இதுமட்டும்தான் பாக்கி.. மோடியின் அதிரடி.. அரசு ஊழியர்களுக்கு இந்த மாதமே வரப்போகும்.. அசத்தல் நியூஸ்
சென்னை: பல்வேறு மாநிலங்களில் மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்ட நிலையில் மத்திய அரசும் விரைவில் அகவிலைப்படியை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் சமீபத்தில்தான் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கம் உயர்ந்து கொண்டே இருக்கும். பணவீக்கம் காரணமாக பொருட்களின் விலை உயரும். இந்த விலை உயர்வை சமாளிக்க மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்த்தப்படும்.

இதைத்தான் அகவிலைப்படி உயர்வு என்பார்கள். வருடத்திற்கு இரண்டு முறை இப்படி அகவிலைப்படி உயர்த்தப்படும். ஜனவரி - ஜூன் மற்றும் ஜூலை - டிசம்பர் என்று இரண்டு கட்டமாக இந்த உயர்வு செய்யப்படும். இந்த அகவிலைப்படி பொதுவாக 3 - 6 சதவிகிதம் உயர்த்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகா: கர்நாடக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி விகிதத்தை 4% உயர்த்தி உள்ளது அம்மாநில அரசு. கர்நாடகா மாநிலத்தில் DA விகிதம் 31% இல் இருந்து 35% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது ஜனவரி 1, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளது.
உத்தர பிரதேசம்: மே மாதத்தில், உத்தரப் பிரதேச அரசும் தனது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு முறையே 4% DA மற்றும் DR உயர்வை ஏற்படுத்தியது. இதை ஜனவரி 1, 2023 முதல் வழங்க முடிவு செய்தது. இந்த உயர்வைத் தொடர்ந்து, ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான DA மற்றும் DR விகிதம் 38 லிருந்து முதல் 42% ஆக அதிகரித்துள்ளது.
ஹரியானா: ஏப்ரலில், ஹரியானா அரசு 7வது ஊதியக் குழுவின் ஊதிய மேட்ரிக்ஸின் படி சம்பளம் பெறும் மாநில ஊழியர்களுக்கு அகவிலைப்படி விகிதத்தில் 4% உயர்வு அறிவித்தது. ஹரியானா மாநிலத்தில் DA விகிதம் ஜனவரி 1, 2023 முதல் அடிப்படை ஊதியத்தில் 42% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஜார்கண்ட் - இமாச்சல பிரதேசம்: இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் மாநில அரசுகளும் ஏப்ரலில் அகவிலைப்படி உயர்வை அறிவித்தன. ஏப்ரல் மாதத்தில், ஜார்க்கண்ட் அரசு DA விகிதத்தை 34% இலிருந்து 42% ஆக உயர்த்தியது, ஹிமாச்சல் அரசாங்கம் 3% DA உயர்வை 31% லிருந்து 34% ஆக அறிவித்தது. ஹிமாச்சலில் டிஏ உயர்வு ஜனவரி 1, 2022 முதல் அமலுக்கு வந்தது. அதேசமயம் ஜார்க்கண்டில் டிஏ உயர்வு ஜனவரி 1, 2023 முதல் பொருந்தும்.

மத்திய அரசு: பல்வேறு மாநிலங்களில் மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்ட நிலையில் மத்திய அரசும் விரைவில் அகவிலைப்படியை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கும் மார்ச் மாதம் 23ம் தேதி அகவிலைப்படி 4 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டது.
அதுவரை 38% ஆக இருந்தது 42 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது. 7வது ஊதியக்குழுவின் படி ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும். அந்த வகையில் ஜனவரி - ஜூன் மற்றும் ஜூலை - டிசம்பர் என்று இரண்டு கட்டமாக இந்த உயர்வு செய்யப்படும்.
அடுத்த கட்ட அகவிலைப்படி உயர்வு பெரும்பாலும் இந்த மாதம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும்பாலும் முன்கூட்டியே.. அதாவது ஜூன் மாத இறுதியிலேயே இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள். அதற்கு முன்பாக ஏஐசிபிஐ குறியீட்டு எண்களை நாளை மத்திய அரசு வெளியிட உள்ளது.
இது அகவிலைப்படி உயர்வு தொடர்பான ரேங்கிங் ஆகும். இந்த ரேங்கிங் வைத்து அவகவிலைப்படி எந்த அளவிற்கு உயர்த்தப்படும் என்று யுகம் செய்ய முடியும். வரும் 31ம் தேதி இதற்கான அறிவிப்பு வெளியாகும் வாய்ப்புகள் உள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கம் உயர்ந்து கொண்டே இருக்கும். பணவீக்கம் காரணமாக பொருட்களின் விலை உயரும். இந்த விலை உயர்வை சமாளிக்க மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்த்தப்படும்.
இதைத்தான் அகவிலைப்படி உயர்வு என்பார்கள். வருடத்திற்கு இரண்டு முறை இப்படி அகவிலைப்படி உயர்த்தப்படும். ஜனவரி - ஜூன் மற்றும் ஜூலை - டிசம்பர் என்று இரண்டு கட்டமாக இந்த உயர்வு செய்யப்படும். இந்த அகவிலைப்படி பொதுவாக 3 - 6 சதவிகிதம் உயர்த்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications