Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

களமிறக்கப்பட்ட இரும்பு ராட்சசன்! சென்னையின் மிக முக்கிய பகுதியில் வரும் செம திட்டம்! எல்லாம் மாறுதே

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராஜீவ் காந்தி சாலை (OMR) மற்றும் கிழக்குக் கடற்கரைச் சாலை (ECR) ஆகியவற்றை இணைக்கும் வகையில் ₹270 கோடி மதிப்பிலான பிரம்மாண்ட திட்டம் தற்போது முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக அமையவுள்ள பாலத்தின் பணிகளை விரைவுபடுத்துவதற்காக, தமிழக நெடுஞ்சாலைத் துறை அனைத்து அனுமதிகளையும் பெற்று தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

நவீன ஆறு வழிப்பாலம்

இந்த நவீன ஆறு வழிப்பாலம் ₹36 கோடி செலவில் கட்டப்படவுள்ளது. இது பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் சாலையின் நீட்டிப்பில் தொடங்கி, கிழக்கு கடற்கரைச் சாலையிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடல் அலைகளின் அதிகபட்ச உயரத்திலிருந்து நான்கு மீட்டர் உயரத்தில் பாலம் அமைக்கப்படுவதால், படகு போக்குவரத்துக்கும் போதுமான இடம் கிடைக்கும்.

Demolision of house works started in the OMR-ECR Link road for steel bridge across Buckingham Canal

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கிழக்கு கடற்கரை சாலையையும் (ECR) பழைய மகாபலிபுரம் சாலையையும் (OMR) இணைக்கும் திட்டம் விரைவில் நிறைவேறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

பக்கிங்ஹாம் கால்வாயின் மீது இதற்காக இரும்பு பாலம் அமைக்கப்பட உள்ளது. தொரைப்பாக்கம் (ஓஎம்ஆர்) முதல் நீலாங்கரை (ஈசிஆர்) ஆகியவற்றை இணைக்கும் இரும்புப் பாலத்தை ₹37 கோடிக்கு மாநில நெடுஞ்சாலைத் துறை அமைக்க உள்ளது. இதற்கான டெண்டர் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சோழிங்கநல்லூர் மற்றும் திருவான்மியூரில் நெரிசலைக் குறைக்கும் வகையில் ஆறு வழிச்சாலை, 36 மீட்டர் நீளமுள்ள பாலத்தில் bund மற்றும் அப்ரோச் சாலைகள் அமைக்கப்படும்.

4 மீட்டர் தூரத்திற்கு வெள்ளம் வெளியேறும் வசதியுடன், படகு இயக்கத்தையும் அனுமதிக்கும் வகையில் பாலம் அமைக்கப்படும். ஏற்கனவே OMR பக்கத்திலிருந்து 1.4 கிமீ இணைப்புச் சாலை ஒரு பகுதி முழுமையடைந்துள்ளது. ஒரு கட்டமாக தொரைப்பாக்கம் மற்றும் நீலாங்கரையை இணைக்கும் பக்கிங்ஹாம் கால்வாயின் குறுக்கே நகரின் OMR-ECR இணைப்பு இரும்பு பாலம் கட்டும் பணி இரண்டு மாதங்களில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

21 கோடியில் வெங்கடேசபுரம்-இளங்கோ நகர், மணியம்மை தெரு-வீரமணி தெரு, அறிஞர் அண்ணாசாலை-பாண்டியன் சாலை ஆகிய சாலைகளை இணைக்கும் வகையில் 3 இரும்பு பாலங்கள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. 2019 டிசம்பரில் கால்வாயின் குறுக்கே ஆறு இடங்களை குடிமை அமைப்பு இறுதி செய்து வடிவமைப்புகள் தயார் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடங்கும் கட்டுமான பணிகள்

பாலத்தின் கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்கு, துரைப்பாக்கம் பக்கிங்காம் கால்வாய் கரையோரத்தில் வசிக்கும் 58 குடும்பங்களும், நீலாங்கரை பகுதியில் பட்டா நிலங்களில் வசிக்கும் 63 குடும்பங்களும் வேறு இடங்களுக்கு மாற்றப்படவுள்ளனர். இந்த இடமாற்றம் பணிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது.

துரைப்பாக்கம் கால்வாய் கரையோரத்தில் நீர்வளத் துறை நிலத்தில் வசிக்கும் குடும்பங்கள், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அடையாளம் கண்ட குடியிருப்புக்கு மாற்றப்படவுள்ளனர். ஒரு வீடு ₹3.5 லட்சம் செலவில் கட்டப்படவுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி பயனாளிகளைப் பதிவு செய்து அறிவிப்புகளை வழங்கியுள்ளது. இந்தக் குடும்பங்கள் இடம் பெயர்ந்ததும், 680 மீட்டர் நீளமுள்ள சாலை பாலத்தின் தொடக்கப் பகுதி வரை நீட்டிக்கப்படும் என அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இத்திட்டத்தின் மொத்த செலவான ₹270 கோடியில், நிலம் கையகப்படுத்தலுக்காக மட்டும் ₹200 கோடி செலவிடப்படுகிறது. சாலைகள் அமைப்பதற்கும், பாலத்தின் கட்டுமானப் பணிகளுக்கும் ₹70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீலாங்கரை பகுதியில் நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்துச் சிலர் நீதிமன்றம் சென்றுள்ளனர். இந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அந்தப் பகுதியில் உள்ள 63 வீடுகள் இடிக்கப்படவுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+