வாள் சுழற்றிய எடப்பாடி.. அண்ணாமலைக்கு எதிராக போட்ட ரகசிய திட்டம்.. பின்னணியில் பர்சனல் காரணம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவையும் தன்னையும் கடுமையாக அண்ணாமலை விமர்சித்ததினால்தான், அவரை மாற்ற வேண்டும் என்று பாஜகவின் தலைமையிடம் எடப்பாடி பழனிச்சாமி நிபந்தனை விதித்ததாக தமிழக பாஜகவிலும் அதிமுகவிலும் சொல்லப்பட்டு வருகிறது. ஆனால், அண்ணாமலையை மாற்ற வலியுறுத்துவதற்கு இது காரணம் இல்லையாம். மாறாக, எடப்பாடியின் பெர்சனல் காரணம் ஒன்று இருக்கிறது என்கிறார்கள் எடப்பாடியின் ரகசியம் அறிந்தவர்கள்.

2023ல் அதிமுக பாஜக கூட்டணி உடைவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக கருதப்படுபவர் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை. இந்த நிலையில் மீண்டும் பாஜக - அதிமுக கூட்டணி அமையும் பட்சத்தில் பாஜக தமிழக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை விலகலாம் என கட்சிக்கு நெருக்கமான வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்ணாமலை இருந்தால் கூட்டணி அமைவது கஷ்டம் என்று டெல்லி இந்த முடிவை எடுக்கலாம் என்று கூறப்படுகிறது. அண்ணாமலையின் சமீபத்திய பேட்டிகளும் கூட இதை உணர்த்துவதாகவே இருக்கின்றன. இன்னும் 2 வாரங்களில் நான் சாதாரண ஆளாக இருக்கலாம் என்றும் கூட அண்ணாமலை இக்கு வைத்து பேசி உள்ளார்.

annamalai Edappadi Palaniswami

தமிழ்நாடு பாஜகவின் புதிய தலைவருக்கான போட்டியில் நான் இல்லை என்று கோவையில் அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார். புதிய தலைவர் யார் என்றும் நான் கைகாட்ட போவதில்லை என்றும் அவர் அறிவித்துள்ளார். இதனால் கிட்டத்தட்ட அண்ணாமலை பதவி விலகுவது அல்லது நீக்கப்படுவது உறுதியாகி உள்ளது. இதனால் புதிய தலைவர் பதவிக்கு 6 பேர் லிஸ்டில் உள்ளனர். வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், சரத்குமார், பொன் ராதாகிருஷ்ணன், ஏபி முருகானந்தம் , டெல்லியை சேர்ந்த தமிழ் பின்புலம் கொண்ட ஒரு ஆர்எஸ்எஸ் நிர்வாகி ஆகியோர் உள்ளனர்.

அண்ணாமலை எடப்பாடி

இந்த நிலையில்தான் அண்ணாமலையை மாற்ற எடப்பாடி டெல்லிக்கு பிரஷர் தந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பின் எடப்பாடியின் பெர்சனல் காரணம் ஒன்று இருக்கிறது என்கிறார்கள் எடப்பாடியின் ரகசியம் அறிந்தவர்கள்.

அதாவது, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதலமைச்சர், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர், கட்சியில் தனக்கு போட்டியாளர்களை நீக்கி வைத்தல், பிறகு கட்சியின் பொதுச்செயலாளர் என அதிகாரத்தின் முக்கிய பீட்டத்தில் இருந்தார் எடப்பாடி. அந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ள நிறையவே உழைத்திருக்கிறார்.

ஆட்சியை பிடிக்க வாய்ப்பு

இந்த நிலையில், திமுகவை வீழ்த்தி ஆட்சியை பிடிக்க சக்தி வாய்ந்த ஒரே இயக்கமான அதிமுக, தனது சமூகத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமியின் வசம் இருப்பதை வலிமையாக நினைக்கிறது கொங்கு வேளாளர் சமூகம். அதற்கேற்ப அந்த சமூகத்தின் ஆகப்பெரிய தொழிலதிபர்களின் நட்பில் இருந்து வருகிறார் எடப்பாடி. எடப்பாடியும், கொங்கு வேளாளர் சமூகத்தில் தன்னைத் தவிர்த்து இன்னொருவர் வலிமையாக வளர்வதை விரும்பவில்லை. அது, அதிமுகவாக இருந்தாலும் சரி ; அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளில் இருந்தாலும் சரி.

அந்த வகையில், பாஜக தலைவர் அண்ணாமலை, எடப்பாடியின் சமூகத்தைச் சேர்ந்தவர். அவருடைய 3 ஆண்டுகால அரசியல் நடவடிக்கைகள், தமிழக அரசியலையும் கடந்து கொங்கு வேளாளர் சமூகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதே நிலை நீடித்தால், எடப்பாடிக்கு இணையாகவும் போட்டியாகவும் எதிர்காலத்தில் அண்ணாமலை உருவாவார் என்பது எடப்பாடிக்குச் சொல்லப்பட்ட தகவல். எடப்பாடியும் இந்த கணக்கை ஏற்கனவே போட்டு வைத்திருந்தார்.

அண்ணாமலை ரைஸ்

சட்டமன்றத்தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி வைத்து, அப்போதும் அண்ணாமலையே பாஜகவின் தலைவராக இருக்கும் சூழலில், அதிமுகவின் வாக்கு வங்கியில் அண்ணாமலையும் அவரது ஆதரவாளர்களும் தேர்தலில் வெற்றிப்பெற்றால் அது நமக்கே எதிராகத்திரும்பும் என்றும், கொங்கு சமூகத்தில் தன்னைத் தவிர்த்து இன்னொருவர் உருவாகக்கூடாது என்றும் திட்டமிட்டுதான் அண்ணாமலையை தலைவர் பதவியில் மாற்றுங்கள்; தமிழக அரசியலை விட்டுவிட்டு தேசிய அரசியலுக்கு அவரை இழுத்துக் கொள்ளுங்கள் என்று பாஜக தலைமையிடம் நிபந்தனையை கோரிக்கையாக வைத்தார் எடப்பாடி.

ஆக, அண்ணாமலைக்கு எதிராக எடப்பாடி வாள் சுழற்றுவதற்கு இதுதான் உண்மையான காரணமே தவிர, எடப்பாடியை ஒருமையில் பேசி விட்டார்; அதிமுகவை விமர்சித்து விட்டார் என்பதல்ல! என்கிறார்கள் இந்த ரகசியத்தை அறிந்த அதிமுகவினர். எடப்பாடியின் இந்த ரகசியத் திட்டமிடல் அண்ணாமலைக்கும் தெரியும் என்கிற தகவலும் அதிமுக தரப்பில் உலா வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+