Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இனி நிதி ஆண்டு கிடையாது.. வருமான வரியில் மாற்றம்.. நாளை தாக்கலாகும் புதிய சட்டம்.. என்னென்ன மாற்றம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 'வருமான வரி மசோதா 2025' என அழைக்கப்படும் புதிய வருமான வரி மசோதா, ஏப்ரல் 1, 2026 முதல் செயல்படுத்தப்பட உள்ளது. நாளை இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதா 600 பக்கங்கள், 23 அத்தியாயங்கள், 16 அட்டவணைகள் மற்றும் 536 உட்பிரிவுகள் (மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு பிரிவுகளாக மாறும்) ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

'மதிப்பீட்டு ஆண்டு', 'நிதி ஆண்டு' மற்றும் 'முந்தைய ஆண்டு' ஆகிய வார்த்தைகளை 'வரி ஆண்டு' என்று மாற்றும். வரி ஆண்டு என்று ஏப்ரல் 1, 2026 முதல் 12 மாத நிதிக் காலத்தை கொண்டது ஆகும். இதன் வரைவு மசோதா தற்போது வெளியாகி உள்ளது.

budget 2025 budget nirmala sitharaman 2025 2025

முக்கியமாக, குறுகிய கால மூலதன ஆதாயங்கள் (STCG) சட்டத்தின் வரி காலம் மற்றும் விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதன்படி STCG பதவிக்காலம் 12 மாதங்கள் ஆகும். இது 20 சதவீதமாக உள்ளது. இதில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

தற்போதுள்ள வருமான வரிச் சட்டம், 1961, மொத்தம் 298 பிரிவுகளைக் கொண்டுள்ளது. இந்த புதிய I-T மசோதாவில் இது 536 உட்பிரிவுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது, தற்போதுள்ள வருமான வரிச் சட்டம், 1961க்குப் பதிலாக கொண்டுவரப்படும். மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, இது 'வருமான வரிச் சட்டம், 2025' என்று அழைக்கப்படும்.

வருமான வரி சட்டத்தில் மாற்றம்:

இந்தியாவில் நடைமுறையில் உள்ள தற்போதைய வருமான வரிச் சட்டம் 1961 ஆம் ஆண்டு நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டது, தற்போது புதிய வருமான வரிச் சட்டம் 21 ஆம் நூற்றாண்டின் தேவைக்கேற்ப தற்போதுள்ள வழக்கில் உள்ள சட்டத்திற்குப் பதிலாக உருவாக்கப்பட்டு வருகிறது. இதில் பின்வரும் முக்கியமான மாற்றங்களை செய்ய உள்ளனர்.

1. வருமான வரி சட்டத்தை எளிமையாக்க உள்ளனர். எல்லோரும் புரிந்துகொள்ளும்படி வருமான வரி மாற்றப்படும்.

2. வருமான வரி தாக்கல் செய்வது எளிமையாக்கப்படும். புதிய தளம், செயலி உருவாக்கப்படும்.

3. தனி நபர் வருமான வரி மேலும் எளிமையாக்கப்படும்.

4. பிஸ்னஸ் வருமான வரி இப்போது சிக்கலாக உள்ளது. இதை மிக எளிமையாக எல்லோரும் புரிந்துகொள்ளும்படி மாற்றுவார்கள்.

5. பழைய வருமான வரி regime நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் அதில் உண்மை இல்லை என்கிறார்கள்.

6. இப்போது நடைமுறையில் உள்ளன பழைய வருமான வரி regime, புதிய வருமான வரி regime இரண்டும் வழக்கத்தில் இருக்கும். ஆனால் பழைய முறையில் உள்ள சலுகைகள் நீக்கப்படலாம்.

7. பட்ஜெட்டில்தான் ஸ்லாப் மாற்றப்பட்டது என்பதால் வருமான வரி ஸ்லாப் இந்த சட்டத்தில் மாற்றப்படாது.

8. அதே சமயம் புதிய வருமான வரி regimeல் புதிதாக சலுகைகள் சேர்க்கப்படலாம். அதாவது வீட்டு லோன் சலுகை போன்ற சலுகைகள் சேர்க்கப்படலாம்.

9. நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டிற்கு புதிய வருமான வரி சட்டம் தேவை என்றும், இதற்கான மசோதா இந்த கூட்டத்தொடரில் பிப்ரவரி 6-ம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறினார்.

10. முந்தைய சிக்கலான சட்டத்திற்குப் பதிலாக நாட்டில் புதிய வருமான வரிச் சட்டத்தை கொண்டு வர சமீபத்தில் ஆய்வுக் குழு ஒன்று உருவாக்கப்பட்டது. குழுவின் பரிந்துரையின் பேரில் புதிய வருமான வரி மசோதாவை அரசு தயாரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத்தான் தாக்கல் செய்ய உள்ளனர்.

தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கலின் பெருக்கம் காரணமாக, வரி செலுத்துவோர் ஆன்லைனில் பல விஷயங்களைச் செய்ய முடியும். இதுபோன்ற சூழ்நிலையில், ஆன்லைனில் தடையின்றி வரி விவரங்களை புரிந்துகொள்ளக்கூடிய வகையில் சட்டத்தை மாற்ற உள்ளனர். எல்லோரும் ஆன்லைனில் வருமான வரியை தாக்கல் செய்யும் விதமாக அனைத்தையும் எளிமையாக்க உள்ளனர்.

கடந்த சில வருடங்களுக்கு முன் ஆன்லைனில் வருமான வரி தாக்கல் செய்யும் பக்கத்தை எளிமையாக்கினர். இதையடுத்து மக்கள் வருமான வரி தாக்கல் செய்வது அதிகரித்தது. அதேபோல் மீண்டும் செயல்பாடுகளை எளிமையாக்க உள்ளனர். மற்றபடி பழைய வருமான வரி regime நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் அதில் உண்மை இல்லை என்கிறார்கள். இதன் சலுகைகள் குறைக்கப்படலாம் ஆனால் நீக்கப்படாது என்று அரசு தரப்பு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+