திடீரென மூன்று மடங்கு வேகமெடுத்த கஜா புயல்! சென்னையிலிருந்து 690 கி.மீ தூரத்திற்கு வந்தது
Recommended Video

சென்னை: கடலில் கஜா புயல் பயணிக்கும் வேகம் காலையில் குறைந்திருந்த நிலையில் மதியம் மும்மடங்கு அதிக வேகத்தில் வந்து கொண்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறி, தமிழகம் நோக்கி நகர்ந்து வந்து கொண்டுள்ளது. இந்த புயலுக்கு கஜா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. கஜ என்று அழைப்போரும் உண்டு.
இன்று காலை நிலவரப்படி கஜா புயல் நாகைக்கு வடகிழக்கே 840 கி.மீ தொலைவில் நிலை கொண்டிருந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
[கஜா புயலுக்காக கூகுள் உருவாக்கி இருக்கும் சிறப்பு பக்கம்.. என்ன சிறப்பம்சம் தெரியுமா?]

கடலூர்-பாம்பன்
15ம் தேதி முற்பகலில், கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளது. இதனிடையே காலை 5.30 மணிக்கு, 7 கி.மீ வேகத்தில் கடலில் பயணித்து கொண்டிருந்த கஜா புயல், 7 மணியளவிலான நிலவரப்படி மணிக்கு 5 கி.மீ வேகத்திற்கு குறைந்தது. இதன்பிறகு அது மணிக்கு 4 கி.மீ வேகமாக குறைந்தது.

மூன்று மடங்கு வேகம்
ஆனால், இன்று மதியம், அந்த வேகம் மும்மடங்கு அதிகரித்தது. ஆம்.. மணிக்கு 12 கி.மீ வேகத்தில் அந்த புயல், தெற்கு மற்றும் தென்மேற்கு திசை நோக்கி நகர்ந்து வந்தபடி உள்ளது.

சென்னையிலிருந்து 690 கி.மீ
இன்று மதியம் 3 மணி நிலவரப்படி, கஜா புயல், நாகையிலிருந்து, 790 கி.மீ தொலைவிலும், சென்னையிலிருந்து 690 கி.மீ தொலைவிலும் உள்ளது. கஜா புயலின் வேகத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கமும், அதன் பாதையில் ஏற்படும் மாற்றமும், வானிலை ஆய்வு மைய அதிகாரிகளுக்கே தலைவலியை ஏற்படுத்துவதாகத்தான் உள்ளது.

திசை மாறியது
கஜா புயல் நேற்று காலை நிலவரப்படி, நாகை மற்றும் சென்னை நடுவே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாலையில் அது திசை மாறி பாம்பன் மற்றும் கடலூர் நடுவே கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications