வர்தா புயல் அளவுக்கு சென்னையில் பாதிப்பை ஏற்படுத்துமா கஜா? எத்தனை கி.மீ வேகத்தில் காற்று வீசும்?
Recommended Video

சென்னை: கஜா புயல் காரணமாக நவம்பர் 14 மற்றும் 15ம் தேதிகளில், சென்னை உட்பட தமிழகத்தின் வட பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் வர்தா புயல் அளவுக்கு இதன் தாக்கம் இருக்குமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுபெற்று புயலாக மாறி, வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. கஜா என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த புயல் வரும் 15ம் தேதி நாகை மற்றும் சென்னை நடுவே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2016ம் ஆண்டு டிசம்பர் மாதம், வர்தா புயல் சென்னையில் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 130 கி.மீ வேகத்தில் புயல் வீசியது. இதனால் பலர் பாதிக்கப்பட்டனர். சென்னையில் கன மழை பெய்தது.

சென்னையில் பாதிப்பு
மின்சாரம் இல்லாமல் சென்னை நகரம் இருளில் மூழ்கியது. பலத்த காற்று மற்றும் மழையால், 3 பெண்கள் உள்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர். அப்போது முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வம், புயல் மீட்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் சிறப்பாக ஈடுபட்டார் என்ற பாராட்டையும் பெற்றார். இருப்பினும் புயலின் வீரியம் அதிகமாக இருந்ததால், பாதிப்பை தவிர்க்க முடியவில்லை.

வர்தா அளவுக்கு இருக்காது
வர்தா புயல் அளவுக்கு கஜா புயல் தீவிரமாக இருக்காது என்று வானிலை அதிகாரிகள் கூறுகிறார்கள். வர்தா புயலின்போது மணிக்கு 130 கி.மீ வேகத்தில் சென்னையில் காற்று வீசியது. ஆனால், கஜா புயல் அந்த அளவுக்கு வேகமாக இருக்காது. மணிக்கு 80 கி.மீ முதல் 100 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு எச்சரிக்கை
வர்தா புயல் அளவுக்கு இது தீவிரம் இல்லை என்றபோதிலும், 80 கி.மீ வேகத்திற்கு மேல் காற்று வீசும் என்பது உறுதி என்பதால், மக்கள் வரும் 15ம் தேதி வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று வானிலை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

புயல் இருக்கும் இடம்
இன்று காலை, 5.30 மணி அளவில், சென்னையில் இருந்து வடகிழக்கே, 740 கிலோ மீட்டர் தொலைவில், புயல் வங்கக் கடலில் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் மணிக்கு 6 கி.மீ வேகத்தில் நாகை-சென்னை நடுவேயான பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது. வரும் 15ம் தேதி கஜா புயல், கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்ப்டுகிறது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications