Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோந்தா புயலால் திருவள்ளூர், சென்னை செங்கல்பட்டில் விடிய விடிய வெளுக்கும் மழை.. கனமழைக்கு வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: 'மோந்தா' புயல் இன்று ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகில் கரையை கடக்க உள்ளது. எனவே திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேபோல் மோந்தா புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 110 கி மீ வேகத்தில் சூறை காற்று வீசும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.

சென்னையில் தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த 26-ந்தேதி இரவு 'மோந்தா' புயல் நிலவியது. நேற்று காலை 11.30 மணி அளவில் 17 கிலோ மீட்டர் வேகத்தில் வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டு வந்தது. குறிப்பாக சென்னைக்கு கிழக்கே 480 கிலோ மீட்டர் தொலைவில் நகர்ந்து கொண்டிருந்தது.

weather Thiruvallur Chengalpattu Chennai

இது தீவிர புயலாக வலுப்பெற்று ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே இன்று இரவு மாலை கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும்போது, 90 முதல் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.

புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். மேலும் திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்று 'ஆரஞ்சு' எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே அங்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டுக்கு இடைப்பட்ட பகுதிகளில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் உள்பட வட தமிழ்நாடு கடல் பகுதிகள் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதேபோல் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு உள்பட வட தமிழக கடற்கரையோர மாவட்டங்களுக்கு தரைக்காற்று 30 முதல் 35 கி.மீ. வரையில் வீசும். அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது.

இன்று மோந்தா புயல் காரணமாக சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேபோல், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் கோவை மாவட்ட புறநகர் மலைப்பகுதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

மேற்கு தொடர்ச்சி மலைகளான தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் உள்ள மீனவர்கள் வருகிற 30-ந்தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளோம்.
தமிழக மீனவர்கள் கடலில் இருந்து உடனே கரைக்கு திரும்புமாறும் அறிவுறுத்தி உள்ளோம். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் கொரட்டூர் பகுதியில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்று கூறினார்.

இதனிடையே 'மோந்தா' புயல் காரணமாக சென்னையை அடுத்த தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், பெருங்களத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் விட்டு விட்டு கனமழை பெய்தது. இதன் காரணமாக தாம்பரம் சானடோரியம், குரோம்பேட்டை, பல்லாவரம் ஜி.எஸ்.டி. சாலைகளில் உள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றதால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், அலுவலகம் செல்வோர் அவதிக்குள்ளானார்கள். இதேபோல் ஆலந்தூர், பூந்தமல்லி, ஆவடி, திருவொற்றியூர், எண்ணூர் உள்பட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது. இதனிடையே மோந்தா புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று காலை இன்று காலை வரை விடிய விடிய மழை பெய்தபடியே இருந்தது.

வானிலை ஆய்வு மையம் புயல் எச்சரிக்கை விடுத்திருப்பதால் சென்னை, எண்ணூர் காமராஜர், காட்டுப்பள்ளி, நாகப்பட்டினம், கடலூர், புதுச்சேரி, காரைக்கால், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார், பாம்பன் ஆகிய 9 துறைமுகங்களிலும் 2-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+