தேர்தல் அமைதியாக நடைபெற்றது..கூடுதல் பாதுகாப்பு காரணமாக அசம்பாவிதங்கள் இல்லை - டிஜிபி சைலேந்திர பாபு
சென்னை : தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடைபெற்றது எனவும், பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படுவதால் வன்முறைச் சம்பவங்கள் தடுக்கப்பட்டதாக தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு கூறியுள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வார்டு வரையறை செய்யப்பட்டபடி ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடத்தப்பட்டது
மொத்தம் 12,838 பதவிகளுக்கு தேர்தல்கள் நடைபெற்ற நிலையில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. கோவை உள்ளிட்ட சில இடங்களில் விதிமீறல்கள் நடந்ததாகவும், பணப்பட்டுவாடா நடந்ததாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

உள்ளாட்சி தேர்தல்
21 மாநகராட்சிகள் 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கான தேர்தலில் வேட்பாளர்கள் இறந்த, போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட, அல்லது தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது என 295 இடங்களுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை. மேலும் தேர்தலையொட்டி சிசிடிவி, வெப்ஸ்ட்ரீமிங் முதல் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னை ஆவடி தாம்பரம் மாநகராட்சி உள்ளிட்ட இடங்களில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

பலத்த பாதுகாப்பு
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக 30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு சட்டம் ஒழுங்கைப் பேணிக்காக்க சுமார் ஒரு லட்சம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கரூர் மதுரை கோவை சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் சிறுசிறு அசம்பாவிதங்கள் சலசலப்புகள் ஏற்பட்டு அறையில் மற்ற இடங்களில் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது பொதுமக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் ஜனநாயக உரிமையை நிலை நாட்டினர்.

டிஜிபி சைலேந்திர பாபு
தேர்தல் ஆணையத்தை போலவே தமிழக காவல் துறை சார்பிலும் சிறப்பான ஏற்பாடுகள் தேர்தலையொட்டி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழ்நாடு முழுதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடைபெற்றது என தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு கூறியுள்ளார். தேர்தல் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றது என்றார்.

சட்டப்பூர்வ நடவடிக்கை
ஒரு சில இடங்களில் சிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் உடனடியாக அவை விரைந்து சரி செய்யப்பட்டது என்றார். மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்க பட்டதன் காரணமாக வன்முறைச் சம்பவங்கள் நடப்பது தடுக்கப்பட்டதாக கூறிய அவர், சில நிகழ்வுகள் குறித்து புகார்கள் வந்து நிலையில் அது குறித்து சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications