Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னைக்கு வராதீங்க.. தொண்டர்கள், கட்சி நிர்வாகிகளுக்கு உதயநிதி வேண்டுகோள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தின் துணை முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினை சந்திப்பதற்காக கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் சென்னைக்கு படையெடுத்து வரும் நிலையில், என்னை சந்திப்பதற்காகச் சென்னைக்கு வருவதை தவிர்க்குமாறு அன்போடும், உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் என்ற சலசலப்பு கடந்த சில மாதங்களாகவே இருந்து வந்தது. ஆளுநர் மாளிகையில் இருந்து நேற்று முன்தினம் வெளியான அறிவிப்பு அமைச்சரவை மாற்றத்தை உறுதி செய்துவிட்டது. அதில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்பதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மனோ தங்கராஜ், க.ராமச்சந்திரன், செஞ்சி மஸ்தான் ஆகிய மூன்று பேர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

udhayanidhi stalin deputy chief minister

மேலும், சமீபத்தில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியான செந்தில் பாலாஜி மற்றும் கோவி. செழியன், ராஜேந்திரன், நாசர் ஆகிய நான்கு பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். மேலும், பல அமைச்சர்களின் இலாகா மாற்றப்பட்டுள்ளது. கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனும், விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று தமிழகத்தின் துணை முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழகத்தின் மூன்றாவது துணை முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார். உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானதை, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் வரவேற்று வருகின்றனர்.

சினிமா பிரபலங்களும் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதேநேரத்தில் அதிமுக, நாம்தமிழர், பாஜக, தவெக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதை வாரிசு அரசியல் என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக சென்னைக்கு படையெடுத்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என்னைச் சந்திப்பதற்காக சென்னைக்கு வருவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் அவர் கொண்டுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழகத்தின் துணை முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, மறைந்த முதல்வர் கருணாநிதியின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள், என்னை நேரில் சந்தித்து வாழ்த்த வேண்டும் என்ற முனைப்போடு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னைக்கு வருகிறீர்கள். உங்களுடைய அன்பு என்னை நெகிழச் செய்கிறது. அதற்கு என்றும் நன்றிக்குரியவனாக நான் இருப்பேன்.

எனினும், நம் கட்சியின் தலைவர், தமிழக முதல்வரின் கட்டளையின்படி, அவரவர் பகுதிகளில் நாம் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் இருக்கின்றன. எனவே, மக்கள் பணி, கட்சிப்பணியில் தொடர்ந்து கவனம் செலுத்துவோம். என்னை சந்திப்பதற்காக சென்னைக்குப் பயணம் செய்வதைக் கட்சித் தொண்டர்கள் தவிர்க்குமாறு அன்போடும், உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன்.

பல்வேறு மாவட்டங்களில் நான் அடுத்தடுத்துச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், நானே உங்களை அங்கே நேரில் சந்தித்து உங்களின் வாழ்த்துகளைப் பெற்றுக் கொள்கிறேன். நன்றி" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+