Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குளமான கண்கள்.. பார்த்ததும் உருகிய தோனி.. போட்டிக்கு பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.. தல தலதான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று சிஎஸ்கே டெல்லி போட்டிக்கு பின் கேப்டன் தோனி களத்தில் நடந்துகொண்ட விதம் சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லிக்கு எதிரான ஐபிஎல் ப்ளே ஆப் ஆட்டத்தில் வென்று 2021 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே பைனல் சென்றுள்ளது. கடந்த சீசனில் மோசமாக ஆடி சிஎஸ்கே ப்ளே ஆப் செல்லும் வாய்ப்பை முதல் அணியாக இழந்தது.

ஆனால் இந்த முறை சிஎஸ்கே முதல் அணியாக பைனல் சென்றுள்ளது. நேற்று முதலில் ஆடிய டெல்லி 172 ரன்கள் எடுத்தது. இதன்பின் களமிறங்கிய சிஎஸ்கே எளிதாக 173 ரன்கள் எடுத்து வென்றது.

சிறுமி

சிறுமி

நேற்று இந்த மேட்சில் தோனி பேட்டிங் செய்து கொண்டு இருந்த போது ரசிகர்கள் இடத்தில் அமர்ந்து இருந்த குட்டி சிறுமியும், அவளின் குட்டி அண்ணனும் கவனம் ஈர்த்தனர். தோனியின் பேட்டிங்கை மிகவும் ஆர்வமாக நகத்தை கடித்தபடி இரண்டு குட்டீஸும் பார்த்துக்கொண்டு இருந்தனர். பெரிய திரையில் ஓவர்களுக்கு இடையில் இவர்களின் முகம் காட்டப்பட்டதை தோனியும் கவனித்தார்.

குட்டீஸ்

குட்டீஸ்

சிஎஸ்கே வெற்றிபெற வேண்டும் என்று வேண்டியபடி இவர்கள் அமர்ந்து இருந்தனர். இந்த நிலையில்தான் கடைசியில் தோனி பவுண்டரி அடித்து வெற்றிபெற்றதும், எழுந்து குதித்து வெற்றியை கொண்டாடாமல் இரண்டு பேருமே ஆனந்த கண்ணீர் விட்டனர். பொதுவாக சிறுவர், சிறுமியர் இப்படி கிரிக்கெட் வெற்றிக்கு எமோஷனல் ஆகி கண்ணீர்விட மாட்டார்கள்.

தோனி பவுண்டரி

தோனி பவுண்டரி

வெற்றிபெற்றுவிட்டோம் என்ற சந்தோஷத்தில் ஜாலியாக குதிப்பார்கள். ஆனால் இவர்கள் இருவரும் பெரியவர்கள் போல ஆனந்த கண்ணீர் விட்டது மைதானத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சிஎஸ்கேவின் வெற்றி மீது, தோனியின் ஆட்டம் மீதும் எவ்வளவு அன்பு, நம்பிக்கை வைத்து இருந்தால் அவர்கள் கண்ணீர்விட்டு இருப்பார்கள்..! இதை பார்த்ததும் தோனியும் ஒரு நொடி திகைத்து போனார்.

திகைத்து போனார்

திகைத்து போனார்

இவ்வளவு சிறிய வயதில் கண்ணீர்விடும் அளவிற்கு சிஎஸ்கே வெற்றியை கொண்டாடுகிறார்களே என்று வியந்து போனார். பெவிலியன் திரும்பிய தோனி, குன்டஸ் இருவரும் இருந்த இடத்திற்கு கீழே சென்று கையை உயர்த்தி நன்றி தெரிவிப்பது போல சைகை காட்டினார். தோனி இப்படி அருகில் வந்து பேசியதை இரண்டு குட்டீஸும் நம்ப முடியாமல் திகைத்து நின்றனர்.

நன்றி

நன்றி

அப்போதுதான் தோனி இன்னொரு நம்ப முடியாத விஷயத்தை செய்தார். தனது கையில் இருந்த மேட்ச் பந்தில் கையெழுத்து போட்ட தோனி அதை அந்த குட்டீஸிடம் தூக்கி எறிந்தார். பந்தை லாவகமாக பிடித்த சிறுவன் அதை தனது அம்மாவிடம் கொண்டு சந்தோசமாக காட்டினார். அந்த சிறுமியும் கண்களில் தண்ணீர் பெருக சிரித்துக்கொண்டே தோனியை பார்த்து நன்றி கூறினார்.

கம்பேக்

கம்பேக்

தோனியின் கம்பேக் காரணமாக நேற்று மேட்ச் முடிந்த பின் மைதானமே மிகவும் நெகிழ்ச்சியாக காணப்பட்டது. சிஎஸ்கே நேற்று வெற்றிபெற்ற போது தோனியின் ஆட்டத்தை பார்த்து அவரின் மனைவியும் கண்ணீர்விட்டார். இந்த நிலையில்தான் சிறுவனிடம் பந்தை கொடுத்து தோனி நன்றி சொன்ன விதம் சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+