ஃபனி புயலால் சென்னைக்கு பாதிப்பு ஏற்படுமா? எங்கு கரையை கடக்கும்.. வானிலை மையம் என்ன சொல்கிறது?
வங்கக் கடலில் உருவாக இருக்கும் ஃபனி புயல் பெரும்பாலும் சென்னைக்கு அருகில் கரையை கடக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.
சென்னை: வங்கக் கடலில் உருவாக இருக்கும் ஃபனி புயல் பெரும்பாலும் சென்னைக்கு அருகில் கரையை கடக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.
தமிழகத்தில் தற்போது கோடைகாலம் நடைபெற்று வருகிறது என்று சொன்னால் யாரும் கண்டிப்பாக நம்ப மாட்டார்கள் ஆம் கோடை மழை லேசாக பெய்து விட்டு சென்றுவிடும் என்று நினைத்தவர்களுக்கு தற்போது புயல் ஒன்று காத்துக் கொண்டு இருக்கிறது.
வங்கக் கடலில் இலங்கைக்கு கிழக்கே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை நேரம் செல்ல செல்ல வலுவடைந்து கொண்டே செல்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்னும் 36 மணி நேரத்தில் புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதற்கு ஃபனி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

என்ன செய்யும்
இந்த புயல் எங்கு கரையை கடக்கும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. ஆனால் இது பெரும்பாலும் தமிழகத்தில்தான் கரையை கடக்கும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். தமிழகத்தில் இந்த வாரத்தில் இந்த புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.

சென்னை அருகே
அதேபோல் ஃபனி புயல் சென்னை அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள். ஒருவேளை இந்த புயல் சென்னையில் கரையை கடந்த மிக கடுமையான மழை அங்கு பெய்ய வாய்ப்புள்ளது. மெரினா, பெசன்ட் பகுதிகளில் மிக கடுமையான காற்று வீச வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

ஆனால் என்ன
சென்ற முறை கஜா புயல் வந்த போது, அந்த புயல் ராமநாதபுரம் அருகே கரையை கடக்கும் என்று கூறினார்கள். ஆனால் கஜா புயல் யாரும் எதிர்பார்க்காத வகையில் டெல்டா மாவட்டங்கள் பக்கம் சென்றது. பட்டுக்கோட்டை, தஞ்சையை சூறையாடிய பின்பே கரையை கடந்தது. அதேபோல் இதுவும் கூட வழி மாற வாய்ப்புள்ளது.

என்ன வாய்ப்பு
அந்த புயலை போலவே இதுவும் வேறு பகுதியில் வழி மாறி சென்று கரையை கடக்க வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள். அதனால்தான் தற்போது முன்னெச்சரிக்கையாக தமிழகம் முழுக்க ரெட் அலர்ட் விடப்பட்டு இருக்கிறது. புயல் எங்கு கரையை கடக்கும் என்று தெரியாததால் இந்த அலர்ட் விடப்பட்டுள்ளது.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications