ராஜ ராஜ சோழன் குறித்து தரக்குறைவாக விமர்சனம்.. பா.ரஞ்சித்துக்கு காங்கிரஸ் தலித் பிரிவு ஆதரவு
Recommended Video
சென்னை: சோழ மன்னர் ராஜ ராஜ சோழன் குறித்து தரக்குறைவாக விமர்சனம் செய்த இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு காங்கிரஸ் தலித் பிரிவு ஆதரவு தெரிவித்துள்ளது.
அட்டக்கத்தி படம் மூலம் திரைத்துறையில் இயக்குநராக அறிமுகமானவர் பா.ரஞ்சித். மெட்ராஸ் படம் மூலம் வெற்றி இயக்குநராக தடம் பதித்த ரஞ்சித், ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா உள்ளிட்ட படங்களை இயக்கி பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.
இதைத்தொடர்ந்து அவ்வப்போது ஜாதிக் குறித்து பேசி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி திருப்பனந்தாளில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய பா.ரஞ்சித் ராஜ ராஜ சோழனை கடுமையாக விமர்சித்தார்.

தரக்குறைவாக விமர்சனம்
ராஜ ராஜ சோழனை அவன் இவன் என்று மரியாதை இல்லாமல் பேசியதோடு, அயோக்கியன் என்றும் கூறினார். மேலும் 400 பெண்களை தேவதாசிகளாக வைத்திருந்தது ராஜ ராஜ சோழன்தான் என்றும் தரக்குறைவாக விமர்சித்தார்.

பாய்ந்த வழக்குகள்
அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பா.ரஞ்சித் மீது திருப்பனந்தாள், கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட நகரங்களில் உள்ள காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பா.ரஞ்சித் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என கூறப்பட்டது.

வரலாற்று உண்மை
இதைத்தொடர்ந்து நேற்று முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அதில் ராஜ ராஜ சோழன் குறித்து தான் பேசியது வரலாற்று உண்மை என்றும் ரஞ்சித் தெரிவித்திருந்தார். உமர் பாரூக்கின் செந்தமிழ்நாட்டு சேரிகள் என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள தகவல்களையே தான் பேசியதாகவும் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
|
துணை நிற்கிறோம்
இந்நிலையில் இயக்குநர் பா ரஞ்சித்துக்கு காங்கிரஸின் தலித் பிரிவு ஆதரவு தெவித்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் தலித் பிரிவு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்தில், பா.ரஞ்சித் உங்களின் சாதியத்துக்கு எதிரான போராட்டம் சிறப்பானது. நாங்கள் உங்களுக்கு ஆதரவாக துணை நிற்கிறோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications