சந்தோஷப்படாதீங்க முதல்வரே.. அதிமுக பற்றி பேசும் தகுதியே திமுகவுக்கு இல்லை.. பொங்கிய சி.வி.சண்முகம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய சி.வி.சண்முகம், ரொம்ப சந்தோஷப்படாதீங்க முதல்வரே.. உங்கள் மகன் உதயநிதிக்கு விரைவில் பட்டாபிஷேகம் செய்து வைப்பீர்கள். அது நடக்கும்போது என்ன நடக்கும் என்பதை நாங்கள் பார்க்கத்தான் போகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    cv Shanmugam ஆவேசம் | அந்த பதவியெல்லாம் காலாவதி ஆகிவிட்டது

    மேலும், அதிமுக என்பது ஜனநாயக முறையில் நடத்தப்படும் இயக்கம். இது அதிமுகவின் உட்கட்சி விவகாரம். உங்களுக்கு ஏன் வயிறு எரிகிறது? என முதல்வர் ஸ்டாலினை சாடியுள்ளார் சி.வி.சண்முகம்.

    மேலும், திமுக என்ன ஜனநாயக முறைப்படி நடக்கிற கட்சியா? அதிமுகவைப் பற்றி பேசும் தகுதி திமுகவுக்கும் ஸ்டாலினுக்கும் இல்லை எனத் தெரிவித்துள்ளார் சி.வி.சண்முகம்.

    அதிமுக பொதுக்குழு

    அதிமுக பொதுக்குழு

    பரபரப்பான சூழ்நிலையில் அ.தி.மு.க பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நேற்று சென்னையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும், ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கும் இடையேயான மோதல் வெளிப்படையாகவே நடந்தது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டனர். பொதுக்குழு தொடங்கியது முதல் ஒற்றைத் தலைமை கோஷம் எழுப்பப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

    முதல்வர் ஸ்டாலின்

    முதல்வர் ஸ்டாலின்

    அதேநேரத்தில், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இல்ல திருமண விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது, "இந்த திருமண மண்டபத்தில் நம்முடைய வீட்டு திருமணம் நடக்கிறது. இன்னொரு பக்கத்தில் ஒரு திருமண மண்டபத்தில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்கு தெரியும். அந்த பிரச்சனைக்கு நான் போக விரும்பவில்லை. அதில் தலையிட வேண்டிய அவசியமில்லை. திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போயுள்ளனர். திமுக அழிந்ததாக வரலாறு இல்லை" என முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுக்குழுவை சூசகமாக சுட்டிக்காட்டிப் பேசினார்.

     சி.வி.சண்முகம்

    சி.வி.சண்முகம்

    அதிமுக அதிகார மோதலால் பொதுக்குழுவில் ஏற்பட்ட களேபரங்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் சூசகமாக தெரிவித்த கருத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பதில் அளிக்கும் வகையில் இன்று பேசியுள்ளார். அவர் பேசுகையில், "ரொம்ப சந்தோஷப்படாதீங்க முதல்வரே.. அப்பா, மகன், பேரன், கொள்ளுப்பேரன் என வரிசையாக தலைமைப் பதவிக்கு வரும் இயக்கம் திமுக. காலம் விரைவில் வருகிறது. உங்கள் மகன் உதயநிதிக்கு விரைவில் பட்டாபிஷேகம் செய்து வைப்பீர்கள். அது நடக்கும்போது என்ன நடக்கும் என்பதை நாங்கள் பார்க்கத்தான் போகிறோம்.

    ஜனநாயக இயக்கம்

    ஜனநாயக இயக்கம்

    அதிமுக என்பது ஜனநாயக முறையில் வெளிப்படையாக நடத்தப்படும் இயக்கம். இதுவரை எந்தப் பொதுக்குழுவிலும் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்பட்டது இல்லை. ஆனால், நேற்று எல்லோரையும் அழைத்து உள்ளே அனுமதித்தோம். அதிமுக ஜனநாயக இயக்கம். இது அதிமுகவின் உட்கட்சி விவகாரம். எல்லாக் கட்சியிலும் உட்கட்சி பிரச்சனைகள், வருவதும் தீர்க்கப்படுவதும் உண்டு. உங்களுக்கு ஏன் வயிறு எரிகிறது?

    தகுதி இல்லை

    தகுதி இல்லை

    திமுக என்ன அப்படியே ஜனநாயக முறைப்படி நடக்கிற கட்சியா? அதிமுகவைப் பற்றி பேசும் தகுதி திமுகவுக்கும் ஸ்டாலினுக்கும் இல்லை. அடிப்படைத் தொண்டர்களால் நடத்தப்படுகிற இயக்கம் அதிமுக. திமுகவை போல இல்லை." எனத் தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலினுக்கு சி.வி.சண்முகம் அளித்துள்ள பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+