"சுவாமியே சரணம் ஐயப்பா”.. கார்த்திகை முதல் நாள்.. மாலை அணிந்து விரதம் தொடங்கிய சபரிமலை பக்தர்கள்!
சென்னை: கார்த்திகை மாதம் இன்று தொடங்கியுள்ள நிலையில், சபரிமலை ஐயப்பனுக்கு பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கி உள்ளனர். தமிழ்நாடு முழுவதும், ஐயப்பன் கோவில்களில் அதிகாலையிலேயே மாலை அணிந்து பக்தர்கள் தங்களது விரதத்தை தொடங்கியுள்ளனர்.
இந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நவம்பர் 15 ஆம் தேதியான நேற்று, மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக திறக்கப்பட்டது. வரும் டிசம்பர் 26 ஆம் தேதி நடைபெறும் மண்டல பூஜை, ஜனவரி 14 ஆம் தேதி நடைபெறும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நேற்று திறக்கப்பட்டது.

நவம்பர் 16 ஆம் தேதி, அதாவது கார்த்திகை முதல் நாளான இன்று அதிகாலை 3 மணி முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஐயப்பன் பக்தர்கள் இன்று அதிகாலையில் மாலை அணிந்து விரதத்தை தொடங்கி உள்ளனர். "சுவாமியே சரணம் ஐயப்பா" என்ற கோஷத்துடன் விரதத்தை தொடங்கியுள்ளனர்.
சபரிமலை அய்யப்பன் பக்தர்கள் 48 நாள்கள் விரதத்திற்கு பிறகு இருமுடி கட்டிக்கொண்டு காடு மேடு ஆறு மலை கடந்து சபரிமலை நோக்கி பயணம் மேற்கொள்வார்கள். அவ்வாறு கல் முள் கடந்து சென்று ஐயப்பனை தரிசிக்கும் பக்தர்களுக்கு தீராத பிரச்சனைகள் எல்லாம் தீரும் என்பது ஐதீகம்.
சபரிமலைக்கு விரதம் இருந்து பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் கார்த்திகை முதல் தேதியிலேயே பெரும்பாலும் விரதத்தை தொடங்குவது வழக்கம். அந்தவகையில் இன்று ஏராளமானோர் மாலை அணிந்து விரதம் தொடங்கி உள்ளனர். குருசாமி கையால் துளசி மணிமாலை அணிந்து ஐயப்ப விரதத்தை துவக்க வேண்டும் என்பது நியதி. முதல் முறையாக சபரிமலைக்கு மாலை அணியும் பக்தர்கள் கருப்பு உடை அணிந்தும், பல முறை சபரிமலை சென்றவர்கள் காவி, நீல நிறங்களில் உடை அணிந்தும் விரதம் இருப்பார்கள்.
அதன்படி, கார்த்திகை மாதம் 1 ஆம் தேதியான இன்று அதிகாலை தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஐயப்ப பக்தர்கள், மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கி உள்ளனர். தமிழகம் முழுவதும் இருக்கின்ற பிரசித்தி பெற்ற கோவில்களில் பக்தர்கள் கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீராடிவிட்டு, மாலை அணிந்து கொண்டுள்ளனர்.
-
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
சஞ்சீவி மலையின் மர்மங்கள்: சித்தர்கள் வாழும் பர்வதமலையின் ஆன்மீக சிறப்புகள் -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications