ஆதவ் அர்ஜூனா டெல்லியிலிருந்து திருமாவளவனுக்கு போனை போட்டு? கடந்தமுறை விசிக கேட்ட 3வது சீட் யாருக்கு
சென்னை: கடந்த தேர்தலின்போது, பொதுத்தொகுதியில் 3வது சீட் வேண்டும் என்று திமுகவிடம் திருமாவளவன் கேட்டது, விசிகவில் அப்போது இடம்பெற்றிருந்த ஆதவ் அர்ஜூனாவுக்காகத்தான் என்ற பேச்சு சோஷியல் மீடியாவில் கசிந்தது.. ஆனால், அது தவறான கருத்தாகும் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன். மேலும் பேட்டி ஒன்றில், அதற்கான விளக்கத்தையும் விரிவாகவே கூறியிருக்கிறார்.
Etamil News என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன், "இந்த நாட்டில் நடக்கக்கூடிய ஒவ்வொரு விஷயத்தையும் அதன் பின்னணியுடன் ஆழமாக பார்த்து ஆராய்ந்து சொல்லக்கூடிய ஒரே தலைவர் டாக்டர் தொல்.திருமாவளவன்தான்.

விசிக விழுப்புரம், சிதம்பரம்
இவருடைய கட்சியில் அன்று ஆதவ் அர்ஜூனா இடம்பெற்றிருந்தார். திமுக கூட்டணியில், விழுப்புரம், சிதம்பரத்தை போல பொதுத்தொகுதியில் ஒரு சீட்டை தர வேண்டும் என்று விசிக கேட்டது. அதற்கு திமுக மறுப்பு சொன்னது..
3வது சீட்டை திருமாவளவன் கேட்பதே ஆதவ் அர்ஜூனாவுக்காகத்தான் என்று செய்திகள்
அன்று பரப்பப்பட்டன..ஆதவ் அர்ஜூனா வாய்ஸ் ஆப் மேன் என்ற தன்னுடைய அமைப்பையும், ஊடக தொடர்பையும் வைத்து கொண்டு, இப்படியொரு செய்தியை வெளியிடும்படியும் சொன்னார்கள்..
தலித் கட்சி - பொதுத் தொகுதி
விசிக மத்தியிலேயே இதுமிகப்பெரிய கேள்வியை அன்று எழுப்பியிருந்தது.. ஆதவ் அர்ஜூனாவுக்குதான் 3வது சீட்டை கேட்கிறார்களா? ஜனநாயக மாநாட்டை நடத்தியதற்கு ஆதவ் அர்ஜூனா செலவு செய்ததால்தான், பிரதி உபகாரமாக சீட் தரப்படுகிறதா? என்று செய்தியாளர்கள் கூட்டத்தில் திருமாவளவனிடம் நானே நேரடியாக கேட்டேன்.
அதற்கு திருமாவளவன், இல்லவே இல்லை, எங்களை தலித் கட்சி என்றே பலரும் சொல்லி கொண்டிருக்கிறார்கள்.. ஆனால் நிறைய பேர் எங்கள் கட்சியில் உள்ளனர்.. பொதுவில் மக்கள் அதிகப்படியான வாக்குகளை செலுத்துவதால், பொதுத்தொகுதியில் நின்று, விசிக அனைவருக்குமான கட்சி என்பதை காட்ட விரும்புகிறோம்.
ஆதவ் அர்ஜூனாவுக்கு 3வது சீட்?
அவ்வளவு ஏன்? என்னுடைய சிதம்பரம் தொகுதியைகூட திரும்ப எடுத்துக் கொண்டு, அதற்கு பதிலாக பொதுத்தொகுதியை தருமாறு கேட்கிறோம்.. அவ்வளவுதான்,
மற்றபடி ஆதவ் அர்ஜூனாவுக்காக சீட் வாங்குவது என்பது உண்மையில்லை.. விசிகவில் எத்தனையோ பேர் போராடி சிறைக்கு சென்றிருக்கிறார்கள்.. அந்த ஜனநாயக மாநாட்டை நடத்தியதில் 2 கோடி ரூபாய் கடன் இன்னும் உள்ளது. என்னுடைய தொண்டர்கள், என்னுடைய கட்சியை வைத்து அடைப்பேன் அந்த கடனை அடைத்துவிடுவேன் என்ற நம்பிக்கை, அதற்காக யாரிடமும் காசு வாங்க மாட்டேன்" என்று விளக்கம் தந்தார்.
திருமாவளவனுக்கு வந்த டெல்லி போன்
அதுமட்டுமல்ல, அந்த நேரத்தில் திருவாவளவனுக்கு டெல்லியில் இருந்து போன் செய்த ஆதவ் அர்ஜூனா, எடப்பாடியின் தரப்பு உங்களை வந்து சந்திப்பார்" என்றாராம். அதற்கு திருமாவளவன், "தேவையில்லை" என்று சொல்லி போனை கட் செய்துவிட்டாராம். இதை திருமாவளவனே என்னிடம் சொன்னார்.
கேட்கும் தொகுதியை திமுக தராவிட்டால் கூட்டணியை முறிப்போம் என்று விசிகவுக்குள்ளேயே சிலர் சொன்னார்கள். அதேபோல 3வது சீட் விசிகவுக்கு தராவிட்டால், திமுக கூட்டணியை விட்டு திருமாவளவன் வெளியேறி விட்டால், அப்போது அவரை தன்பக்கம் இழுத்து கொள்ளலாம் என்று பாஜக, அதிமுக என ஆளுக்கொரு பக்கம் முயற்சிகளை எடுத்தன.
பாஜகவுக்கு தர மாட்டேன்
ஆனால், திருமாவளவன் தன்னுடைய முடிவில் உறுதியாக நின்றார். 3வது சீட் திமுக தராமல் போனாலும் சரி, ஒரு சீட்கூட விசிகவுக்கு தராவிட்டாலும் சரி, திமுக கூட்டணியை விட்டு வெளியேற மாட்டேன். திமுகவை விட்டுக் கொடுக்கவும் மாட்டேன்.. காரணம், தமிழ்நாட்டை பிஜேபிக்கு விட்டுத்தர மாட்டேன்" என்றார் திருமாவளவன்.
அப்படிப்பட்ட திருமாவளவனையே கூட்டணி விஷயத்தில் எப்படியெல்லாம் முயற்சித்திருக்கிறார் பாருங்கள்? ஆதவ் அர்ஜூனாவுக்கு கொள்கை என்று ஏதாவது உள்ளதா? பாஜக தந்த அஜெண்டாவை செய்பவர்.. எங்கே விஜய் உருப்படுவது?" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி! -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி












Click it and Unblock the Notifications