஃபாஸ்டேக் முறையில் சிறந்த அனுபவங்களை உருவாக்க முயற்சித்து வருகிறது. இனி 'payments on WhatsApp' ஆப்ஷன் மூலம் ஃபாஸ்டேக் ரீசார்ஜ் செய்யலாம். இதனை வாட்ஸ் அப் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்துவதில் மகிழ்ச்சி என்று தெரிவித்தார்.

வாட்ஸ் அப் நிறுவனம்
அதேபோல் வாட்ஸ் அப் இந்தியாவின் தலைவர் அபிஜித் போஸ் கூறுகையில், ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி வாட்ஸ் அப் மூலம் ஃபாஸ்டேக் ரீசார்ஜ் செய்யும் நடைமுறையை கொண்டு வந்துள்ளது. இது டிஜிட்டல் பரிவர்த்தனைகளை முன்னேற்றுவற்கான முக்கிய வழி. அனைவரும் எளிதாக அணுகக்கூடிய வகையில் ஃபாஸ்டாக் ரீசார்ஜை மாற்றுவதற்கான வாட்ஸ் அப் இந்தியாவின் முயற்சி இது என்று தெரிவித்தார்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications