உறவினர்கள் அழுதால் பணம் அனுப்பாதீர்.. ஏஐ குளோனிங் வாய்ஸ் மோசடி குறித்து சைபர் கிரைம் வார்னிங்
சென்னை: உறவினர்கள் போல் ஏஐ குளோனிங் குரலில் பேசி பண மோசடியில் ஈடுபட்ட கும்பல் குறித்து சைபர் கிரைம் போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அன்றெல்லாம் பணத்தை அடித்து புடுங்கிக் கொண்டு சென்றனர். மேலும் வழிப்பறி, திருட்டு, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் அரங்கேறின. இவை தற்போதும் நடந்து வருகிறது.

ஆனால் ஹைடெக்காக நடந்து வருகிறது. அதாவது ஒரு செல்போனில் பேசியபடியே பணத்தை அபேஸ் செய்யும் ஆசாமிகள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். வெளிமாநிலத்தில் இருந்து பேசும் நபர்கள், ரேண்டமாக ஒரு நம்பருக்கு போன் செய்வர்.
அவர்களிடம் தாங்கள் இந்த வங்கியில் இருந்து பேசுவதாகவும் தங்களுடைய ஏடிஎம் கார்டு பிளாக் செய்யப்பட்டுவிட்டதாகவும் அந்த எண்ணை கூறினால் உடனே ரிலீஸ் செய்வதாகவும் இல்லாவிட்டாலும் தங்களால் பணமே எடுக்க முடியாது என்றும் கதை அளப்பர். இதை நம்பாமல் ஆவது ஆகட்டும் என சொல்வோர் நிறைய பேர் உண்டு.
ஆனால் அப்பாவிகள் சிலர் ஏடிஎம்மில் உள்ள எண்ணை கூறி பணத்தை இழந்திருக்கவும் செய்துள்ளார்கள். இதுகுறித்து புகார் அளித்தாலும் பணம் திரும்பி கிடைப்பது சந்தேதகம்தான். அது போல் "நீங்கள் மின்கட்டணம் செலுத்தவில்லை. தற்போது நாங்கள் சொல்லும் எண்ணுக்கு பணம் செலுத்துங்கள். இல்லாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும்" என அச்சுறுத்துவார்கள்.
ஆனால் அந்த வாடிக்கையாளர்கள் "பணம் செலுத்தியாகிவிட்டது" என சொன்னாலும் "இன்னும் எங்களுக்கு வரவில்லை. அது உங்கள் கணக்கில் ஏற இரு நாட்கள் ஆகும். இப்போது பணத்தை செலுத்துங்கள், ஒரு வேளை நீங்கள் ஏற்கெனவே கட்டியிருப்பது எங்கள் அக்கவுண்டுக்கு வந்ததும் நீங்கள் செலுத்திய பணத்தை திருப்பி கொடுக்கிறோம்" என்பார்கள்.
இதனால் கரண்ட் கட்டாகிவிடுமோ என எண்ணி பணத்தை பலர் செலுத்தி ஏமாந்துள்ளனர். இது குறித்து தமிழக காவல் துறை அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. தற்போது டெக்னாலஜி வளர வளர, மோசடிகளும் ஹைடெக்காக இருக்கிறது. ஏஐ வந்தாலும் வந்தது, இதை கெட்டதற்காகவே நிறைய பேர் பயன்படுத்துகிறார்கள்.
இந்த ஏஐ குளோனிங் டெக்னாலஜியில் உறவினர்கள் பேசுவது போல் பேசி பண மோசடியில் ஈடுபடுவதாக சைபர் கிரைம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது நம் நெருங்கிய உறவினர் பேசுவது போலவே அந்த குரல் இருக்கும். அவர்கள் அழுதுக் கொண்டே எதற்காகவாவது பணத்தை உடனே அனுப்பு என்பார்கள். நாமும் அவசரம் ஆச்சே என்று நினைத்த உடனே பணத்தை அனுப்பினால் அது மோசடி நபருக்கு சென்றுவிடும்.
பிறகு உறவினரிடம் விசாரித்தால்தான் தெரியும். அவர்கள் போன் செய்தார்களா இல்லையா என்று! இதனால் எதையும் நேரில் போய் பார்க்காமல் வெறும் குரலை மட்டுமே நம்பி பணத்தை செலுத்தாதீர்கள் என சைபர் கிரைம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications