நரி ஊருக்குள்ள வந்ததே தப்பு- இதுல ஊளையிட்டுகிட்டே வேற வருதா? எச்.ராஜாவுக்கு சீமான் நச் பதிலடி
சென்னை: தமிழகத்தில் இஸ்லாமியர்களை தொட நினைப்பவர்கள் முதலில் எங்களை தான் எதிர்கொள்ள வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாஜகவின் தேசிய செயலாளர் எச். ராஜா இன்று தமது ட்விட்டர் பக்கத்தில், டெல்லியில் நடந்தது போல தமிழகத்திலும் வன்முறைகள் நடக்கும் என பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக சீமான் இன்று வெளியிட்ட அறிக்கை:

மாணவர்கள் மீது குண்டு விழும் என்றார்கள். சீமான் கறி கிடைக்கும் என்றார்கள். இப்போது டெல்லியில் நடந்தது போல
தமிழகத்திலும் நடக்கும் என்கிறார்கள். சனநாயக வழியிலான அமைதியான அறப்போராட்டத்திற்கு மிரட்டல் விடுக்கிறார்கள்.
கை கால்களோடு மட்டுமல்ல வாளோடும் வேலோடும் முன் தோன்றிய மூத்தக்குடியின் மக்கள் நாங்கள்!
நினைத்ததையெல்லாம் செய்து முடித்து கலவரம் செய்து ஆட்டம் போட இது வடநாடு அல்ல; தமிழ்நாடு!
நரி ஊருக்குள்ள வந்ததே தப்பு!
— சீமான் (@SeemanOfficial) February 26, 2020
இதுல ஊளையிட்டுக்கிட்டே வேற வருதா?! pic.twitter.com/EM6g1R8gDB
எங்களது பெருந்தன்மையும் பொறுமையும்தான் உங்களது இருப்பை நிலை கொள்ளச் செய்திருக்கிறது!
இங்கிருக்கும் இசுலாமிய சொந்தங்கள் எங்கோ இருந்து வந்தவர்கள் அல்ல; காலங்காலமாக நீடித்து நிலைத்து வாழும் இம்மண்ணின் பூர்வகுடிகள்! எங்கள் உடபிறந்தவர்கள்! எங்களது இரத்த உறவுகள்! இஸ்லாமியர்கள் தமிழர்களாகவில்லை; தமிழர்கள் நாங்கள்தான் இஸ்லாத்தை ஏற்றிருக்கிறோம்.
அவர்களைத் தொட வேண்டும் என்று நினைத்தால் அதற்கு முன் எங்களை எதிர்கொள்ள வேண்டும்; எங்களைத் தாண்டி தான் அவர்களை நெருங்க முடியும்! கவனம்!
நரி ஊருக்குள்ள வந்ததே தப்பு!
இதுல ஊளையிட்டுக்கிட்டே வேற வருதா?!
இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.
-
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications