ஓபிஎஸ்சுக்கு அந்த விஷயத்தை நினைவுபடுத்துகிறேன்! ஜெயக்குமார் பதிலடி! அதிமுகவில் வலுக்கும் மோதல்!
சென்னை: சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை எதிர்த்துதான் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் தர்மயுத்தம் நடத்தினார் என்பதை நினைவுப்படுத்த வேண்டியது எனது கடமை என முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் முடிவு செய்வர் என மதுரையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பட்டினம்பாக்கத்தில் டி ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் சசிகலாவை கட்சியில் சேர்க்கக் கூடாது என ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்தில் ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.
சசிகலாவை கட்சியில் சேர்க்கக் கூடாது என கூறியவரே ஓபிஎஸ்தான். அது போல் அவருடன் அதிமுகவினர் தொடர்பு வைத்திருக்கக் கூடாது என்றும் அவர்தான் கூறினார். அவ்வாறு தொடர்பு வைத்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சசிகலாவையும் அவரை சார்ந்தவர்களையும் எதிர்த்துதானே ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார். இதை அவருக்கு நினைவுப்படுத்த வேண்டிய கடமை எனக்கு உள்ளது. சூரியன் திசைமாறி உதித்தாலும் சசிகலாவுடன் இணைந்து செயல்படமாட்டேன் என்றார் ஜெயக்குமார்.
-
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு












Click it and Unblock the Notifications