ஸ்டாலின் கையெழுத்து போட்ட ஹூண்டாய் கார்.. எகிறிய டிமாண்ட்.. கடைசியில் புஸ்ஸுன்னு போச்சே!
சென்னை:சென்னை அருகே ஹூண்டாய் நிறுவனத்துக்கு சமீபத்தில் விசிட் செய்தார் முதல்வர் முக ஸ்டாலின்.இந்தியாவில் தனது ஒரு கோடியாவது வாகனத்தை உற்பத்தி செய்து சாதித்துள்ளது ஹூண்டாய் நிறுவனம்.
Recommended Video
ஹூண்டாய் நிறுவனத்தின் அல்கசார் என்ற எஸ்யூவி வகை வாகனம் தற்போது சந்தைக்கு வருகிறது அல்லவா, அதுதான் ஒரு கோடியாவது வாகனம்.
எனவே அதன் மீது ஸ்டாலின் தனது கையெழுத்தை போட்டார். காரின் போனட் பகுதியில், வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டு முக ஸ்டாலின் என்று தனது கையெழுத்திட்டு ஜூன் மாதம் 30ஆம் தேதி என்பதையும் எழுதி இருந்தார் ஸ்டாலின்.

காருக்கு டிமாண்ட்
முன்னதாக தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஹூண்டாய் நிறுவனம் 5 கோடி ரூபாய் நிதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. சரி இப்போது மேட்டருக்கு வருவோம். முதல்வர் ஸ்டாலின் கையெழுத்து போட்ட வாகனம் விற்பனைக்கு வரும்போது அதை எப்படியாவது தாங்கள் வாங்கி விட வேண்டும், நினைவு பரிசாக மாற்றிவிட வேண்டும் என்று பல்வேறு தொழில் அதிபர்கள் வழி மீது விழி வைத்து காத்திருந்தார்கள். தொழிலதிபர்கள் இருக்கட்டும்.. அமைச்சர்களில் சிலர் கூட தங்கள் தலைவர் கையெழுத்துப் போட்ட வாகனங்களை வாங்குவது பெருமை என்று நினைத்து அதற்கான முயற்சிகளை ஆரம்பித்தனர்.

ஹூண்டாய் வேறு பிளான்
இதில்தான் ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது. தொழிலதிபர்கள் அல்லது அமைச்சர்கள் என்று யார் நினைத்தாலும் அந்த காரை தங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்ட ஒரு அறிவிப்பு தான் இதற்கு காரணம்.

ஏமாற்றம்
ஆம்.. ஒரு கோடியாவது கார் என்பதோடு முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்ட கார் என்பதால் நினைவு பெட்டகமாக அந்த காரை தங்கள் நிறுவனமே வைத்துக்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது, இது விற்பனைக்கு அல்ல என்பதுதான் இதன் அர்த்தம். எனவே அந்த காரை வாங்க வேண்டும் என்று ஆவலோடு காத்திருந்த அத்தனை பேரும் ஏமாந்து போய் விட்டனர்.

தெற்காசியாவில் தமிழகத்தின் முக்கியத்துவம்
ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பரந்து விரிந்துள்ள ஹூண்டாய் நிறுவனத்தில் சுமார் 25,000 தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் பங்கேற்ற ஸ்டாலின் தெற்காசியாவில் அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலமாக தமிழகத்தை மாற்ற இருப்பதாக சூளுரைத்தார் என்பது நினைவிருக்கலாம்.
-
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications