"கடைசி" கட்டமா? அண்ணாமலை சொல்றது "இடிக்குதே".. கன்பியூசனில் கமலாலயம்.. தமிழகத்தில் "சம்பவம்" இருக்கு
சென்னை: தேர்தல் ஆணையம் ஒன்று நினைத்தால், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் அதையேதான் நினைக்கிறாராம்.. இதுக்கு காரணம் என்னவா இருக்கும்??? இதுகுறித்துதான் ஒரு பிரத்யேகமான தகவல் நமக்கு கிடைத்திருக்கிறது.
விரைவில் எம்பி தேர்தல் வரப்போகிறது.. இதற்கான ஏற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. கடந்த எம்பி தேர்தலை நடத்தியதை போலவே, இந்த முறையும் இந்தியா முழுவதும் மொத்தம் 7 கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடத்த திட்டமிடப்பட்டு வருவதாக தெரிகிறது.

நிகழ்ச்சிகள்: வழக்கமாக, ஒவ்வொரு மாநிலத்திலும் பள்ளி தேர்வுகள், பண்டிகைகள் மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளை கணக்கிட்டு தேர்தல் ஆணையம் ஆய்வு செய்யும்.. இந்த ஆய்வின் அடிப்படையில்தான் தேர்தல் தேதி அட்டவணையும் தயாரிக்கப்படும்.
பெரும்பாலும், மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் இருக்கும் மாநிலங்கள் பல கட்டமாக தேர்தல் நடத்தப்படும். அதேபோல, உத்தரபிரதேசம் போன்ற பெரிய பெரிய மாநிலங்களிலும் பல கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும்..
வாக்குப்பதிவு: ஆனால், வாக்குப்பதிவின்போது, வடமாநிலங்களுடன் ஒப்பிடுகையில், நம்முடைய தமிழகத்தில், பதற்றமோ, கலவரமோ அவ்வளவாக கிடையாது.. 39 தொகுதிகளிலுமே, சுமூகமான சூழ்நிலையே எப்போதும் காணப்படும். ஒவ்வொரு தேர்தலும் அமைதியாகவே நடந்து முடியும்.. அதனால்தான், வழக்கம்போல, இந்த முறையும் ஒரே கட்டமாக தமிழகத்துக்கு வாக்குப்பதிவு நடத்த முடிவாகி உள்ளதாக சொல்கிறார்கள். இதுகுறித்த உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை வரவில்லை.
அதேபோல, எம்பி தேர்தல்களை எப்போதுமே பல கட்டங்களாக நடத்தி வரும் தேர்தல் ஆணையம், தமிழகம் மற்றும் புதுச்சேரியிலுள்ள தொகுதிகளுக்கான தேர்தலை முதல் கட்டத்திலேயே நடத்தி முடித்து விடும்.
பட்டியல்கள்: பெரும்பாலும் முதல் கட்டத்தில் நடக்கும் மாநிலங்களில் பட்டியலில் தமிழ்நாடும், பாண்டிச்சேரியும் அடங்கும். அதுமட்டுமல்லாமல், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள 1 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடத்தி முடித்துவிடும். அதற்கேற்ப தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்.
ஆனால், இந்த முறை தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான தேர்தலுக்கான தேதியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதாவது, 7 கட்டங்களாக நடத்தப்படவிருப்பதாக தகவல்கள் வரும் நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடங்கியுள்ள 40 தொகுதிகளுக்கும் கடைசிக் கட்டமான 7-வது கட்டத்தில் தேர்தலை நடத்தலாமா? என்கிற ஆலோசனை தேர்தல் ஆணையத்திடம் இருப்பதாக சொல்லப்படுகிறது.
புரியலயே: இதற்கிடையே, தமிழகத்திற்கான தேர்தலை கடைசி கட்டத்தில் நடத்தலாம் என மேலிடத்திற்கு தனது யோசனையாக தெரிவித்திருக்கிறாராம் பாஜக அண்ணாமலை. ஆனால், கடைசி கட்டத்தில் நடத்துவதால் தமிழகத்தில் பாஜகவுக்கு என்ன லாபம் என்பதுதான் புரியவில்லை என குழம்பியுள்ளதாம் கமலாலய வட்டாரம். என்னவா இருக்கும்???
-
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications