Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்டில் எம்.பி சீட் 39-லிருந்து 59 ஆக உயரும்.. எண்ணிக்கை குறையாது.. - அண்ணாமலை சொன்ன தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்படவில்லை.. தமிழ்நாட்டில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது. தமிழகத்தில் எம்.பி தொகுதிகளின் எண்ணிக்கை 39-லிருந்து 59 ஆக உயரவே வாய்ப்புள்ளது" என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தொகுதி மறுவரையறை தொடர்பாக மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து வீடியோ வெளியிட்ட ஸ்டாலின், தொகுதி மறுவரையறை தொடர்பாக அரசியல் சட்டத் திருத்தத்தை இந்தத் தொடரில் திணிக்கப் போகிறார்கள். தமிழ்நாட்டைப் பாதிப்பது போன்றோ, வட மாநிலங்களுக்கு அரசியல் வலிமையை மேலும் வாரி வழங்குவது போன்றோ ஏதாவது நடந்தால், தமிழ்நாட்டில் இருக்கும் நாங்கள் எல்லோரும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம். தமிழ்நாடே ஸ்தம்பிக்கும் எனத் தெரிவித்திருந்தார்.

Delimitation Not Based on Population TN Seats May Rise to 59 Annamalai

இந்​தி​யா​வில் 5 மாநிலங்​களில் சட்​டசபை தேர்​தல்​கள் நடக்​கின்​றன. இதனால், அரசி​யல் கட்​சிகளின் தலை​வர்​கள் தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் தீவிர​மாக ஈடு​பட்டு வரு​கின்​றனர். இந்​நிலை​யில், தொகுதி மறு​வரையறையை நாடாளு​மன்​றத்​தில் அவசர, அவசர​மாக கொண்​டுவர மத்​திய அரசு முயற்​சிப்பதாக தென் மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. தென் மாநிலங்களில் தொகுதி எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசு திட்டமிடுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோ குறித்து தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில், "மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அந்தக் காணொளியில் முதலமைச்சர் பயன்படுத்தும்
மொழிநடை. அவர், பிரதமரை மிரட்டும் விதமாக, தமிழகம் 1960-களுக்குத் திரும்பிவிடும் என்று கூறுகிறார். மிகவும் துரதிர்ஷ்டவசமானது, அச்சமூட்டும் செயல்.

நமது தாய்மார்களுக்கும் சகோதரிகளுக்கும் மரியாதையையும் பிரதிநிதித்துவத்தையும் வழங்க பிரதமர் மோடி எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். செப்டம்பர் 2023-ல் இந்த மசோதா நாடாளுமன்றத்திற்கு வந்தபோது அது ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இப்போது பெண்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பிரதமர் அதை முன்கூட்டியே செயல்படுத்த முயற்சிக்கிறார். நாங்கள் ஒரு செயல்முறையைப் பின்பற்றுகிறோம். இது மக்கள்தொகை அடிப்படையிலான மக்களவை இடங்களின் அதிகரிப்பு என்று எங்கும் கூறப்படவில்லை. ஏப்ரல் 16 அன்று மசோதாவைப் பார்ப்பதற்கு முன்பே, முதலமைச்சர் மக்களின் மனதில் அச்சத்தை உருவாக்குவது கண்டிக்கத்தக்கது. 1960களை பார்க்கும் என எச்சரிக்கை விடுக்கிறார். திமுகவினர் குடும்பத்தில் யாராவது அப்போது தீக்குளித்தார்களா? மக்கள் மத்தியில் அச்சத்தை விளைவிக்கிறார். இது அவர் முதலமைச்சராக எடுத்த பதவிப் பிரமாணத்திற்கு எதிரானது.

தொகுதி மறுவரையறையை மக்கள்தொகை அடிப்படையில் மத்திய அரசு செய்யவில்லை. அப்படி செய்திருந்தால் தமிழகத்தின் தொகுதிகளின் எண்ணிக்கை 39ல் இருந்து 31 ஆக குறைந்திருக்கும். 8 தொகுதிகளை நாம் இழந்திருப்போம். இப்போது தொகுதியை அதிகப்படுத்துகிறோம். ஒவ்வொரு மாநிலத்திலும் தொகுதிகளை 50% உயர்த்த உள்ளதாக முதற்கட்டமாக தெரியவந்துள்ளது. நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள். தமிழ்நாட்டின் எம்.பி.க்களின் எண்ணிக்கை 39ல் இருந்து 59 வரை உயர வாய்ப்பு இருக்கிறது. கேரளாவில் 20ல் இருந்து 30 ஆக உயர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+