வங்க கடலில் அசானி புயல்... அந்தமான் தீவுகளில் மீன்பிடித்தல், சுற்றுலா நடவடிக்கைகளை மேற்கொள்ள தடை!
சென்னை: வங்க கடலில் அந்தமான் நிக்கோபர் தீவுகள் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது அசானி புயலாக உருவாகி உள்ளது. இதனையடுத்து அந்தமான் தீவுகளில் மீன்பிடித்த, சுற்றுலா சார்ந்த நடவடிக்கைகளை இன்று மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

வங்க கடலில் உருவான அசானி புயல் குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்கள் தொகுப்பு:
1. அந்தமான் தீவுகளில் போர்ட் பிளேயருக்கு மேற்கே 380 கி.மீ. தொலைவில் அசானி புயல் மையம் கொண்டிருக்கிறது.
2. அசானி புயலானது வடமேற்கே நகர்ந்து அடுத்த 24 மணிநேரத்தில் கிழக்கு மத்திய வங்க கடலில் வலுவடையும்.
3. வடமேற்கு திசையில் மணிக்கு 16 கி.மீ. தொலைவில் இது நகருகிறது.
4. ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்கே 970 கி.மீ மையம் கொண்டிருக்கிறது.
5. ஒடிஷாவின் பூரியில் இருந்து தென்கிழக்கே 1020 கி.மீ. தொலைவில் அசானி புயல் மையம் கொண்டுள்ளது.
6. அசானி புயல் மையம் கொண்டுள்ள நிலையில் ஒடிஷாவில் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது.
7. அசானி புயல் மையம் கொண்டிருப்பதால் மத்திய வங்க கடல் பகுதியில் நாளையும் நாளை மறுநாளும் மணிக்கு 100 கி.மீ வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசும்.
8. கிழக்கு மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளுக்கு இன்று மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளை மற்றும் செவ்வாய்க்கிழமையன்று மத்திய வங்க கடல் பகுதிகக்கு மீனவர்கள் மீன்பிடிகக் செல்ல கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
9. அந்தமான் நிக்கோபர் தீவுகளில் இன்று மீன்பிடித்தலுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தமான் நிக்கோபர் தீவுகளில் இன்று கடல்சார் சுற்றுலா நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications