நிச்சயமாக இது ஆன்மீக அரசுதான்.. ஸ்டாலின் அரசை மனசார புகழ்ந்த தருமபுரம் ஆதீனம்!
தமிழகத்தில் உள்ள ஆதீனங்களுடன் சற்று நேரத்தில் தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை: தமிழகத்தில் நடைபெறுவது ஆன்மீக அரசுதான் என்று தருமபுரம் ஆதீனம் கூறியுள்ளார். தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்த பின்னர் இதனைக் கூறியுள்ளார். அரசு தனது கொள்கையை கவனித்து கொள்வது போல நாங்கள் எங்களது கொள்கையை பார்க்கிறோம்
Recommended Video
தமிழகத்தில் உள்ள ஆதீனங்களுடன் தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். தருமபுரம் ஆதீனம், காஞ்சிபுரம் ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம், திருவண்ணாமலை ஆதீனம், குன்றக்குடி அடிகளார், சூரியநாராயண ஆதீனம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அழகிய மணவாள ஜுயர், சிவக்கிரக யோகிகள் மடத்தின் ஆதீனம் உட்பட 11 ஆதீனங்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோனையில், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, செயலாளர் சந்திமோகன், ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வரும் மே 5ம் தேதி அறநிலையத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடக்க உள்ள நிலையில் முதல்வர் ஆலோசனை நடத்தினர்.

கோவில்களில் கும்பாபிஷேகம்
ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தருமபுரம் ஆதினம், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நிறைய கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளதாக தெரிவித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர் தமிழகத்தில் நடைபெறுவது ஆன்மீக அரசு என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளாரே என்று கேள்வி எழுப்பினார்.

ஆன்மீக அரசுதான்
அதற்கு பதிலளித்த தருமபுரம் ஆதினம், தமிழகத்தில் நடப்பது ஆன்மீக அரசுதான் என்று கூறினார். அரசு தனது கொள்கையை கவனித்து கொள்வது போல நாங்கள் எங்களது கொள்கையை பார்க்கிறோம். எங்கள் கொள்கையில் அரசு தலையிடுவதில்லை. ஆதீனங்களுக்கு என்று தனியாக சட்ட திட்டங்கள் உள்ளன என்று குறிப்பிட்டார்.

ஆன்மீக பூமி
கடந்த சில நாட்களுக்கு முன்பு தருமபுரம் ஆதின மடத்திற்கு ஆளுநர் ஆர்.என். ரவி சென்றிருந்த போது, 'புராதன நாடான இந்தியா பல்வேறு பெருமைகளையும், சிறப்புகளையும் கொண்டுள்ளது. நாட்டில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு ஆன்மீகத்தைக் கற்றுத்தரும் குரு போன்ற இடத்தில் தமிழகம் உள்ளது என்றார்.

இரண்டு சூரியன்கள்
அப்பொழுது பேசிய தருமபுரம் ஆதீனம், ''தமிழகத்தை ஆண்டு கொண்டிருப்பவர்களும் உதய சூரியன் என்ற சின்னத்தைக் கொண்டவர்கள். ஆளுநரும் சூரியன். ரவி என்றால் சூரியன் என்ற பொருள் உள்ளது. இரண்டு சூரியனும் ஒன்றாகவே தமிழகத்திற்குக் கிடைத்துள்ளது. இதெல்லாம் தெய்வச் செயல் என்று பேசினார் தருமபுரம் ஆதினம்.












Click it and Unblock the Notifications