கரையை கடந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. இந்த 6 மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யும்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க தொடங்கி உள்ளது
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது.. உள்மாவட்டங்களை நோக்கி காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வந்த நிலையில், சென்னை - புதுச்சேரி இடையே இன்று அதிகாலை 3 மணி முதல் 4 மணிக்குள் கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நிலைகொண்டுள்ளது. வங்கக்கடலில் கடந்த 13-ம் தேதி உருவான காற்றழுத்த பகுதி, அதற்கு பிறகு மேற்கு திசையை நோக்கி நகர்ந்தது..
திடீரென நேற்று முன்தினம் இரவு அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. அது வலுவடைந்ததன் காரணமாக, புதுவையிலும், ஆந்திர மாநிலத்தின் சில இடங்களிலும் மிக கனமழை பெய்தது.

ஆய்வு மையம்
இந்நிலையில், வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க தொடங்கியது.. காலை 3 மணிக்கு தாழ்வு மண்டலம் கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.. சென்னையில் இருந்து 90 கிமீ தொலைவில் நிலை கொண்டிருந்தது... அது இப்போது புதுச்சேரி - சென்னை இடையே கரையை கடந்தது. அதாவது உள்மாவட்டங்களை நோக்கி காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வந்து, சென்னை- புதுச்சேரி இடையே அதிகாலை 3 மணி முதல் 4 மணிக்குள் கரையை கடந்தது.

கனமழை
கடலோர மாவட்டங்களில் மிகப் பெரிய மேகமூட்டம் காணப்படுகிறது. ஆனால் பெரிய அளவிலான காற்றோ, மழையோ இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிகவும் அமைதியான முறையில் கடந்து வருகிறது. நேற்று காலை முதல் இன்று வரை புதுவையில் அதிகப்பட்சமாக 17 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாகவும், திருக்கோவிலூரில் 14 செ.மீ மழை பதிவாகி உள்ளதாகவும், திருவண்ணாமலையில் 10 செமீ. மழை பதிவாகி உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரி
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் அதிகனமழையை தரக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், பெரிய அளவுக்கு மழை இல்லாமல், குறிப்பாக வடகடலோர மாவட்டங்களில் எதிர்பார்த்த அளவுக்கு மழை இல்லாமல் கரையை கடந்து வருகிறது. இதன்காரணமாக ஆந்திரா, மற்றும் புதுவையில் மட்டும் அதிக மழை பெய்துள்ளது..

மழை
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பரவலான மழை பெய்து வருகிறது.. இந்த தாழ்வு மண்டலம் கரையை கடந்துவிட்டது. மேலும், வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த மண்டலம் விடப்பட்டிருந்த ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளது. பெரிய அளவு பாதிப்பு இல்லாமல் கரையை கடந்தது ஓரளவு ஆறுதலை சென்னைவாசிகளுக்கு தந்து வருகிறது.
Recommended Video

வலுவிழப்பு
செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், கரையை கடந்த தாழ்வு மண்டலமானது, வடதமிழகம் பகுதியில் நிலைகொண்டுள்ள நிலையில் அது மேற்கு, வடமேற்கு திசையில் நகரக்கூடும். பின்னர் அது படிப்படியாக வலுவிழக்க கூடும். இதன்காரணமாக, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், சேலம், ஈரோடு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மற்ற மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிக அளவாக புதுச்சேரியில் 19 செ.மீ மழை பதிவாகி உள்ளதாகவும், மத்திய மேற்கு வங்கக்கடல், வடதமிழக கடற்கரை, ஆந்திர கடற்கரை பகுதிகளுக்கு இன்று மதியம் வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என்றார்.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications