தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தாமதம்.. ஆனால் மாணவர்கள் படிப்பு கெடாது.. மாற்று ஏற்பாடு என்ன தெரியுமா?
சென்னை: தமிழகத்தில் பள்ளிகள் தாமதாக திறக்கப்படுவதன் காரணமாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வி ஆண்டில் ஒரு பாடத்திற்கு 4 மணி நேரம் பற்றாக்குறை ஏற்படும் அதை சமாளிக்கும் வகையில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சுமை ஏற்படாத வகையில் வகுப்புகள் நடைபெறும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டது. 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் 1ஆம் தேதியும் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் 5ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கோடை வெயில் சுட்டெரித்த காரணத்தால் பள்ளிகள் திறப்பு தள்ளி போனது. சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.

கோடை விடுமுறை முடிந்து வரும் 12ஆம் தேதி திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பாட புத்தகங்கள் வழங்குவது சீருடைகள் வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையும் நடைபெற்று வருகிறது.
நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் விடுமுறைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் ஊர் திரும்பத் தொடங்கியுள்ளனர். இதனிடையே இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிகள் தாமதாக திறக்கப்படுவதன் காரணமாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். மேலும், கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வி ஆண்டில் ஒரு பாடத்திற்கு 4 மணி நேரம் பற்றாக்குறை ஏற்படும். பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் பாடங்களை நடத்துவதற்கு ஏதுவாகவும் மாணவர்களுக்கு பாடச்சுமை இல்லாதபடியும், ஆசிரியர்கள் பயிற்சியில் பாதிப்பு ஏற்படாத வகையிலும் வகுப்புகள் நடத்தப்படும் என அவர் கூறினார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications