நீங்கள் காளை மாடு அல்ல தமிழ்நாடே போராடுவதற்கு.. கனகராஜ்-வர்ஷினிபிரியா படுகொலை குறித்து பா ரஞ்சித்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாம் ராஜராஜனுக்கு ஆதரவு-எதிராகவும் திரண்டபோதுதான், பாராளுமன்றத்தில் தமிழ்வாழ்க என முழக்கமிட்டபோதுதான், அனல்மின் கழிவை கொட்டக்கூடாது என்று எதிர்த்து கொண்டிருக்கும்போதுதான், தண்ணீர் இல்லாமல் நாம் தந்தளித்து கொண்டிருக்கும்போதுதான், கனகராஜ்_வர்ஷினிபிரியா ஆணவ படுகொலை நடந்தேறியதாக இயக்குனர் பா.ரஞ்சித் வேதனை தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுபாளையத்தில் உள்ள மார்க்கெட்டில் கூலித்தொழிலாளி கனகராஜ்(22). இவரும் அதே ஊரைச் சேர்ந்த மூர்த்தி மகள் வர்ஷினிபிரியா(16) என்பவரும காதலித்து வந்துள்ளார்கள். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதல், இந்த காதலை அறிந்த கனகராஜின் அண்ணன் வினோத்துக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 25ம் தேதி தனது தம்பி கனகராஜ் மற்றும் அவரது காதலி வர்ஷினி பிரியா ஆகியோரை வினோத் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினார்.

dalit girl; victim of honour killing in coimbatore: pa ranjith worry

இந்த கொடூர சம்பவத்தில் கனகராஜ் உயிரிழந்தார். காயமடைந்த வர்ஷினி நேற்று முன்தினம் நள்ளிரவில் சிகிச்சை பலம் இன்றி உயிரிழந்தார். இவரையும் ஆணவ படுகொலை செய்த கனகராஜின் அண்ணன் வினோத் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த படுகொலை சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இயக்குனர் பா.ரஞ்சித், "நாம் ராஜராஜனுக்கு ஆதரவு-எதிராகவும் திரண்டபோதுதான், பாராளுமன்றத்தில் தமிழ்வாழ்க! முழக்கமிட்டபோதுதான், அனல்மின் கழிவை கொட்டக்கூடாது என்று எதிர்த்து கொண்டிருக்கும்போதுதான், தண்ணீர் இல்லாமல் நாம் தந்தளித்து கொண்டிருக்கும்போதுதான், #கனகராஜ்_வர்ஷினிபிரியா உங்கள் படுகொலை நிகழ்ந்தேரியது. கனகராஜ் இறந்த பின்பும் #வர்ஷினிபிரியா நீ எதை நினைத்து உன் உயிரை பிடித்து கொண்டு இத்தனை நாள் இருந்தாய்? முடிவில் ஏமாற்றமடைந்து இறந்து விட்டாய் !? , ஆம் நீங்கள் காளை மாடு அல்ல தமிழ் நாடே உங்கள் படுகொலையை கண்டித்து திரண்டு போராடுவதற்க்கு! என குறிப்பிட்டுள்ளார்.

பா. ரஞ்சித் தனது இன்னொரு டுவிட்டில் "தமிழ் உணர்வுக்கு எதிரானவர்களை எதிர்ப்பது போல! அணுக்கழிவு எதிர்ப்பை போல! தண்ணீர் பற்றாக்குறை பற்றி பேசுவதை போல! இந்துதுவத்தை எதிர்ப்பதை போல! சுயசா'தீ' பற்று எனும் பெரூம் தீமையையும் நாம் எப்போது ஒன்றிணைந்து எதிர்க்க போகிறோம் ?!!" என கேள்வி எழுப்பி உள்ளார்.

திரைப்படங்களை தாண்டி பொதுவெளியிலும் தலித் மக்களுக்காக குரல் கொடுத்துவரும் பா.ரஞ்சித், ஆணவ படுகொலைகளுக்கு எதிராக வலிமையான எதிர்ப்புகளை தொடந்து பொதுவெளியில் பதிவு செய்து வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+