நாடு முழுக்க வீட்டு ஓனர்களுக்கு போன மெசேஜ்.. உயர் நீதிமன்றம் போட்ட உத்தரவு! வாடகைதாரர்களுக்கு ஹாப்பி
டெல்லி: டெல்லி உயர்நீதிமன்றம் வழக்கு ஒன்றில் தீர்ப்பில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21வது பிரிவின் கீழ் மின்சாரம் பெறுவது வாழ்வுரிமையின் ஒருங்கிணைந்த பகுதி எனத் தெளிவுபடுத்தியுள்ளது. நில உரிமையாளர் - வாடகைதாரர் மோதல் காரணமாக மின் விநியோகம் மறுக்கப்பட முடியாது என நீதிபதி மினி புஷ்கர்ணா அமர்வு உத்தரவிட்டு உள்ளது.
தனது வாடகை வீட்டில் நீக்கப்பட்ட மின்சார விநியோகத்தை மீண்டும் வழங்கக் கோரி ஒரு வாடகைதாரர் தாக்கல் செய்த மனுவே இந்த வழக்குக்கு அடிப்படை. நில உரிமையாளரிடமிருந்து ஆட்சேபனை இல்லா சான்றிதழ் (NOC) கேட்க வேண்டாம் என அம்மனுவில் கோரப்பட்டது. மின்சாரம் ஒரு அடிப்படைத் தேவை; வாழ்வுரிமையின் ஒருங்கிணைந்த பகுதி என நீதிமன்றம் இதில் திட்டவட்டமாகத் தெரிவித்தது.

ஏற்கனவே பல தீர்ப்புகளில் மின்சாரம் வாழ்வதற்கு அத்தியாவசிய அடிப்படை உரிமை, பிரிவு 21-ன் கீழ் பாதுகாக்கப்படுவதை நீதிமன்றங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. எந்த குடிமகனும் மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழ முடியாது என நீதிமன்றம் வலியுறுத்தி, உரிமையாளர் - வாடகைதாரர் மோதல் காரணமாக மின் விநியோகம் மறுக்கப்பட முடியாது என்று உத்தரவிட்டு உள்ளது.
வழக்கு பின்னணி
டெல்லியை சேர்ந்த மனுதாரர் 2016 ஆம் ஆண்டு முதல் அந்த வாடகை வீட்டில் வாழ்ந்து வருகிறார். வாடகைதாரருக்கும் நில உரிமையாளருக்கும் இடையே தகராறுகள் இருந்தன. இந்த தகராறில் அவர் அந்த வாடகை வீட்டின் மின்சாரத்தை துண்டித்துள்ளார். அதற்கு மீண்டும் மின் இணைப்பு கொடுக்க வீட்டு ஓனரின் அனுமதியை மின்சார அதிகாரிங்கள் கேட்டுள்ளனர்.
இன்னொரு பக்கம்.. வாடகைக்கு இருக்கும் நபரை வெளியேற்ற கூறி.. 2025 இல், அந்த நில உரிமையாளர் திஸ் ஹஜாரி நீதிமன்றத்தில் உடைமை மீட்பு, வாடகை பாக்கி, இடைக்கால லாபம், நிரந்தர தடை கோரி சிவில் வழக்கு தொடர்ந்தார்.
இன்னொரு பக்கம் அதே 2025 டிசம்பரில், வாடகைக்கு இருக்கும் அந்த நபர் தனையாக் மின் விநியோக நிறுவனத்திற்கு எதிராக எதிர் மனுவை தாக்கல் செய்தார். தனக்கு மின்சாரம் மறுக்கப்படுகிறது என்று மனுதாக்கல் செய்தார். நில உரிமையாளர்கள் வேண்டுமென்றே துண்டித்த தொடர்ச்சியான மின் மற்றும் நீர் விநியோகத்தை மீண்டும் வழங்க வேண்டும் என்று அம்மனுவில் கூறப்பட்டது.
மின்சாரம் துண்டிப்பு
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள் விஷால் சக்ஸேனா, மீனாட்சி கார்க், ராஷி அகர்வால் ஆகியோர், நவம்பர் 28, 2025 அன்று மின் விநியோக நிறுவனம் மின் விநியோகத்தைத் துண்டித்து மீட்டரையும் அகற்றியது.
இதையடுத்து மனுதாரர் நவம்பர் 28, 2025 அன்றே அனைத்து நிலுவை கட்டணத்தையும் செலுத்தியதாக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். வேறு தொகை செலுத்த வேண்டியதில்லை எனவும் குறிப்பிட்டனர். பணம் செலுத்திய பின் மின்சாரத்தை மீண்டும் இணைக்குமாறு கோரியபோது, மின் விநியோக நிறுவனம் வீட்டு ஓனரின் NOC-ஐ வலியுறுத்தியது.
மின் விநியோக நிறுவனத்திற்காக ஆஜரான வழக்கறிஞர்கள் ஷேரிக்கு ஹுசைன் மற்றும் கீர்த்தி கார்க், நில உரிமையாளர்களே பதிவு செய்யப்பட்ட நுகர்வோர் என்றனர். மின் கட்டண பாக்கி செலுத்தப்படாததே இணைப்பு துண்டிப்புக்குக் காரணம் என்றும் அவர்கள் வாதிட்டனர்.
மேலும், நில உரிமையாளர்களிடமிருந்து, சொத்தின் மூன்றாவது தளத்தில் மின் இணைப்பை மீண்டும் வழங்க வேண்டாம் என தகவல் கிடைத்ததாகவும் நிறுவனம் தெரிவித்தது. இந்த அறிவுறுத்தலாலேயே மனுதாரரின் இடத்திற்கு மின்சார இணைப்பு மீட்டெடுக்கப்படவில்லை என அவர்கள் விளக்கமளித்தனர்.
எந்த NOC-ஐயும் கோரக் கூடாது
வாதங்களைக் கேட்டபின் நீதிமன்றம், மின் விநியோக நிறுவனத்திற்கு ஏற்கனவே உள்ள மீட்டரில் இருந்து மின் இணைப்பை உடனடியாக வழங்க உத்தரவிட்டது. இந்த இணைப்புக்காக நில உரிமையாளர்களிடமிருந்து எந்த NOC-ஐயும் கோரக் கூடாது என்றும் தீர்ப்பளித்தது.
நில உரிமையாளர்கள் குத்தகைதாரருடன் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்றும், மனுதாரரின் மின்சார இணைப்பை மீட்டெடுப்பதில் எந்த இடையூறையும் ஏற்படுத்தக்கூடாது என்றும் நீதிமன்றம் தெளிவாக உத்தரவிட்டது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications