தீபாவளி முடிந்து சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்.. கூடவே சேர்ந்த கனமழை.. கடும் டிராபிக் பாதிப்பு
சென்னை: தீபாவளி திருநாளைக் கொண்டாட சென்னைவாசிகள் தங்கள் சொந்த ஊருக்கு படையெடுத்திருந்தனர். தீபாவளி முடிந்துவிட்ட நிலையில், அவர்கள் சென்னைக்குத் திரும்பி வருகிறார்கள். இன்று சென்னையில் கனமழை கொட்டும் நிலையில், அதையும் தாண்டி பொதுமக்கள் சென்னையை நோக்கிப் படையெடுத்து வருகிறார்கள். இதனால் சில இடங்களில் டிராபிக் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
நாடு முழுக்க நேற்று முன்தினம் அதாவது அக்டோபர் 20ம் தேதி தீபாவளி கொண்டாடப்பட்டது. படிப்பு மற்றும் வேலைவாய்ப்பிற்காக எப்போதும் தீபாவளி நாளில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவது வழக்கம்! அதுபோல சென்னைவாசிகள் பலரும் இந்தாண்டும் தங்கள் சொந்த ஊர்களுக்குப் படையெடுத்தனர். இதற்காகச் சிறப்பு அரசுப் பேருந்துகளும் இயக்கப்பட்டன.

சென்னைவாசிகள் பலரும் சொந்த ஊர்களுக்குத் திரும்பிவிட்ட நிலையில், நகரே கிட்டத்தட்ட காலியானது எனச் சொல்லலாம். அந்தளவுக்கு டிராபிக்கும் கூட இல்லாமல் இருந்தது. இப்போது தீபாவளியைக் கொண்டாடிவிட்டு மீண்டும் மக்கள் சென்னைக்குத் திரும்ப ஆரம்பித்துள்ளனர். பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று நேற்று செவ்வாய்க்கிழமையும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
சென்னை நோக்கி வரும் மக்கள்
இதனால் நேற்று மாலைக்கு பிறகே பொதுமக்கள் அதிகளவில் சென்னைக்குப் படையெடுக்க ஆரம்பித்தனர். தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நேற்றிரவு முதலே காலை வரையிலும் கூட நல்ல மழை கெட்டியது. இருந்த போதிலும் மழைக்கு நடுவிலும் பொதுமக்கள் சென்னையை நோக்கிப் படையெடுத்து வருகிறார்கள்.
இதற்காக நகரின் பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்றைய தினம் திருச்சியில் சிறப்புப் பேருந்துகள் தொடர்பாகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு செய்தார். தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை, கோவை, திருப்பூர் மற்றும் பல்வேறு ஊர்களுக்குத் திரும்பும் பொதுமக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வசதிகளை அவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அதிகரிக்கும் கூட்டம்
மேலும், பொதுமக்கள் பலரும் தங்கள் சொந்த வாகனங்களிலும் சென்னைக்குத் திரும்பி வருகிறார்கள். நேற்றைய தினம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை 39,282 வாகனங்கள் கடந்தன. இரவு 12 மணி நிலவரப்படி 39,282 வாகனங்கள் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியைக் கடந்துள்ளது. கொட்டும் மழையிலும் தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர். சென்னையை நோக்கி வரும் பல்வேறு நெடுஞ்சாலைகளிலும் கூட இதே நிலைதான்.
சில இடங்களில் டிராபிக்
இப்படி ஒரே நேரத்தில் ஏகப்பட்ட வாகனங்கள் சென்னையை நோக்கி வருவதால் இன்று காலை நகரின் சில இடங்களில் டிராபிக் நெரிசல் ஏற்பட்டது.. அதிலும் மழையும் கூட சேர்ந்து கொள்ள வாகனங்களால் இயல்பான வேகத்தில் செல்ல முடிவதில்லை. நத்தை வேகத்திலேயே வாகனங்கள் மெல்ல ஊர்ந்து சென்றன. அதேநேரம் கனமழை காரணமாக இன்று சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்ற சிக்கல் இல்லை.
கனமழையால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் சிலர் தங்கள் பயணத்தை ஒரு நாள் தள்ளி போட்டுள்ளனர். இதனால் பெரும்பாலான இடங்களில் பெரியளவில் டிராபிக் இல்லை. எப்போதும் டிராபிக் அதிகம் இருக்கும் பரனூர் சுங்க்சாவடியில் கூட இன்று காலை 30 முதல் 40 நிமிடங்கள் மட்டுமே டிராபிக் பாதிப்பு அதிகமாக இருந்தது. அதன் பிறகு டிராபிக் பெரியளவில் இல்லை.
கனமழை பெய்த போதும் பெரும்பாலான இடங்களில் நீர் அதிகம் தேங்கவில்லை. ஓரிரு இடங்களில் மட்டுமே நீர் தேங்கியுள்ளது. இதனால் காலை மட்டுமே டிராபிக் பாதிப்பு இருந்த நிலையில், அதன் பிறகு நிலைமை மெல்லச் சீரானது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications