• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"டேய்.. கைய எங்கே வந்து வெக்கிறே".. ராத்திரி நேரம்.. அதுவும் கோயம்பேடு பஸ்ஸில்.. யார்ன்னு பாருங்க

Google Oneindia Tamil News

சென்னை: ராத்திரி நேரம் ஓடும் பஸ்ஸில் பயணித்து கொண்டிருந்த பெண் திடீரென அலறி கத்தினார்.. தமிழகத்தின் தலைநகரில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது..!

பாலியல் சீண்டலில் ஈடுபட்டால் போக்சோவில் உள்ளே போக வேண்டி வரும் என்று தெரிந்தும், சில்மிஷவாதிகளின் சேட்டைகள் அடங்குவதில்லை.. இப்படி சில்மிஷத்தில் ஈடுபட்டு எத்தனையோ பேர் கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்கள்..

2 நாளைக்கு முன்புகூட, 60 வயது பரசுராமன் என்ற முதியவருக்கு 5 வருட தண்டனை தரப்பட்டது.. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி அவள்.. தன்னுடைய அம்மாவுடன், திருநாவலூரில் இருந்து பண்ருட்டிக்கு பஸ்ஸில் சென்றுள்ளார்.

இந்த போட்டோவ பாருங்க.. 6 வகை புருவங்கள்.. உங்களது குணங்களை நீங்களே அறிய நல்ல வாய்ப்பு! இந்த போட்டோவ பாருங்க.. 6 வகை புருவங்கள்.. உங்களது குணங்களை நீங்களே அறிய நல்ல வாய்ப்பு!

 தகிடுதத்தம்

தகிடுதத்தம்

பஸ் கூட்டமாக இருந்திருக்கிறது.. அதனால் சீட்டில் உட்கார்ந்திருந்த 60 வயது தாத்தா, சிறுமியை தன் பக்கத்தில் அழைத்து உட்கார வைத்து கொண்டார்.. அதற்கு பிறகுதான் வேலையை காட்டியுள்ளார்.. அந்த குழந்தை அழுதுகொண்டே, தன் அம்மாவிடம் வந்து நடந்தவற்றை சொல்லவும், ஆத்திரமடைந்த இந்த அம்மா, சக பயணிகளுடன் சேர்ந்து தாத்தாவுக்கு தர்மஅடி தந்து உளுந்தூர்பேட்டை மகளிர் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.. அவர் மீதுதான் போக்சோ பாய்ந்து, 5 ஆண்டு சிறை தண்டனை + ரூ.10 ஆயிரம் அபராதம் + சிறுமிக்கு இழப்பீடாக ரூ.4 லட்சம் வழங்க கோர்ட் உத்தரவிட்டது.

 சில்மிஷக்காரன்

சில்மிஷக்காரன்

ஆனாலும் இதுபோன்ற தொடர் சம்பவங்கள் இன்றுவரை நடந்து கொண்டுதான் இருக்கிறது.. நேற்று முன்தினம் இரவு கோயம்பேட்டுக்கு அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.. அந்த பஸ்ஸில் 30 பேர் இருந்திருக்கிறார்கள்.. ஒரு சீட்டில் தம்பதி 2 பேர் உட்கார்ந்துள்ளனர்.. இந்த தம்பதிக்கு பின் சீட்டில், போதையில் உட்கார்ந்திருந்த ஒருவர், முன்சீட்டில் அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.. அதாவது பக்கத்தில் அவரது கணவன் இருக்கும்போதே, இந்த வேலையை காட்டி உள்ளார் சில்மிஷக்காரர்..

பாசாங்கு

பாசாங்கு

அதுவரை தூங்குவது போல அந்த நபர் கண்ணை மூடிக் கொண்டு படுத்திருந்தாராம்.. அதற்கு பிறகுதான், பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தபெண், கணவரிடம் இதை சொல்லவும், அதைகேட்டு ஆத்திரமடைந்த கணவரும் தட்டிக் கேட்டுள்ளார்.. இதனால், இரு நபர்களுக்கும் ஓடும் பஸ்ஸிலேயே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.. ஒருகட்டத்தில் பெண்ணின் கணவரை, அந்த சில்மிஷக்காரர் கெட்ட வார்த்தைகளில் பேசியதுடன், பளார் என்று கன்னத்தில் ஓங்கி அறையவும் முற்பட்டுள்ளார்..

சில்மிஷவாதி

சில்மிஷவாதி

அத்துடன், அந்த சில்மிஷ நபர் பிரச்சனையை மேலும் மேலும் வளர்க்க முனைந்தார்.. "நான் ஒரு அதிகாரி.. என்னையே கை நீட்டி பேசுறீயா?" என்று மீண்டும் மீண்டும் அடிக்க பாய்ந்தார்... அதற்கு பிறகுதான், பஸ்ஸை ஒரு ஓரமாக நிறுத்தினார்கள் டிரைவரும், கண்டக்டரும்.. அந்த பெண்ணையும், கணவரையும் அடிக்க பாயும்போது, பதறிப்போன பயணிகள், இப்படித்தான் பேசும்போதே அடிக்க பாய்வதா? என்று அவரை கண்டித்து எச்சரித்தனர்.. அப்போதுதான், பஸ் பயணிகளில் ஒருவர் இதை வீடியோ எடுத்துள்ளார்.. வீடியோ எடுப்பது தெரிந்தும், அந்த நபர் இன்னும் ஆவேசமாகத்தான் நடந்து கொண்டாராம். கன்னத்தில் அறையவும் பாய்ந்துள்ளார்.

 ஃபைனல் டுவிஸ்ட்

ஃபைனல் டுவிஸ்ட்

அதற்குள் கண்டக்டர் ஓடிவந்து குறுக்கிட்டு தடுத்ததுடன், இரு தரப்பையும் சமாதானப்படுத்தியிருக்கிறார்.. கடைசியில் அந்த தம்பதியை மட்டும் பஸ்ஸில் இருந்து கீழே இறக்கிவிட்டுள்ளார் கண்டக்டர்.. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. மண்டைக்கு போதை ஏறும்அளவுக்கு தண்ணி அடித்துவிட்டு, பொதுவெளியில், அரசு பேருந்தில், அதுவும் பக்கத்தில் புருஷன் இருக்கும்போதே இப்படி ஒரு கேவலத்தை செய்தது யார் தெரியுமா? ஆவடி ஸ்டேஷனில் வேலைபார்க்கும் ஒரு போலீஸ் அதிகாரியாம்... இது எப்படி இருக்கு?!!

English summary
Did Aavadi Police misbehave in the Government bus and what happened in Koyambedu Bus
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X