"உயர் ஜாதியினரிடம்" 41%.. ஆனால் முஸ்லிம்களிடம் 8% சொத்துக்கள்தான் உள்ளன: டேட்டா சொல்லும் உண்மை
சென்னை: லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் கட்சி நாட்டு மக்களின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் அதிகாரம். மக்களிடம் உள்ள சொத்துகளை இஸ்லாமியர்களுக்க காங்கிரஸ் முயற்சிப்பதாக பிரதமர் மோடி பேசியது பெரும் விவாதத்தை கிளப்பி உள்ளது. இந்நிலையில் தான் இந்தியாவில் உள்ள மொத்த சொத்துகளில் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் என யார் யாரிடம் எவ்வளவு மதிப்பிலான சொத்துகள் உள்ளன? என்பது பற்றிய விபரத்தை இங்கு பார்ப்போம்.
அதன்படி இந்தியாவில் உள்ள மொத்த சொத்துகளில் உயர்ஜாதி இந்துக்களிடம் தான் அதிகளவில் சொத்து உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக ஓபிசி இந்துக்களிடம் அதிகப்படியான சொத்து இருக்கிறது. முஸ்லிம் மக்களிடம் வெறும் 8 சதவீதம் சொத்துகள் மட்டுமே உள்ளன. இது குறைவு என்றாலும் உயர்ஜாதி மற்றும் ஓபிசி இந்துக்களை ஒப்பிடும்போது குறைவு என்றாலும், எஸ்சி, எஸ்டி மக்களை விட அதிகமாகும்.

இந்தியாவில் லோக்சபா தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. முதற்கட்ட தேர்தல் கடந்த 19 ம் தேதி 102 தொகுதிகளுக்கு நடந்து முடிந்தது. 2வது கட்ட தேர்தல் என்பது வரும் 26ம் தேதி நடைபெற உள்ளது. மொத்தம் 89 தொகுதிகளில் 26ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் கடந்த 21ம் தேதி பிரதமர் மோடி பேசினார்.
பிரதமர் மோடி பேச்சு: அங்கு பிரதமர் மோடி பேசியது பெரும் விவாதத்தை கிளப்பியது. அதாவது பிரதமர் மோடி, ‛‛காங்கிரஸ் ஆட்சியில் நாட்டு மக்களின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று கூறினார்கள். 2006ல் நாட்டு வளர்ச்சியின் பலன்களை சமமாக பகிர்ந்து கொள்ள சிறுபான்மையினருக்கே முதல் உரிமை என்று கூறினார்கள். நாட்டு மக்களின் சொத்துகளை காங்கிரஸ் பங்கீடு செய்து முஸ்லிம்களுக்கு வழங்கும் என்றனர். பெண்களின் தங்கத்தை எடுத்து அதனை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. அப்படி பார்த்தால் தாய்மார்கள், சகோதரிகளின் தாலி கூட மிஞ்சாது. நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு போக வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா?’’ என்று கேள்வி கேட்டார்.
காங்கிரஸ் புகார்: இதன்மூலம் பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்தார். பிரதமர் மோடி மதரீதியாக பேசி மக்களிடம் வெறுப்பை உண்டாக்குவதாக எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றனர். மேலும் பிரதமர் மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் பிரதமர் மோடியின் இந்த பேச்சால் இந்தியாவில் எந்த ஜாதி, மதத்தை சேர்ந்த மக்களிடம் அதிக சொத்து உள்ளது? என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. அதோடு சிறுபான்மையினராக உள்ள முஸ்லிம்களிடம் எவ்வளவு சொத்து உள்ளது? எனவும் பலரும் தேட தொடங்கி உள்ளனர்.
2020ம் ஆண்டு அறிக்கை: அதன்படி பார்த்தால் இந்தியாவில் குறிப்பிட்ட ஜாதி மற்றும் மதத்தை சேர்ந்த மக்களிடம் எவ்வளவு சொத்து உள்ளது என்பது குறித்த விபரம் இன்று வரை தெளிவாக இல்லை. இருப்பினும் கூட கடந்த 2020ம் ஆண்டு ஒரு முக்கிய தகவல் வெளியிடப்பட்டது. அதாவது ஐசிஎஸ்எஸ்ஆர்(ICSSR)-ஆல் அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சி அமைப்பான இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் தலித் ஸ்டடீஸ் சார்பில் இந்தியாவில் செல்வங்கள் தொடர்பான உரிமையிலில் மக்கள் குழுக்கள் இடையே உள்ள சமத்துவமின்மை தொடர்பான ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டது.
ஆய்வறிக்கை சாரம்சம்: இந்த ஆய்வு அறிக்கை என்பது தேசிய சாம்பிள் சர்வே அலுவலகம் (National Sample Survey Office or NSSO) சார்பில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து இந்திய கடன் மற்றும் முதலீடு சர்வே (All India Debt and Investment Survey or AIDIS) மற்றும் இந்திய பொருளாதார கணக்கெடுப்பு விபரங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது. அந்த ஆய்வறிக்கையின்படி பார்த்தால் இந்தியாவில் பழங்குடியினர், தலித்கள் மற்றும் முஸ்லிம்களின் சொத்து மதிப்பு என்பது குறைவாக உள்ளது தெரியவந்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் முஸ்லிம்களை விட தலித் மற்றும் பழங்குடியினரின் சொத்துகள் குறைவாக உள்ளது. மாறாக உயர்ஜாதி இந்துக்கள் முதலிடத்திலும், ஓபிசி இந்துக்கள் 2வது இடத்திலும் உள்ளனர்.
டாப்பில் உயர்ஜாதி இந்துக்கள்: அதன்படி இந்தியாவின் மொத்த சொத்துகளில் 41 சதவீதம் உயர் ஜாதி இந்துக்களிடம் உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக 31 சதவீதம் சொத்துகள் ஓபிசி இந்துக்கள் வசம் உள்ளது என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவின் மொத்த சொத்துகளில் 8 சதவீதம் மட்டுமே முஸ்லிம்களிடம் உள்ளது. அதேபோல் இந்தியாவில் மொத்த சொத்துகளில் எஸ்சி மக்களிடம் 7.3 சதவீதமும், எஸ்டி மக்களிடம் 3.7 சதவீதம் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த சொத்து மதிப்பு: மேலும் ஏஐடிஐஎஸ் (AIDIS)அறிக்கையில்ஒவ்வொரு பிரிவினருக்கும் கிராமம் மற்றும் நகர்புறங்களில் உள்ள சொத்துகளின் தனித்தனி மதிப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கிராமப்புறங்களில் மொத்தம் ரூ. 1 லட்சத்து 60 ஆயிரத்து 600 பில்லியன் (ஒரு பில்லியன் என்பது ரூ.100 கோடி) மதிப்பிலான சொத்துகளும், நகர்புறங்களில் ரூ.1 லட்சத்து 91 ஆயிரத்து 753 பில்லியன் மதிப்பிலான சொத்துகள் என மொத்தம் ரூ.3 லட்சத்து 58 ஆயிரத்து 354 பில்லியன் மதிப்பிலான சொத்துகள் உள்ளன.
உயர்ஜாதி இந்துகளின் சொத்து: இதில் உயர்ஜாதி இந்துக்களிடம் ரூ.42 ஆயிரத்து 338 பில்லியன் மதிப்பிலான சொத்துகள் நகர்புறங்களிலும், ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 57 பில்லியன் மதிப்பிலான சொத்துகள் கிராமப்புறங்களிலும் உள்ளது. மொத்தம் இவர்களிடம் ரூ.1 லட்சத்து 46 ஆயிரத்து 394 பில்லியன் மதிப்பிலான சொத்துகள் உள்ளன. அதேபோல் ஓபிசி இந்து மக்களிடம் கிராமப்புறங்களில் ரூ.62 ஆயிரத்து 952 பில்லியன் மதிப்பிலான சொத்துகளும், நகர்புறங்களில் ரூ.47 ஆயிரத்து 568 பில்லியன் மதிப்பிலான சொத்துகள் என்று மொத்தம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்து 520 பில்லியன் சொத்துகள் உள்ளன.
RCB or CSK.. பெங்களூரில் கேள்வியால் மடக்கிய நிருபர்.. தோனியை இழுத்து அண்ணாமலை கூறிய சுவாரசிய பதில்!
எஸ்சி - எஸ்டி சொத்து மதிப்பு: எஸ்சி எனும் தலித் மக்களுக்கு இந்தியாவில் கிராமப்புறங்களில் ரூ.16 ஆயிரத்து 163 பில்லியன் மதிப்பிலான சொத்துகளும், நகர்புறங்களில் ரூ.9 ஆயிரத்து 971 பில்லியன் மதிப்பிலான சொத்துகள் என மொத்தம் ரூ.26 ஆயிரத்து 134 பில்லியன் மதிப்பிலான சொத்துகள் உள்ளன. எஸ்டி எனும் பழங்குடியினருக்கு கிராமத்தில் ரூ.9544 பில்லியன் மதிப்பிலான சொத்துகளும், நகர்புறங்களில் ரூ.3,724 பில்லியன் மதிப்பிலான சொத்துகள் என மொத்தம் ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 268 பில்லியன் மதிப்பிலான சொத்துகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் சொத்து மதிப்பு: மேலும் முஸ்லிம்களுக்கு கிராமப்புறங்களில் உள்ள சொத்துகளின் மதிப்பு என்பது ரூ.14 ஆயிரத்து 379 பில்லியன், நகர்புறங்களில் ரூ.14,329 பில்லியன் என மொத்தம் ரூ.28,707 பில்லியன் மதிப்பிலான சொத்துகள் உள்ளன. இதில் குறிப்பிடப்படாத மற்றவர்கள்களிடம் கிராமம் மற்றும் நகர்புறங்களை சேர்த்து மொத்தம் ரூ.33 ஆயிரத்து 329 பில்லியன் மதிப்பிலான சொத்துகள் இருக்கின்றன.
11 மடங்கு அதிகம்: இந்த டேட்டாவின் படி பார்த்தால் உயர்ஜாதி இந்துக்களிடம் மொத்தம் ரூ.1 லட்சத்து 46 ஆயிரத்து 394 பில்லியன் மதிப்பிலான சொத்தகள் உள்ளன. முஸ்லிம்களிடம் மொத்தம் ரூ.28 ஆயிரத்து 707 பில்லியன் மதிப்பிலான சொத்துகளும், எஸ்டி மக்களிடம் ரூ.13, 268 பில்லியன் சொத்துகளும் உள்ளன். இதில் உயர்ஜாதி இந்துக்கள் மற்றும் எஸ்டி மக்களின் சொத்துகளை ஒப்பிட்டு பார்த்தால் எஸ்டி மக்களின் சொத்துகளை விட 11 மடங்கு உயர்ஜாதி இந்துக்களிடம் சொத்துகள் குவிந்து உள்ளது தெரியவருகிறது.
சராசரி சொத்து மதிப்பு: மேலும் இந்த சொத்து மதிப்புகளின் அடிப்படையில் பார்த்தால் இந்தியாவில் ஒரு வீட்டுக்கான சராசரி சொத்து மதிப்பு என்பது ரூ.15.04 லட்சமாக இருக்கும். அதேவேளையில் இந்து, முஸ்லிம், எஸ்சி, எஸ்டி என்று பிரித்து பார்த்தால் சராசரி சொத்து மதிப்பு என்பது உயர்ஜாதி இந்துக்களுக்கு அதிகரிக்கிறது. மாறாக மற்றவர்களுக்கு சராசரி சொத்து மதிப்பு என்பது குறைகிறது.
காங்கிரசா தாலியை பறிக்கும்? இல்லை! எங்கள் அம்மா நாட்டுக்காக தாலியை இழந்தவர்: பிரியங்கா காந்தி பதிலடி
எஸ்சிக்கு குறைவு: அதாவது ஒரு உயர்ஜாதி மக்களிடம் உள்ள சொத்துகளின் அடிப்படையில் உயர்ஜாதி இந்து குடும்பத்தின் சராசரி சொத்து மதிப்பு என்பது ரூ. 27.73 லட்சமாக உள்ளது. அதேபால் ஓபிசி இந்துக்களில் ஒரு குடும்பத்தின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 12.96 லட்சமாகும், முஸ்லிம் குடும்பங்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 9.95 லட்சமாகும், எஸ்டி குடும்பத்தின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 6.13 லட்சமாகும், எஸ்சி குடும்பத்தினர் சராசரி சொத்து மதிப்பு ரூ. 6.12 லட்சமாகவும் இருப்பதாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications