மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு.. அமைச்சர் செந்தில் பாலாஜி
சென்னை: தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் இன்னும் 1 கோடிக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் ஆதார் எண்ணை இணைக்காததால், ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டித்து தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் , ஆதார் அட்டை எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் உள்ளன. இவற்றை தவிர 22 லட்சம் விவசாய மின் இணைப்புகள், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் இருக்கின்றன.

ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்
தொழில் நிறுவனங்களை தவிர பிற அனைத்து மின் இணைப்புதாரர்களும் தங்களுடைய மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மின்சார வாரியம் தெரிவித்தது. இணையதளம் மூலமாகவும் நேரடியாகவும் ஆதார் எண்ணை இணைக்கலாம் என்று தெரிவித்த மின்சார வாரியம் நேரடியாக ஆதார் எண்ணை இணைக்க வசதியாக சிறப்பு முகாம்களையும் அமைத்தது.

2,811 சிறப்பு முகாம்கள்
தமிழகம் முழுவதும் உள்ள மின்சார அலுவலகங்களில் 2,811 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் நடந்து வந்தன. கடந்த மாதம் 15 ஆம் தேதி இந்தப் பணிகள் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வந்தது. மின்சார நுகர்வோர்கள் இந்த முகாம்கள் மூலமாகவும் ஆன்லைன் மூலமாகவும் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். பண்டிகை நாட்கள் தவிர ஞாயிறு உள்பட அனைத்து நாட்களிலும் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.

இன்னும் 1 கோடி பேர் இணைக்கவில்லை
இந்த நிலையில், ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு இன்றுடன் (டிச.31) நிறைவு அடைகிறது. இன்னும் 1 கோடிக்கும் மேற்பட்ட மின் இணைப்புதாரர்கள் தங்கள் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்று தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால், ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படுமா ? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்பதே மின் நுகர்வோர்களின் கருத்தாக உள்ளது.

மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு
இந்த நிலையில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படுவதாக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது: -மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால நீட்டிப்பு வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதனால் முதல்வரின் அனுமதி பெற்று மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு..
அதாவது வரும் ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 31 க்கு பிறகு மீண்டும் கால நீட்டிப்பு இருக்கும் என்ற நிலையில் இருந்துவிட வேண்டாம். வரும் ஜனவரி 31 ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைத்து விடுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து பேசுகையில், "தற்போது பிரிவு அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இனி அந்தந்த பகுதிகளுக்கே நேரடியாக சென்று சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலமாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.

மக்களின் கோரிக்கையை ஏற்று
கடந்த வாரம் கோவையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, "31 ஆம் தேதி வரை எவ்வளவு பேர் முழுமையாக இணைத்து இருக்கிறார்கள் என்ற விவரங்கள் பெற்ற பிறகு தமிழக முதல்வர் கவனத்திற்கு எடுத்துச்செல்வோம். அதன்பிறகு தேதியை நீட்டிப்பது தொடர்பாக முதல்வரின் உத்தரவை பெற்று அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும்" என்று கூறியிருந்தார். அதன்படியே மக்களின் கோரிக்கையை ஏற்று தற்போது மேலும் ஒரு மாதத்துக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications