சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இன்று மாலை உருவாகிறது மாண்டஸ் புயல்.. டிசம்பர் 9ஆம் தேதி அதீத கனமழை.. ரெட் அலர்ட்!

Google Oneindia Tamil News

சென்னை: வங்கக் கடலில் நிலவியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தமானது மாண்டஸ் புயலாக இன்று மாலை உருவாகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் கடந்த 5ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக இருந்து பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று மாலை வலுப்பெற்றது.

இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக இன்று உருவாகும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த புயலுக்கு மாண்டஸ் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதை ஐக்கிய அரபு நாடுகள் பரிந்துரைத்துள்ளது.

வட தமிழத்தை நெருங்கும் புயல்..சமாளிக்க ஏற்பாடுகள் தயார்..அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் வட தமிழத்தை நெருங்கும் புயல்..சமாளிக்க ஏற்பாடுகள் தயார்..அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்

தென்மேற்கு வங்கக் கடல்

தென்மேற்கு வங்கக் கடல்

இது தென்மேற்கு வங்கக் கடலை நாளை வந்தடையும் என்றும் மேற்கு வடமேற்கில் நகர்ந்து தமிழகம், புதுவை மற்றும் அதனையொட்டியுள்ள தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை அடுத்த 48 மணி நேரத்தில் வந்தடையும் என வானிலை மையம் கணித்துள்ளது. தமிழகம், புதுவையில் இன்று மிதமான மழை பெய்யும். இன்று நள்ளிரவு முதல் மழை அதிகரிக்கும்.

எத்தனை மாவட்டங்கள்

எத்தனை மாவட்டங்கள்

சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், செங்கல்பட்டு கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்யக் கூடும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது. ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

ரெட் அலர்ட்

ரெட் அலர்ட்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய 8 மாவட்டங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதியிலும் நாளை மறுநாள் அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சென்னை, கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களுக்கு சென்றுள்ளனர்.

 புயல் கூண்டு எச்சரிக்கை

புயல் கூண்டு எச்சரிக்கை

அது போல் இந்த புயல் புதுவை அருகே கரையை கடக்கும் என்பதால் புதுவைக்கு இரு பேரிடர் மீட்புகுழுவினரும் காரைக்காலுக்கு ஒரு குழுவும் சென்றுள்ளது. மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தென் மண்டல வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரனுடன் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு நேற்றைய தினம் ஆலோசனை நடத்தியிருந்தார். வெள்ள அபாயம் உள்ள கரையோர பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் மக்கள் தயாராக இருக்கவும் அதே நேரம் அச்சப்பட தேவையில்லை என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அது போல் புதுவை, காரைக்காலிலும் 1ஆம் எண் கொண்ட புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

English summary
Cyclone Mandous is to be formed today evening at South West Bay of Bengal. 13 districts are issued Red alert warning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X