வேளச்சேரி ஷாக்.. பாட்டியுடன் சென்ற 4 வயது குழந்தை பட்டப்பகலில் காரில் கடத்தல்.. இறுதியில் ட்விஸ்ட்!
சென்னை: வேளச்சேரியில் பட்டப்பகலில் 4 வயது குழந்தை காரில் கடத்தப்பட்ட துணிகரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சைக்கிளில் சென்ற சாந்தி என்பவரை வழிமறித்து அவரது பேத்தியை மர்ம நபர்கள் காரில் கடத்திச் சென்றனர்.
சென்னை வேளச்சேரி, ஏ.ஜி.எஸ் காலனியைச் சேர்ந்தவர் சாந்தி. இவருடைய 4 வயது பேத்தி அட்சயா. இன்று (ஜூன் 12) சாந்தி தனது பேத்தி அட்சயாவை சைக்கிளில் அமரவைத்துக் கொண்டு வெளியில் அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது, அவர்கள் சென்ற வழியில் திடீரென ஒரு கார் வந்து சாந்தியின் சைக்கிளை மறித்து நின்றது. காரில் இருந்து இறங்கிய நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல், கண் இமைக்கும் நேரத்திற்குள் சைக்கிளில் இருந்த குழந்தை அட்சயாவைப் பறித்துக் கொண்டு காரில் ஏறி தப்பியோடியது. சாந்தி சத்தம் போட்டு அலறியும், மக்கள் நடமாட்டம் உள்ள அந்தப் பகுதியில் பட்டப்பகலிலேயே இந்தக் கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
குழந்தை கடத்தப்பட்டது குறித்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
குழந்தை கடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. இது குடும்பப் பகையினால் நடந்த கடத்தலா? அல்லது பணம் பறிப்பதற்காக மர்ம கும்பல் இந்தத் துணிகரச் செயலில் ஈடுபட்டதா? என்ற கோணங்களில் ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படைகள் அமைத்து கடத்தல்காரர்களை வலைவீசித் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, போலீசார் நடத்திய விசாரணையில், குடும்பத் தகராறில் தனது மருமகளான குழந்தையின் தாயே குழந்தையை கடத்தியதாக சாந்தி கூறியுள்ளார். கடத்தலில் ஈடுபட்ட பெண்ணை தொடர்புகொண்ட போலீசார், அவரை குழந்தையுடன் நேரில் ஆஜராகுமாறு கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையின் முக்கியப் பகுதியான வேளச்சேரியில், அதுவும் பட்டப்பகலில் பாட்டியிடம் இருந்து குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.
-
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி












Click it and Unblock the Notifications