மாமியாரை கழுத்தறுத்து கொன்ற மருமகன்... மாமனாரை எரித்துக் கொன்ற மருமகள் - சென்னைக்கு அருகில் பயங்கரம்

மனைவியை குடும்பம் நடத்த அனுப்ப மறுத்த மாமியாரை கழுத்தை அறுத்து கொலை செய்து உள்ளார் ஒரு மருமகன், கணவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்த மாமனாரை எரித்து கொலை செய்து விட்டு சிறைக்கு சென்றுள்ளார் ஒரு ம

Subscribe to Oneindia Tamil

சென்னை: குடும்ப பிரச்சினைகளை பேசி தீர்த்து சமாதானமாகப்போனது அந்தக்காலம் இப்போதெல்லாம் வெட்டு குத்து கொலை என இறங்கி விட்டனர்.

தன்னுடன் வாழ அனுப்பாத மாமியாரை கழுத்தறுத்து மருமகன் கொலை செய்தது ஒருபக்கம் இருக்க தன்னை விட்டு விட்டு கணவருக்கு இன்னொரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து வைத்த மாமனாரை எரித்து கொலை செய்துள்ளார். இந்த இரண்டு சம்பவங்களுமே சென்னை மிக அருகில் வண்டலூரிலும் திருத்தணியிலும் நடந்துள்ளன.

Daughter in law who killed her father in law near the Chennai

வரதட்சணை கொடுமையால் மாமியாரும் மாமனாரும் மருமகளை தீ வைத்து எரித்து கொலை செய்வார்கள். ஆனால் நெமிலி கிராமத்தைச் சேர்ந்த காயத்ரியோ தனது மாமனாரை தீ வைத்து எரித்து கொன்றுள்ளார். தனது கணவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்து விட்டார் என்ற கோபம்தான்.

எரித்துக்கொல்லப்பட்ட நபரின் பெயர் சபாபதி. 60 வயதான சபாபதி தனது மகன் பிரபாகரனுக்கு கடந்த 2008ஆம் ஆண்டு மாதவரத்தைச் சேர்ந்த காயத்ரியை திருமணம் செய்து வைத்தார். திருமணம் நடந்த நாளில் இருந்தே ஓயாத சண்டை சச்சரவு ஏற்பட்டது. இருந்தாலும் தாம்பத்யத்தின் அடையாளமாக ஒரு மகன் பிரிந்தும் ஒற்றுமை ஏற்படவில்லை. இருவருமே பிரிந்து வாழ்ந்தனர். காயத்ரி தனது அம்மா வீட்டிற்கு சென்று விட்டார்.

மகனின் வாழ்க்கை வீணாகிவிட்டதே என்று வருத்தப்பட்ட சபாபதியோ திண்டிவனத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை மறுமணம் செய்து வைத்தார். புது மனைவியுடன் விருந்துக்கு சென்று விட்டார் பிரபாகரன். கணவரின் இரண்டாவது திருமணம் பற்றி தனது மாமனாரிடம் நியாயம் கேட்டார் காயத்ரி. அதற்கு சரியான பதில் சொல்லவில்லை.

Daughter in law who killed her father in law near the Chennai

கோபத்தோடு கிளம்பி போன காயத்ரி மீண்டும் நெமிலியில் உள்ள மாமனார் வீட்டிற்கு தனது அம்மா கலைவாணியுடன் வந்தார். அப்போது சபாபதி கட்டிலில் உறங்கிக்கொண்டிருந்தார். சத்தம் போடாமல் வீட்டிற்குள் போன காயத்ரி மண்ணெய் கேனை எடுத்து வந்து மாமனார் மேல் ஊற்றினார். கண் திறந்து பார்த்த சபாபதி சத்தம் போட்டார். எழமுயன்ற அவரை எழ விடாமல் இருவரும் தடுத்தனர்.

அதற்குள் தீக்குச்சியை கொளுத்திப்போட்ட மாமனார் எரிவதை பார்த்து விட்டு ஓடிவிடவே, சபாபதி சத்தம் போட்டு அக்கம் பக்கத்தினரை அழைத்தார்.

அவர்கள் மீட்டு திருத்தணி மருத்துவமனைக்கு கொண்டு போயும் பயனில்லை தீ காயம் அதிகம் அதிகம் இருக்கவே மரணமடைந்து விட்டார். அந்த வேதனையிலும் தனது மரணத்திற்குக் காரணம் மருமகள் காயத்ரிதான் என்று மரணவாக்கு மூலம் கொடுத்து விட்டே உயிரிழந்தார்.

மாமனாரை எரித்துக்கொன்ற காயத்ரியையும், அதற்கு உடந்தையாக இருந்த அவரது அம்மா கலைவாணியையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மாமியாரை கொன்ற மருமகன்

மருமகளை மாமனார் எரித்துக்கொன்றது அந்தக்காலம், மாமனாரை மருமகள் எரித்துக்கொள்வது இந்தக்காலம் இதேபோல வண்டலூரில் மாமியாரின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளான் மருமகன். கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் ஜெயசித்ரா என்பதாகும். இவர் தனது மகள் சுஷ்மிதாவிற்கு காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமாரை திருமணம் செய்து வைத்திருந்தார். கணவருடன் வாழ பிடிக்காத சுஷ்மிதா அம்மா வீட்டிற்கு வந்து விட்டார்.

மாமியார் வீட்டுக்கு வந்த சதீஷ் குமார் மனைவியை கூப்பிட்டும் போகவில்லை. மகளை தன்னுடன் அனுப்ப மறுத்த மாமியாரை நள்ளிரவில் கழுத்தை அறுத்து கொன்று விட்டு தப்பிட்டார். மண்ணிவாக்கத்தில் மாமியாரை கொன்றுவிட்டு தப்பி ஓடிய மருமகனை போலீசார் தேடி வருகின்றனர். குடும்ப பிரச்சினைக்காக கொலை செய்வது இப்போதெல்லாம் சர்வசாதாரணமாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+