கஜா புயலுக்காக கூகுள் உருவாக்கி இருக்கும் சிறப்பு பக்கம்.. என்ன சிறப்பம்சம் தெரியுமா?
கஜா புயல் குறித்து விவரங்களை தெரிவிக்க வசதியாக கூகுள் சிறப்பு பக்கம் ஒன்றை உருவாக்கி உள்ளது.
Recommended Video

சென்னை: கஜா புயல் குறித்து விவரங்களை தெரிவிக்க வசதியாக கூகுள் சிறப்பு பக்கம் ஒன்றை உருவாக்கி உள்ளது.
கஜா புயல் தமிழகத்தை நோக்கி வேகமாக வந்து கொண்டு இருக்கிறது. கஜா புயல், இன்று தீவிர சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கஜா புயல் பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பாற்றும் வகையில், தேசிய பேரிடர் மீட்பு படையினர் தமிழகத்திற்கு விரைந்து இருக்கிறார்கள். இதன் வேகம் நிமிடத்திற்கு நிமிடம் கூடிக்கொண்டே செல்கிறது.
[கஜா புயல்.. சென்னைக்கு பெரிய ஆபத்து இல்லை.. 7 மாவட்டங்களுக்கு புயல் அலெர்ட்]

கூகுள் உதவுவது வழக்கம்
பொதுவாக உலகில் எந்த பகுதியில் பெரிய அளவில் இயற்கை சேதங்கள் வந்தாலும் கூகுள் தொழில்நுட்ப ரீதியாக மக்களுக்கு உதவும். கடந்த சில வருடங்களுக்கு முன் மழை வெள்ளத்தில் உயிர் சேதங்களை தவிர்க்கும் வகையில் முன்கூட்டியே மக்களுக்கு உதவும் வகையில் சில பக்கங்களை கூகுள் உருவாக்கி வருகிறது. அதாவது ஒரு இயற்கை பேரிடர் குறித்து மக்களுக்கு அனைத்து விவரங்களையும் முன்கூட்டியே தெரியப்படுத்தும் வகையில் கூகுள் பக்கங்களை உருவாக்கி வருகிறது.

கஜா புயல்
இந்த நிலையில் தற்போது கஜா புயலுக்கு கூகுள் சிறப்பு பக்கம் உருவாக்கி உள்ளது. gaja storm என்று கூகுளில் சர்ச் செய்தால் முதல் பதிலாக கூகுள் பக்கம்தான் திறக்கும். அதே சமயம் மக்கள் '' https://bit.ly/2DziHab '' என்ற பக்கத்திற்கு சென்றும் அந்த தகவல்களை பெறலாம். கூகுள் இதுகுறித்து வழங்கும் தகவல்களை நேரடியாக பெற முடியும்.

முக்கிய தகவல்
இந்த பக்கத்தில் கஜா புயல் குறித்த அடிப்படை தகவல்கள் அடங்கி இருக்கும். அதாவது கஜா புயல் எப்படிப்பட்டது, கஜா புயல் எங்கே இருக்கும், கஜா புயல் எப்போது கரையை கடக்கும், கஜா புயல் எந்த வேகத்தில் வருகிறது உள்ளிட்ட அடிப்படை தகவல்கள் இதில் அடங்கி இருக்கும். இது மக்களுக்கு பெரிய அளவில் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வேறு என்ன
அதேபோல் இந்த பக்கத்தில் கஜா புயல் தொடர்பான செய்திகளும் அடங்கி இருக்கும். அதாவது செய்தி சேனல்களின் வந்த செய்திகளும் இதில் அடங்கி இருக்கும். மேலும் புயலில் இருந்து எப்படி காப்பது உள்ளிட்ட தகவல்கள் அடங்கி இருக்கும்.முக்கியமான கஜா புயல் டிவிட்டுகளும் இதில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications