ஆட்டத்தை ஆரம்பித்த டெல்லி.. சென்னைக்கு ரகசியமாக வந்த மத்திய உளவு பிரிவு தலைகள்.. என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மத்திய உளவுத்துறை அதிகாரிகள் பலர் சென்னையில் முகாமிட்டு வருவதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுக - பாஜக கூட்டணியின் கோரிக்கையின் பெயரில் இவர்கள் சென்னையில் களமிறக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே ஆளும் திமுக அரசு, விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தனது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. உளவுத்துறை மூலம் கருத்துக்கணிப்பு நடத்தி, கட்சியின் தேர்தல் உத்திகளை வலுப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்தக் கருத்துக்கணிப்புகள், திமுகவின் வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்க உதவும், அத்துடன் பிரச்சாரங்களைச் சிறப்பாக வடிவமைக்கவும், மக்களுக்குச் சரியான வாக்குறுதிகளை வழங்கவும் துணைபுரியும்.

dmk m k stalin

இந்த ஆய்வின் முடிவுகள், திமுகவின் தேர்தல் வியூகங்களுக்கு வழிகாட்டி, வலுவான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும், வெற்றி வாய்ப்புகளை அதிகரிப்பதற்கும் உதவும். இந்தப் பணிகளுக்காக, உளவுத்துறை விரைவில் களமிறங்க உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்துள்ள நிலையில், இந்த கூட்டணிக்கு மக்கள் ஆதரவு எப்படி உள்ளது என்பது பற்றி ரிப்போர்ட் வழங்குவதற்காக சென்னையில் மத்திய உளவுத்துறை முகாமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

தி.மு.க அரசும் கள ஆய்வு

இதேவேளையில், இதேவேளையில், ஆளும் திமுக அரசும் தனது உளவுத்துறை மூலம் ஐந்து கட்டங்களாகக் கருத்துக்கணிப்புகளை நடத்தத் திட்டமிட்டுள்ளது. திமுக வட்டாரங்கள் மூலம் கிடைத்த தகவல்படி, இந்தக் கருத்துக்கணிப்புகள் விரைவில் தொடங்க உள்ளன.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். அண்மையில் பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது, தூத்துக்குடியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக முன்னாள் அமைச்சர்களுடன் மோடியைச் சந்தித்தார். அப்போது தனிப்பட்ட சந்திப்பு எதுவும் நடைபெறவில்லை.

எடப்பாடி பழனிசாமி - மோடி பேச்சு

இந்தச் சூழலில்தான் எடப்பாடி பழனிசாமிக்கும் மோடிக்கும் இடையே 10 நிமிடங்கள் தனிப்பட்ட உரையாடல் நடந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. தொலைபேசியில் சில முக்கிய விஷயங்கள் குறித்து இருவரும் பேசியுள்ளனர். குறிப்பாக, தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை குறித்து எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். அத்துடன், திமுக அமைச்சர்கள் மீதான வழக்குகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக, மூன்று திமுக அமைச்சர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்கள் மீதான வழக்குகளை விசாரிப்பது குறித்தும் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். திமுகவுக்கு எதிராக வியூகங்களை வகுக்க மத்திய உளவுத்துறையின் அறிக்கை தேவை என்றும் அவர் மோடியிடம் கோரியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன்பிறகே மத்திய உளவுத்துறை சென்னைக்கு வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக உளவுத்துறை எடப்பாடி பழனிசாமி

சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக, ஆளும் கட்சிகள் உளவுத்துறை மூலம் கருத்துக்கணிப்புகளை நடத்துவது வழக்கமான ஒன்றுதான். இதன்மூலம், தங்களுக்குச் சாதகமான தொகுதிகள், பலமான இடங்கள், கூட்டணிக் கட்சிகளுக்குச் சாதகமான பகுதிகள் மற்றும் பலவீனமான இடங்கள் குறித்து அவை ஆய்வு செய்யும்.

ஒவ்வொரு கட்டக் கருத்துக்கணிப்பின் முடிவுகளின் அடிப்படையில், வலுவான வேட்பாளர் யார், எந்த வாக்குறுதிகளை அளித்தால் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என்பது போன்ற பல்வேறு அம்சங்கள் ஆராயப்படும். இதன் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழகத்தின் செல்வாக்கு, திமுக மற்றும் அதிமுகவின் பலம் மற்றும் பலவீனங்கள் குறித்தும் ஆய்வுகள் நடத்தப்படும். இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகள், வரவிருக்கும் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்க திமுகவுக்கு உதவும்.

தமிழக தேர்தல் கருத்துக்கணிப்பு

இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகள், தேர்தலுக்குத் தேவையான உத்திகளை வகுப்பதற்கும், எந்த வாக்குறுதிகளை அளித்தால் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என்பதையும் ஆய்வு செய்வதற்கும் திமுகவுக்கு உதவும். இதன்மூலம், தேர்தல் பிரச்சாரங்களைச் சிறப்பாக வடிவமைக்க முடியும்.

கருத்துக்கணிப்பு முடிவுகளின் அடிப்படையில், வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது, வாக்குறுதிகளைத் திட்டமிடுவது போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். ஆளும் கட்சி உளவுத்துறை மூலம் நடத்தும் இந்தக் கருத்துக்கணிப்புகள், மற்ற கணிப்புகளைக் காட்டிலும் துல்லியமாக இருக்கும். இவை உண்மையான கள நிலவரத்தை வெளிப்படுத்தும் என்பதால், தேர்தல் வியூகங்களை வகுப்பதில் இவை முக்கிய கருவியாகப் பயன்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+