'ஆளுக்கு ஒரு பொண்டாட்டி கூட '.. சிவி சண்முகம் பேசியது பெண் வெறுப்பு பேச்சு அல்ல.. ஐகோர்ட் தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாதாமாதம் பணம், லேப்டாப் என கொடுக்க ஆரம்பித்திருக்கும் திமுக அரசு "ஆளுக்கு ஒரு பொண்டாட்டி கூட" கொடுக்கும் என அதிமுக மாநிலங்களவை எம்பி சி.வி சண்முகம் பேசியிருப்பதை 'பெண் வெறுப்பு' பேச்சு என கருத முடியாது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்துடன் அதிமுக எம்பி சி.வி. சண்முகத்தின் இந்த பேச்சுக்கு எதிராக தமிழ்நாடு மகளிர் ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா ரத்து செய்து உத்தரவிட்டார்.

எம்பி சி.வி சண்முகத்தின் இந்தப் பேச்சு அரசின் இலவசக் கொள்கைகளை விமர்சிப்பதாகக் கருதப்படலாமே தவிர, பெண்களைக் குறைத்து மதிப்பிடும் பாலின ரீதியான கருத்தாகக் கருத முடியாது என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

CV Shanmugam high court

திமுக அரசு ரொக்கப் பரிசுகளையும் இதர இலவசங்களையும் அள்ளி வழங்கிவருகிறது. மிக்ஸி, கிரைண்டர் கொடுப்பாங்க... ஆடு, மாடு கொடுப்பாங்க.. இல்லாட்டி ஒவ்வொருவருக்கும் ஒரு மனைவியைக் கூட இலவசமாகக் கொடுக்கக்கூடும் என்று அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் பேசியிருந்தார். இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து இந்தப் பேச்சு பெண்களை இழிவுபடுத்துவதாகவும், பெண்களுக்கு எதிரானது என்றும் கூறி, அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் புகார் அளித்தது. இதன் அடிப்படையில் மாநில மகளிர் ஆணையம் அவர் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்தது.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவி சண்முகம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா, சிவி சண்முகத்தின் இந்தப் பேச்சு பெண்களை இழிவுபடுத்துவதாகக் கருத முடியாது என்று எறு தீர்ப்பளித்தார். எம்பிக்கு எதிராக தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் தொடங்கிய நடவடிக்கைகளை ரத்து செய்த நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா, எம்பியின் பேச்சு அரசின் இலவசக் கொள்கைகளை விமர்சிப்பதாக மட்டுமே பார்க்கப்பட வேண்டுமே தவிர, பெண்களை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் கூறப்பட்ட பாலினக் கருத்தல்ல என்று கூறினார்.

நீதிபதி தீர்ப்பில் கூறும் போது,"மனுதாரரின் உரையை முழுமையாகப் பரிசீலித்ததில், புகார்தாரர்கள் கூறுவது போல அந்தப் பேச்சு எந்த வகையிலும் பெண்களை இழிவுபடுத்துவதாகவோ அல்லது பெண்களுக்கு எதிரானது என்பதாகவோ கருத முடியாது மாறாக, இது அரசின் இலவசக் கொள்கை மீதான ஒரு விமர்சனமாகவே பார்க்கப்பட வேண்டும். மற்ற பொருட்களுடன் சேர்த்து அரசு ஒரு மனைவியையும் இலவசமாக அறிவிக்கலாம் என்று மனுதாரர் கூறியதால் மட்டுமே, அவர் பெண்களை அரசு இலவசமாக வழங்கும் பொருட்களுக்கு நிகராகக் கருதிவிட்டார் என்று அர்த்தம் கொள்ள முடியாது" என்றார்.

மேலும், மாநில மகளிர் ஆணையத்தின் நடவடிக்கைகள் நடைமுறை மீறல்களைக் கொண்டுள்ளது.. எனவே எம்பிக்கு எதிராகக் குற்றவியல் நடவடிக்கை எடுக்க ஆணையம் செய்த பரிந்துரையின் அடிப்படையில் காவல்துறைத் தலைமை இயக்குநர் செயல்பட அனுமதிக்க முடியாது என்ற எம்பியின் வழக்கறிஞர் எம். முகமது ரியாஸின் வாதத்தையும் நீதிபதி ஏற்றுக்கொண்டார். 2008-ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையச் சட்டத்தின்படி, ஒரு புகாரின் மீது ஆரம்பக்கட்ட திருப்தியை அடைவதற்கு முன்னதாக ஆணையம் விரிவான விசாரணை நடத்த வேண்டும் மற்றும் ஆணையத்தின் அனைத்து உத்தரவுகளும் முடிவுகளும் உறுப்பினர் செயலாளரால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.

மேலும், 'ஆணையம்' என்ற சொல் தலைவரை மட்டும் குறிக்காது என்றும், அதில் உள்ள மற்ற ஐந்து உறுப்பினர்களையும் உள்ளடக்கும் என்றும் சட்டம் தெளிவாகக் கூறுகிறது. ஆனால், இந்த வழக்கில் சிவி சண்முகம் எம்பிக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளும் தலைவரால் மட்டுமே கையெழுத்திடப்பட்டுள்ளன, உறுப்பினர் செயலாளரால் அங்கீகரிக்கப்படவில்லை.

இந்தச் சூழலில், எம்பி சிவி சண்முகத்திற்கு எதிராகத் தலைவரால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் நவம்பர் 11, 2025 அன்று டிஜிபி-க்கு அனுப்பப்பட்ட கடிதம் ஆகியவை சட்டப்படி செல்லத்தக்கவை அல்ல என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குற்றவியல் நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கும் முன் மகளிர் ஆணையம் எந்த விசாரணையும் நடத்தவில்லை என்பதையும், ஜனநாயக மாதர் சங்கத் தலைவி ஜி. பிரமிளா மற்றும் செயலாளர் ஏ. ராதிகா அளித்த புகாரின் நகலை எம்பிக்கு வழங்கவில்லை என்பதையும் நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+