ரொம்ப பாதிக்கப்பட்டிருப்பாங்களோ? கொந்தளித்த நயன்தாரா! லைக் செய்த பிரபல நடிகைகள்! வழக்கறிஞர் விளக்கம்
சென்னை: நானும் ரவுடிதான் படத்தில் வரும் மூன்று நொடி காட்சியை பயன்படுத்தியதற்காக நடிகர் தனுஷ் 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டிருப்பதாக நடிகை நயன்தாரா புகார் கூறியிருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் நயன்தாராவின் குற்றச்சாட்டுக்கு பார்வதி திருவோத்து ஆதரவு தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் நயன்தாராவின் பதிவை அனுபமா பரமேஸ்வரன், கௌரி கிஷன், நஸ்ரியாம் ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பல நடிகைகள் லைக் செய்துள்ளனர். இந்த நிலையில் இது தொடர்பாக தனுஷே விளக்கம் அளிப்பார் எனக் கூறியிருக்கிறார் அவரது வழக்கறிஞரான அருண்..
தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு சந்திரமுகி, கஜினி, வல்லவன், பில்லா, யாரடி நீ மோகினி, உள்ளிட்ட படங்களில் ஹீரோயின் ஆகி இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகை நயன்தாரா.

தமிழில் விஜய், அஜித், ரஜினி, சரத்குமார், சிம்பு, அஜித், ஜெயம் ரவி என சீனியர் ஜூனியர் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு பிரபலமானார். தொடர்ந்து ஜவான் படத்தில் மூலம் பாலிவுட்டிலும் பட்டையை கிளப்பி வருகிறார்.
பல காதல் சர்ச்சைகளில் சிக்கிய போதும் தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிரபல நடிகரான தனுஷ் தயாரிப்பில் நயன்தாரா விஜய் சேதுபதி நடித்திருந்த இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார். இந்த நிலையில் நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவன் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர்களது திருமணம் தொடர்பான ஆவணப்படம் "Nayanthara: Beyond the Fairy Tale" என்ற பெயரில் நாளை மறுநாள் நெட் ப்ளிக்சில் வெளியாக உள்ளது.
திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்த படம் வெளியாகாமல் இருந்து நிலையில் தனுஷ் தான் இந்த விவகாரங்களுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. நானும் ரவுடி தான் படத்தில் பணியாற்றிய போது தான் நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதனால் தங்கள் திருமணம் தொடர்பான ஆவணப் படத்தில் நானும் ரவுடி தான் படத்தில் இருந்து சில வரிகளையும் காட்சிகளையும் பயன்படுத்த தனுஷிடம் நயன்தாரா அனுமதி கேட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் தொடர்ந்து தனுஷ் அதற்கு அனுமதி தராமல் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்தடித்து வந்ததாகவும் இறுதியாக அதனை பயன்படுத்தக் கூடாது என கூறியதாகவும் கூறப்படுகிறது. தன் மீதான தனிப்பட்ட வெறுப்பால் நானும் ரவுடிதான் படத்தின் பாடல் வரிகளை பயன்படுத்த தனுஷ் தடை போட்டதாக குற்றம் சாட்டிய நயன்தாரா, ஸ்ப்ரெட் லவ் என்பதை வெறும் வார்த்தையாக மட்டுமின்றி வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும் என காட்டமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

தொடர்ந்து தனுஷ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் வைத்திருந்தார். குறிப்பாக ஆவணப்படம் தொடர்பான டிரைலரின் மூன்று நொடி காட்சிகளை பயன்படுத்த 10 கோடி ரூபாய் தனுஷ் கேட்டதாகவும் அவர் கூறியது தமிழ் திரையுலகில் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது. இந்த நிலையில் தனுஷ் மீதான நயன்தாராவின் பரபரப்பு குற்றச்சாட்டுக்கு ஆதரவு தெரிவித்து நடிகை பார்வதி திருவோத்து அதனை பகிர்ந்து இருக்கிறார். அது மட்டும் அல்லாமல் நடிகைகள் அனுபமா பரமேஸ்வரன், கௌரி கிஷன், ரியா சுப்பு , நஸ்ரியா பகத் பாசில், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோரும் அவரது பதிவை லைக் செய்து இருக்கின்றனர்.

அதே நேரத்தில் ஒரு தயாரிப்பாளராக இழப்பீடு கேட்க தனுஷிற்கு உரிமை இருக்கிறது என்றும் கூறுகின்றனர் அவரது ஆதரவாளர்கள். ஏற்கனவே இது போன்ற பல சம்பவங்கள் தமிழ் சினிமாவில் அரங்கேறி இருக்கிறது, தனுஷ் மீது மட்டும் குற்றம் சுமத்துவது ஏன் என தனுஷ் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இது குறித்து தனுஷ் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. இந்த நிலையில் இது தொடர்பாக தனுஷே விளக்கம் அளிப்பார் எனக் கூறியிருக்கிறார் அவரது வழக்கறிஞரான அருண். இவர்தான் நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications