தொகுதி மறுவரையறை! தலைக்கு மேல் தொங்கிய கத்தி, கழுத்துக்கு வந்துடுச்சு! ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொகுதி மறுவரையறை, தலைக்கு மேல் தொங்கிய கத்தி கழுத்துக்கு வந்துவிட்டது என முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திமுக எம்பிக்களுடனான ஆலோசனை கூட்டத்தில் அவர் இதை தெரிவித்தார்.

தொகுதி மறுவரையறை குறித்து திமுக எம்பிக்களுடன் ஸ்டாலின் வீடியோவில் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக்கு பிறகு அவர் டிவிட்டரில் கூறியிருப்பதாவது: #Delimitation: தலைக்கு மேல் தொங்கிய கத்தி கழுத்துக்கு வந்துவிட்டது!

delimitation stalin

நாடு முழுக்க உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைத்து இந்த பேராபத்தை எதிர்கொள்வதற்கான வியூகங்கள் குறித்து கழக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசித்துள்ளேன்.

தனிப்பட்ட மனிதர்கள் - அரசியல் இயக்கங்களைவிட, மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதுதான் நமது தலையாய கடமை. எனவே, அனைத்து அரசியல் இயக்கங்களைச் சார்ந்த தோழர்களும் - நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனநாயகத்தைக் காக்க ஓரணியில் திரள வேண்டும் என அழைக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இன்னொரு ட்வீட்டில் அவர் கூறியிருப்பதாவது: உயரட்டும் கருப்புக்கொடி!
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!

இந்தியாவின் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட குற்றத்துக்காக தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்குத் தண்டனையா?

ஒன்றிய பா.ஜ.க. அரசு நாளை நாடாளுமன்றத்தில் கொண்டுவரவுள்ள #Delimitation சட்டத்திருத்தம் தமிழ்நாட்டுக்கும், தென்மாநிலங்களுக்கும் இழைக்கப்படும் "மாபெரும் வரலாற்று அநீதி"!

விந்திய மலைக்குத் தெற்கே உள்ள தென்னிந்தியர் ஒவ்வொருவரும் கொதித்துப் போயிருக்கிறோம். நெருப்போடு விளையாடுகிறது பா.ஜ.க.!

தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தமிழ்நாடு முழுவதும் வீடுகளிலும், பொது இடங்களிலும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நாளை நடக்கும்.

தமிழ்நாட்டின் குரலை மதித்து ஒன்றிய அரசு பின்வாங்கவில்லை என்றால், அதற்கான விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும். இதற்காக, மிகப் பெரிய விலையை நீங்கள் கொடுக்க வேண்டி இருக்கும்!

தி.மு.க. தலைவராக, அனைத்துக்கும் மேல் சுயமரியாதையுள்ள தமிழனாக மீண்டும் எச்சரிக்கிறேன்! இவ்வாறு தெரிவித்திருந்தார்.

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்கள் கடந்த பல தசாப்தங்களாக மத்திய அரசின் அறிவுறுத்தல்களை ஏற்று, மக்கள் தொகை கட்டுப்பாட்டு முறைகளை மிகச் சிறப்பாக அமல்படுத்தி வருகின்றன.

இப்போது தொகுதி மறுவரையறை மக்கள் தொகை அடிப்படையில் அமைந்தால், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தாத வடமாநிலங்களுக்கு நாடாளுமன்ற இடங்கள் அதிகமாகும்.

கட்டுப்பாட்டைச் சிறப்பாகக் கடைபிடித்த தமிழகத்திற்கு இடங்களின் விகிதாச்சாரம் குறையும். இந்த மறுவரையறையால் உத்தரப்பிரதேசத்திற்கு 140 சீட்களும், பீகாருக்கு 73 லோக்சபா சீட்களும் ராஜஸ்தானுக்கு 48, மத்திய பிரதேசத்திற்கு 51 சீட்களும். மகாராஷ்டிராவிற்கு 79 சீட்களும் கிடைக்கும். அதிக சீட் கிடைக்கும் மாநிலங்களில் இவர்கள்தான் டாப்!

அது போல் தமிழகத்தில் 39 ஆக இருந்த லோக்சபா சீட்கள் தொகுதி மறுவரையறையால் 51 ஆக மாறும். கேரளாவுக்கு 23 ஆகவும் ஆந்திரா+ தெலுங்கானாவுக்கு 59 ஆகவும் ஒடிஸாவுக்கு 29 ஆகவும் மேற்கு வங்கத்திற்கு 64 ஆகவும் மாறும். அதிக பாதிப்புகளை சந்திக்கும் டாப் மாநிலங்கள் இவைகள் ஆகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+