டெல்லி நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா, கார்த்தி சிதம்பரம் வழக்கை விசாரிப்பதில் இருந்து விலகல்
சென்னை: டயஜியோ ஸ்காட்லாந்து லஞ்சப் புகாரில் சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை விசாரிக்கப் போவதில்லை என்று டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா அறிவித்துள்ளார். அத்துடன் அந்த வழக்கில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகி உள்ளார்.
டயஜியோ ஸ்காட்லாந்து நிறுவனம் இந்தியாவில் தனது வர்த்தகத்தை முன்னெடுப்பதற்காகப் பெறப்பட்ட லஞ்சப் புகார் தொடர்பான சிபிஐ வழக்கு இது. இந்த நிறுவனம் இந்தியாவில் தனது தொழிலை விரிவுபடுத்தவும், வரிச் சலுகைகள் அல்லது முறைகேடுகளைச் சரிசெய்யவும் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்த போது, அவரது மகன் கார்த்தி சிதம்பரம், இடைத்தரகராகச் செயல்பட்டு தனது செல்வாக்கைப் பயன்படுத்தி உதவி செய்ததாகவும், அதற்காக கைமாறாக லஞ்சம் பெற்றதாகவும் சிபிஐ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்துள்ள மனு, இந்த சிபிஐ வழக்கை ரத்து செய்யக் கோரியது தான். இந்த மனுவைத்தான் நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா விசாரிக்கத் தயக்கம் காட்டி விலகியுள்ளார்.
டயஜியோ ஸ்காட்லாந்து நிறுவனம் - யார் இவர்கள்?
டயஜியோ ஸ்காட்லாந்து என்பது உலகிலேயே மிகப்பெரிய மதுபான உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாகும். உலகின் பல புகழ்பெற்ற மதுபான பிராண்டுகள் இவர்களுடையதுதான். ஜானி வாக்கர் , ஸ்மிர்னோஃப் , கேப்டன் மோர்கன் , மற்றும் ஜே அண்ட் பி உள்பட பல்வேறு பானங்கள் இவர்களுடையது.
இந்தியாவின் வரலாற்றில் முதல் முறை.. நீதிபதிக்கு எதிராக கெஜ்ரிவால் எடுத்த மிகப்பெரிய முடிவு
இந்தியாவின் மிகப் பெரிய மதுபான நிறுவனமான யுனெடட் ஸ்காட்லாந்து பெரும்பான்மையான பங்குகளை இந்த டயஜியோ நிறுவனம் தான் வைத்துள்ளது. (முன்பு இது விஜய் மல்லையாவுக்குச் சொந்தமாக இருந்தது). இந்த நிறுவனம் லஞ்சம் கொடுத்ததாக இந்தியாவில் சிக்கி உள்ளது.
நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா விலகியதற்காக தார்மீக ரீதியாக எந்த காரணத்தையும் வெளிப்படையாக கூற வேண்டியது இல்லை. எனினும் கார்த்தி சிதம்பரம் தரப்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர்களுடன் அவருக்கு நெருங்கிய நட்பு இருக்கலாம். அல்லது இந்த வழக்கு ஏற்கனவே வேறு ஒரு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டபோது இவர் ஏதோ ஒரு வகையில் அதில் பங்குபெற்று இருக்கலாம். காரணங்கள் எதுவாக இருந்தாலும், "எந்த ஒரு சார்பும் இல்லாமல் நீதி வழங்கப்பட வேண்டும்" என்பதற்காக அவர் விலகி உள்ளதாகவே பார்க்கப்படுகிறது.
அதேநேரம் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கில் நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா விலக மறுத்துவிட்டார்.இதற்காக அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று கடிதம் எழுதியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த கடிதத்தில் நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா குறித்து கடுமையான விமர்சனங்களை நேரடியாக வைத்ததுடன், வழக்கில் என்ன நடந்தாலும் ஆஜராக மாட்டேன். வழக்கறிஞரும் ஆஜராகமாட்டேன் என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications