வண்டலூர் உயிரியல் பூங்காவில்.. மேலும் 4 சிங்கங்களுக்கு டெல்டா வகை கொரோனா வைரஸ் பாதிப்பு!
சென்னை: சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் மேலும் 4 சிங்கங்களுக்கு டெல்டா வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
மனிதர்களை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பாடாய்படுத்திய கொரோனா வைரஸ் விலங்குகளையும் தாக்கி அதிர்ச்சி அளித்து வருகிறது.
சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இரண்டு சிங்கங்கள் பலியாகின.

சிங்கங்களுக்கு கொரோனா
11 சிங்கங்கள் சரியாக உணவு உட்கொள்ளாமல் தொடர் இருமல் போன்றவற்றால் அவதிபட்டுள்ளன. இதனால் பூங்காவில் இருந்த 11 சிங்கங்களின் மூக்கு மற்றும் ஆசன வாய் மாதிரிகளை மத்தியபிரதேசத்தில் உள்ள ஆய்வகத்திற்கும், இரத்த மாதிரிகளை தமிழ்நாடு கால்நடை பல்கலை கழகத்திற்கும் அனுப்பினர்.

2 சிங்கம் பலி
இதனிடையே மூன்றாம் தேதி நீலா என்ற 9 வயது பெண் சிங்கம் மூக்கில் திரவம் சுரந்து பலியானது. பின்னர் ஆய்வு முடிவுகளில் 9 சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியபட்டது. இதனை தொடர்ந்து மேலும் ஒரு சிங்கமும் கொரோனாவுக்கு இரையானது.

தீவிர பரிசோதனை
அதன் பின்னர் அரசு கால்நடை மருத்துவ குழுவினர் சிங்கங்களை பரிசோதித்தனர். இது தவிர அங்குள்ள சிறுத்தை, புலி உள்ளிட்ட அணைத்து விலங்குகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் மேலும் 4 சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் சிங்கங்களுக்கு கொரோனா
இந்த 4 சிங்கங்களுக்கும் டெல்டா வகை வைரஸ் தாக்கியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த சிங்கங்களுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டதால் இதன் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனை தொடர்ந்து இந்த 4 சிங்கங்களும் தனிமையில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
-
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு












Click it and Unblock the Notifications