சென்னைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்தது - இனி மழை குறையும்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே கரையைக் கடந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை: : தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர பகுதிகளில் சென்னைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்துள்ளது
மாலையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மண்டலத் தலைவர் பாலச்சந்திரன், தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கத் தொடங்கி விட்டதாக கூறினார். சென்னைக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளது.

சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தரைக்காற்று மணிக்கு 40 கிலோமீட்ட வேகத்தில் வீசக்கூடும் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடப்பதால் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. பொதுமக்கள் கடலோரங்களுக்கு வர வேண்டாம் என்று காவல்துறையினர் எச்சரித்தும் ஆபத்தை உணராமல் பலரும் கடற்கரையில் குவிந்து செல்பி எடுத்துக்கொண்டனர்.
இதனிடையே தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர பகுதிகளில் சென்னைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்துள்ளது. கடந்த 5 நாட்களாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மக்களை மிரட்டி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்துள்ளதால் மக்கள் சற்றே நிம்மதியடைந்துள்ளனர்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்த காரணத்தால் சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் நீக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று கரையை நெருங்கிய பின் தொடர்ந்து வலுவிழக்கும் இதனால் தமிழ்நாடு ஆந்திராவில் தொடரும் கனமழை நாளை முதல் படிபடியாக குறைய தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வரலாறு காணாத வகையில் மழை கொட்டித்தீர்த்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் பதிவான அளவின்படி சென்னையில் நவம்பர் முதல் 11 நாட்களிலேயே 70.9 செ.மீ. மழை பெய்துள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
சென்னையில் நவம்பர் மாதத்தில் 100 செ.மீ.க்கு அதிகமான மழை 1918, 1985, 2005, 2015 ஆகிய 4 ஆண்டுகளில் மட்டுமே பெய்துள்ளது.1918ஆம் ஆண்டு சென்னையில் நவம்பர் மாதத்தில் 108.8 செ.மீ. மழை பெய்தது தான் சாதனையாக இருந்தது. கடந்த 2005ஆம் ஆண்டில்107.8 செ.மீ.யும், 2015ஆம் ஆண்டில் 104.9 செ.மீ. அளவு நவம்பரில் சென்னையில் மழை பெய்துள்ளது.
இந்த ஆண்டு நவம்பர் மாதம் முடிவதற்கு இன்னும் 19 நாட்கள் உள்ள நிலையில் தற்போதே 70.9 செ.மீ. மழை பெய்துள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. எஞ்சியுள்ள 19 நாட்களில் நிச்சயம் மழைப்பொழிவு 38 செ.மீ.க்கு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications