வாய் திறந்த வளர்மதி.. பாதி டாஸ்மாக் + மீதி சைடு டிஷ் = ரூ.1000.. திமுகவுக்கு வந்த ஆவேசம்.. என்னாச்சு
சென்னை: பாதி பணம் டாஸ்மாக் போகிறது, மீதி பணம் சைடு டிஷ்ஷுக்கும் தான் போகிறது என்று மகளிர் உரிமைத்தொகை 1000 ரூபாயை, அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி விமர்சித்துள்ளார்.
காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜசேகருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் வளர்மதி இன்று பல்வேறு இடங்களில் பிரச்சரம் செய்தார். அவருடன் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு, அதிமுகவுக்கு ஓட்டு கேட்டனர்.

வளர்மதி: அப்போது வளர்மதி, "எல்கேஜி படிக்கும் குழந்தைக்குக்கூட, திமுக அரசு வந்ததிலிருந்து பாதுகாப்கே கிடையாது. போலீஸ்காரர்களின் காவல்துறை உதவியுடனேயே, குழந்தைகளுக்கு அயோக்கியர்கள் பாலியல் தொந்தரவு தருகிறார்கள்.. இதுக்கெல்லாம் காரணம் கஞ்சா தான். அந்த கஞ்சா விற்பனையும், போலீஸ்காரர்களின் உதவியுடன்தான் கஞ்சா விற்பனை நடைபெறுகிறது. தவறு செய்தவர்களை பிடித்து விசாரித்தால், கஞ்சா போதையில் செய்துவிட்டேன் என்று சாக்கு சொல்கிறார்கள்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தொடர்ந்து தந்த அழுத்தத்தால் தான், இன்றைக்கு மகளிர் உரிமைத் தொகை ஒரு சில பேருக்கு மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களை சொல்லி, தகுதியில்லை என்கிறார்கள். பெண்ணாக இருந்தாலே தகுதி தானே? அதைவிட வேறு என்ன தகுதி வேண்டும்?
சைட் டிஷ்: அப்படி வரும் ஆயிரம் ரூபாய் பணத்தை கூட பெண்கள் அவர்கள் தேவைக்கு பயன்படுத்த முடியவில்லை. அதை ஆண்கள் பிடுங்கிக் கொண்டு டாஸ்மாக்கிற்கு கொடுத்து விடுகின்றனர். 500 ரூபாய் சரக்குக்கும், 500 ரூபாய் சைடு டிஷ்ஷுக்கும் சென்று விடுகிறது என்றார்" என்றார் வளர்மதி.
இந்த முறை தேர்தல் பிரச்சாரத்தில், எதிர்க்கட்சிகளால் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருவது மகளிர் உரிமைத்தொகைதான். ஆளும் கட்சிகள் தங்களது சாதனை திட்டமாக, இந்த திட்டத்தை பற்றி பிரச்சாரம் செய்ய, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளோ, இந்த திட்டத்தை விமர்சித்து வருகிறார்கள்.
கதிர் ஆனந்த்: வேலூர் தொகுதியில், 4 நாட்களுக்கு முன்பு பிரச்சாரத்தில் ஈடுபட்ட கதிர் ஆனந்த், திமுக செய்த சாதனைகளை பேசும்போது, "மேடையில் இருந்து பார்த்தால் சுற்றியுள்ள பெண்களின் முகம் எல்லாம் பளபளவென்று தெரிகிறது. என்னவென்று தெரியவில்லை எல்லோரும் பாண்ட்ஸ் பவுடர், ஃபேர் அண்ட் லவ்லி போட்டு பளபளன்னு இருக்கீங்க..? என்ன காரணம் முதலமைச்சர் ஸ்டாலின் மகளிர் உரிமை தொகையாக 1000 ரூபாய் செலுத்தியது வந்துவிட்டதா" என்று கேட்டார்.
அதாவது, முதல்வர் செலுத்திய மகளிர் உரிமைத்தொகையில் தான், பெண்கள் பவுடர் போட்டுக்கொண்டு பளபளவென்று இருப்பது போல திமுக எம்பி கதிர் ஆனந்த் பேசியிருந்தது சர்ச்சைக்குரியதாக மாறியது.
பொன்முடி: இப்படித்தான், ஏற்கனவே ஒருமுறை அமைச்சர் பொன்முடி, "மகளிர் எல்லாம் ஓசி பஸ்ஸில்தான் போறீங்க" என்று சொல்லி பரபரப்பை கிளப்பியிருந்தார்.. இப்போது, கதிர் ஆனந்த்தும் இதுபோல பேசி, திமுகவிற்கு சங்கடத்தை தந்தார்.. இப்படிப்பட்ட சூழலில், எதிர்க்கூடாரத்திலிருந்து, மூத்த தலைவர் மகளிர் உரிமைத்தொகையை விமர்சித்திருப்பதற்கு திமுக தரப்பில் கடும் எரிச்சலை தந்து வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications