"அம்மா" மறைந்து 2 ஆண்டு.. 5ம் தேதி நினைவு நாள்.. அஞ்சலி செலுத்த தயாராகிறது அதிமுக!
வருகிற 5-ம் தேதி ஜெயலலிதா 2-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
Recommended Video

சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 2ம் ஆண்டு நினைவு நாளையொட்டி டிசம்பர் 5ம் தேதி தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்த உள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
கடந்த முறை ஜெயலலிதாவின் ஓராண்டு நினைவு நாளின்போது அதிமுகவில் ஏகப்பட்ட குழப்பங்கள் நீடித்து வந்தன.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அண்ணா சிலையில் இருந்து அமைதி ஊர்வலம் நடத்தினர்.

நினைவிடம்
இந்த பேரணியானது வாலாஜா சாலை வழியாக, காமராஜர் சாலையில் மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் சென்று அங்கு அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.

ஜெ. தீபா
அதேபோல், மற்றொரு புறம் டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள், ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இதற்கு நடுவில், ஜெயலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, தன் பேரவை சார்பில் அஞ்சலி செலுத்தினார்.

வருகிற 5-ம் தேதி
ஜெயலலிதாவின் 2-வது வருட நினைவு தினமும் இதுபோலவே அனுசரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் 5ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அண்ணா சிலையில் இருந்து ஊர்வலமாக சென்று ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

உறுதிமொழி ஏற்பு
இதனை தொடர்ந்து அன்று காலை 9.30 மணிக்கு ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்பு நடைபெறுகிறது. எனவே அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்க வேண்டும் என அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications