முதல்வரை முந்திய துணை முதல்வர்... கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் ஓபிஎஸ்
சென்னை: தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் இன்று கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக்கொண்டார்.
இந்தியாவில் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளின் கடந்த மார்ச் 1ஆம் தேதி தொடங்கப்பட்டது. 60 வயதைக் கடந்தவர்களுக்கும் 45 வயதைக் கடந்து உடல்நிலை பாதிப்பு உள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் உள்ளிட்ட பெரும்பாலான அமைச்சர்கள் 60 வயதைக் கடந்தவர்கள் என்பதால் அவர்களும் விரைவில் கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், இன்று மாலை துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக்கொண்டார். அவர் சென்னையில் உள்ள MGM மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
தமிழ்நாட்டில் தற்போதுவரை சுகாதார துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மட்டுமே கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொண்டுள்ளார். மருத்துவர் என்ற அடிப்படையில் அவர், முதல்கட்ட தடுப்பூசி செலுத்தும் பணிகளின் போதே கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொண்டார். அவருக்குப் பின், தற்போது துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டுள்ளார்.
முன்னதாக, கடந்த மார்ச் 1ஆம் தேதி காலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் மோடி எய்ம்ஸ் தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார். அதேபோல உள் துறை அமைச்சர் அமித் ஷாவும் முதல் நாள் இரவு டெல்லியுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தடுப்பூசி எடுத்துக்கொண்டார். அதன் பின்னர் பல்வேறு அமைச்சர்களும் தொடர்ந்து தடுப்பூசிகளை எடுத்துக்கொண்டு வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications