டிட்வா புயல்.. சென்னையில் எதிர்பார்த்த மழை பெய்யவில்லை.. அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் அப்டேட்!
சென்னை: டிட்வா புயல் காரணமாக சென்னை, கடலூர் மற்றும் விழுப்புரம் பகுதிகளில் எதிர்பார்த்த அளவிற்கு மழை பெய்யவில்லை என்று அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஆனாலும் புயலின் அடுத்தக் கட்ட தாக்கம் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் என்று கூறிய அவர், இந்த புயல் காரணமாக பெய்த கனமழையால் 3 பேர் உயிரிழந்ததாக தெரிவித்தார்.
வங்கக்கடலில் உருவாகி இருக்கும் டிட்வா புயல் சென்னைக்கு 180 கிமீ தூரத்திற்கு தெற்கு திசையில் மையம் கொண்டுள்ளது. இந்த டிட்வா புயல் முதலில் 7 கிமீ வேகத்தில் நகர்ந்து வந்த சூழலில், தற்போது 5 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சென்னை உட்பட தமிழ்நாட்டின் 18 மாவட்டங்களில் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் பேரிடர் மேலாண்மை குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மாநில பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு மையத்தில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பேசுகையில், சென்னை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் புயலின் திசை, வேகம் மற்றும் அமைப்பு மாறியதால், எதிர்பார்த்த அளவிற்கு மழை பெய்யவில்லை. ஆனாலும் புயலின் அடுத்தக்கட்ட தாக்கம் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.
டிட்வா புயலால் பெய்து வரும் கனமழை காரணமாக தமிழ்நாட்டில் இதுவரை 3 பேர் உயிரிழந்திருக்கின்றனர். தூத்துக்குடி மற்றும் தஞ்சாவூரில் தலா ஒருவர் சுவர் இடிந்து உயிரிழந்துள்ளனர். மயிலாடுதுறையில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்திருக்கிறார். அதேபோல் தமிழ்நாட்டில் மொத்தமாக 56 ஆயிரம் ஹெக்டேட் அளவிலான விளை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
புயலின் அடுத்தக்கட்ட தாக்கம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று மதியம் புதிய அறிவிப்பு வெளியிடும். அதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகங்கள் மேலும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். பொதுமக்கள் வதந்திகளை நம்பாமல் அரசு சார்பாக வெளியிடப்படும் அறிவிப்புகளை மட்டும் பின்பற்ற வேண்டும்.
அதேபோல் தமிழ்நாடு முழுவதும் 38 நிவாரண மையங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அதில் 2,393 பேர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன. புயல் எப்படி நகர்ந்தாலும் எங்களுக்கு மக்களின் பாதுகாப்பே முதன்மையானது என்று தெரிவித்திருக்கிறார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications