Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திக்.. திக்.. திக்.. இப்பவே புளியை கரைக்குதே.. டிசம்பர் முடிய ஜஸ்ட் 4 நாள் இருக்கு.. இதுல மீம்ஸ் வேற

டிசம்பர் மாதம் முடிவடையும் நிலையில், இணையத்தில் மீம்ஸ்கள் உலா வருகின்றன

Subscribe to Oneindia Tamil

சென்னை: வீசும் புயலையும், கொட்டும் மழையையும் கடந்து, "டிசம்பர் மாதம் மீம்ஸ்"கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றன.. இந்த மாதம் முடிந்து, புது வருடம் தொடங்க இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், வருட கடைசியை, திக் திக் நிமிடங்களுடன், அதேசமயம், கலகல மீம்ஸ்களுடனும் கடந்து வருகிறார்கள் தமிழக மக்கள்..!!

முன்பெல்லாம் டிசம்பர் மாதம், தமிழர்கள் எதிர்பார்த்த மாதம்... காரணம், மழை பொழியும்... நாடே செழிக்கும்.. விவசாயம் பெருகும்.. அறுவடையை மக்கள் எதிர்நோக்கி காத்திருக்க துவங்குவார்கள்..
மீனவர்கள் குஷியுடன் மீன்பிடிக்க போவார்கள்.. கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்கள் கொண்டாட்டத்தில் திளைத்து போவார்கள்.. ஐயப்ப பக்தர்களின் பக்தி, வெடவெடக்கும் குளிரிலும், விறைத்து காணப்படும்.. மார்கழி மாத பஜனைகள், பக்தி கூட்டங்கள் என இனிமையாக ஒவ்வொரு நாளையும் கழித்து, ஆர்வத்துடன் புது வருட நாளை வரவேற்க தயாராகி கொண்டிருந்தோம்.

வயிற்றில் புளி

வயிற்றில் புளி

ஆனால், இப்போதெல்லாம் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் வந்தாலே, அடிவயிற்றில் நெருப்பை அள்ளி கொட்டியது போல ஆகிவிடுகிறது தமிழக மக்களுக்கு.. ஆரம்பத்தில் சாதாரணமாக கடந்து சென்று கொண்டிருந்த டிசம்பர் மாதத்தை கலக்கத்துடன் கடக்க செல்ல வைத்ததே, சுனாமி நிகழ்வுதான். அதுவரை சுனாமி என்ற பெயரை கூட நாம் கேள்விப்பட்டதில்லை.. கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட நில நடுக்கம், சுனாமியாக நமக்கு அறிமுகமானது.. மொத்தமாக இரண்டரை லட்சம் பேரை காவு வாங்கிய நிலையில், நம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மட்டும் 6 ஆயிரம் பேர் இறந்தார்கள்.. சென்னை, கடலூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் பல்லாயிரம் கோடி இழப்பீடுகளை தந்துவிட்டு போனது இந்த சுனாமி.

டேஞ்சர்

டேஞ்சர்

அதேபோல சிலரது கணிப்புகள், டிசம்பர் மாதத்தில்தான் இணையத்தில் வெளியாகி நடுங்க வைத்துவிடும்.. அந்தவகையில், நாஸ்ட்ராடாமஸ் கணித்த கணிப்பை சொல்லலாம்.. 2022ல் இறுதியில் பூமியை அடுத்தடுத்து விண்கற்கள் தாக்க போகிறது.. முழுக்க முழுக்க நெருப்பால் ஆன விண்கற்கள் பூமியை தாக்கும் என்றும், இதனால் மிகப்பெரிய சேதங்கள் ஏற்படும்.. 2022 இறுதியில் வானத்தில் அரிய நிகழ்வு ஒன்று நடக்க போகிறது, ஒரு கிரகத்தில் இருந்து உடையும் சிறுகோள், அதிக வேகத்தில் வந்து பூமியை அடுத்த வருடம் தாக்க உள்ளது.. கடலில் வலுவான அலைகள் எழுந்து சுனாமியை உருவாக்கும், அதனால், கடலுக்கு அருகில் அமைந்துள்ள நாடுகளின் கரையோரப் பகுதி முற்றிலுமாக அழிந்து, லட்சக்கணக்கில் மக்கள் உயிரிழப்பார்கள்.. அடுத்த 60 நாட்களுக்குள் பெரிய ஆபத்துகள் நமக்கு வரப்போகிறது.. எல்லாரும் சாக போறாங்க" என்று கடந்த 2 மாதங்களுக்கு முன்பு எழுதியிருந்ததை இங்கு நினைவுகூர வேண்டி உள்ளது.

எம்ஜிஆர்

எம்ஜிஆர்

அதேபோல நிறைய பிரபலங்கள் இந்த டிசம்பர் மாதத்தில் இறந்துள்ள நிலையில், அதுகுறித்த கவலையும் மக்களுக்கு இருக்கத்தான் செய்கிறது.. பெரியார் இறந்தது கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஒரு நாள் முன்புதான்.. முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நம்மை விட்டு பிரிந்ததும் இந்த டிசம்பர் மாதத்தில்தான்.. மற்றொரு முதல்வர் ஜெயலலிதா இறந்ததும் டிசம்பர் மாதம்தான்... தலைவர்களின் இறப்புகளால் ஒருவித கலக்கம் வந்தாலும், இயற்கை சீற்றங்கள்தான், டிசம்பர் மாதங்களில் நம் வயிற்றில் புளியை கரைத்து விடுகின்றன.

வயிற்றில் நெருப்பு

வயிற்றில் நெருப்பு

ஆதிகாலத்திலிருந்தே இயற்கை சீற்றங்கள் பூமியில் பல மாற்றங்களை நடத்தி வந்தவண்ணமிருக்கின்றன. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில்தான் பேரழிவுகளின் தாக்கம் மிகவும் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு நாளும் உலகில் ஏதேனும் ஓர் இடத்தில் இயற்கை சீற்றங்களின் தாக்கம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இவற்றிற்கு காரணம், சுற்றுச்சூழல் பாதிப்புகள், திட்டமிடப்படாத வளர்ச்சி, மக்கள் தொகைப் பெருக்கம் உள்ளிட்டவையே. இதனால் நிலநடுக்கம், நிலச்சரிவு, சூறாவளி, வெள்ளம், சுனாமி, வறட்சி, தீ விபத்து போன்ற பல்வேறு இயற்கை பேரழிவுகள் நிகழ்கின்றன.

2010, நவம்பர் 6-ம் தேதி வந்த ஜல் புயலில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 70,000 - க்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். 2011 தானே புயல்தான் தமிழகத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய முதல் அதிதீவிரப் புயலாகும். 45-க்கும் அதிகமானோர் இறந்துவிட்டார்கள்.. பலரின் வாழ்வாதாரத்தை முற்றிலும் அழித்துச் சென்றது இந்தப் புயல்.. 2012ல் வந்த நீலம் புயல், 20-க்கும் அதிகமான மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன... 75-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 2015-ல் ஏற்பட்ட வெள்ளம், 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சென்னையை புரட்டி போட்டது.. 18 லட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்... வெள்ளத்தினால் 420-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

மிஸ்ஸிங்

மிஸ்ஸிங்

2016-ல் வந்த வர்தா புயலால், 45-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். சென்னை மாநகரமே புயலில் தவித்தது. இந்தப் புயலின்போதுதான், எண்ணூர் துறைமுகத்தில் 10-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், நாகையில் 8-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டிருந்தது.. இதற்கு பிறகு 2017ல் மணிக்கு 185 கி.மீ வேகத்தில் கிளம்பி வந்த ஓகி புயல், கன்னியாகுமரியையும், கேரளாவையும் தலைகீழாக புரட்டியது. கடலுக்குச் சென்ற குமரி, தூத்துக்குடி நாகை மாவட்ட மீனவர்களில் 27 பேர் உயிரிழந்த நிலையில், 170-க்கும் அதிகமானோர் காணாமல் போயினர். இலங்கை, தமிழ்நாடு, கேரளா என்று மொத்தம் 300-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.. 650-க்கும் மேற்பட்டவர்கள் கதி என்ன ஆனது என்றே தெரியவில்லை..

கோழி கோழிகள்

கோழி கோழிகள்

2018-ல் வீசிய கஜா புயல் காரணமாக, 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்... தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டதுடன், 30,000 ஹெக்டேரில் இருந்த தென்னை மரங்கள், 32,706 ஹெக்டேர் விவசாயப் பயிர்கள் பெருத்த சேதமடைந்தன... 1.04 லட்சம் கால்நடைகளும் பறவைகளும் துடிதுடித்து உயிரிழந்தன.. பலரது வாழ்வை காவு கொண்டுவிட்டது இந்த கஜா புயல். மேற்கண்ட அத்தனை புயல்களும், டிசம்பர் மாதம் வந்தவைகள் என்பதால், தமிழக மக்களுக்கு இனம்புரியத பீதி சூழ்ந்து விடுகிறது..

சாக போறாங்க

சாக போறாங்க

உயிர்பலிகளுக்கு காரணம், தெய்வ குற்றம் என்கிறார்கள் சிலர்.. முன்னோர்கள் சாபம் என்கிறார்கள் பலர்.. ஆனால், சுற்றுச்சூழலுக்குரிய பாதுகாப்பையும், முக்கியத்துவத்தையும் முறையாக கொடுக்காமல் இயற்கையை அழித்ததால்தான், இப்படியான சீற்றங்கள் மனிதனை காவு கொண்டுவிடுகிறது என்பதே யதார்த்த உண்மை.. மனிதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் அழிவுகளே, அவனது அழிவுக்கும் காரணமாகிவிடுகிறது.. அதைவிட முக்கியம், சுற்றுசூழலை காக்க வேண்டும் என்பதை உணர வைக்கவே, ஒவ்வொரு டிசம்பர் மாதமும் காட்டமான "பாடம்" நடத்திவிட்டு போனாலும், மனிதன்தான் இன்னமும் பிடிவாதமாக, பாடம் கற்க மறுக்கிறான்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+