பொசுக்குனு வீரலட்சுமி சொன்ன வார்த்தை.. IPS மூளை அண்ணாமலை.. பாஜகவில் யாரந்த பெண்? விஜய்க்கு ஒரே "இடி"
சென்னை: அண்ணாமலை தூண்டுதலின்பேரில் பாஜகவினர் ஆபாச வீடியோ அனுப்பி தொல்லை கொடுப்பதாக சென்னை போலீஸ் கமிஷனர் ஆபீசில் வீரலட்சுமி புகார் அளித்துள்ளார்.
சென்னை வேப்பேரி கமிஷனர் ஆபீசில் தமிழர் முன்னேற்றப் படை கட்சியின் தலைவர் வீரலட்சுமி புகார் ஒன்றை தந்துள்ளார்.. அந்த புகாரில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தூண்டுதலின் பேரில் பாஜகவினர் தனக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி, போன் செய்து, கொலை மிரட்டல் விடுப்பதாகவும், அவர்களின் மீது நடவடிக்கை தேவை என்றும் கோரியுள்ளார்.

அண்ணாமலை: இதற்கு பிறகு, வீரலட்சுமி செய்தியாளர்களிடம் பேசியபோது: "பாஜக மாநில மகளிர் அணி பொருளாளர் மாலினி ஜெயச்சந்திரன், பல்லாயிரம் கோடிகளுக்கு சொத்துக்களை வாங்கி கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதாக நிறைய ஊர்களில் சொல்லி வருவதாக, பொதுமக்கள் என்னை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.
அதனடிப்படையில் கடந்த 6 மாதங்களாக, நாங்கள் அதனை ஆய்வு செய்து, சுமார் 1500 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதை கண்டுபிடித்தோம்.
3 ஆயிரம் கோடி: இந்த சொத்துக்கள் குறித்து 5 முறை வருமானவரித்துறை இயக்குநர் அலுவலகத்தில் புகார்களும் தந்தோம்.. வெவ்வேறு தேதிகளில் இவர்கள் பெயரில் உள்ள சொத்து பத்திரங்களையும் அப்போது ஒப்படைத்தோம். இன்னும் 3 ஆயிரம் கோடி அளவிற்கு சொத்துக்கள் இருக்கிறது.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு, சாதாரண எல்ஐசி ஏஜென்ட் ஆக இருந்த பெண்மணிக்கு, இப்போது எப்படி இவ்வளவு சொத்து வந்தது? பாஜக மாநில மகளிர் அணி பொருளாளர் மாலினி ஜெயச்சந்திரன் பாஜகவில் கருப்பு பணத்தை வைத்திருப்பவர்களிடம் இருக்கும் பணத்தை வெள்ளையாக மாற்றி கொடுக்கும் வேலையை பார்த்து வருகிறார்.
இதைத்தொடர்ந்து நான் வெளிப்படுத்தி வந்ததன் அடிப்படையிலேயே , பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தூண்டுதலின் பெயரில் பாஜகவினர் என்னை தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி வருகிறார்கள்.
மன உளைச்சல்: 15-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களை தொடர்ந்து அனுப்பி, எனக்கு மன உளைச்சலை உண்டாக்குவது மட்டுமில்லாமல் தொடர்ந்து கொலை மிரட்டலும் விடுத்து வருகிறார்கள். நான் தொடர்ந்து புகார் கொடுத்தும் அண்ணாமலை ஏன் கண்டுகொள்ளவில்லை? பாஜவிற்கும் அந்த பெண்மணிக்கும் சம்பந்தமில்லை என்றால் ஏன் அவரை கட்சியிலிருந்து நீக்கவில்லை?
அண்ணாமலை தன்னுடைய ஐபிஎஸ் மூளையை பயன்படுத்தி யார் யார் ரவுடிகளாக இருந்து பல்லாயிரம் கோடி சொத்துகளை சேர்க்கிறார்களோ அவர்கள் மீது அமலாக்கத்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையை ஏவி விட்டு அவர்களை கட்சியில் சேர்த்து வருகிறார்.. இந்தியாவில் அமலாக்க துறையை பயன்படுத்தி மக்களை அச்சுறுத்தும் ஒரே இயக்கம், அது இந்த பாஜக தான்.
விஜய் பணம்: பாஜகவினர் என்னை எந்த அளவிற்கு மிரட்டினாலும் நான் பயப்பட மாட்டேன்.. இப்போது விஜய் கட்சி ஆரம்பித்திருக்கிறார்.. 5 பேரால் ஒரு பெண் பாதிக்கப்பட்டபோது உதவி செய்யுமாறு அந்த பெண்மணி விஜய்க்கு கோரிக்கை வைத்தார். ஆனால் விஜய் அதை செய்யவில்லை. இப்போது அவர் கட்சி தொடங்கி இருக்கிறார் என்றால், தன்னுடைய பணத்தை பாதுகாக்க மட்டுமே" என்றார் தமிழர் முன்னேற்ற படை கட்சியின் தலைவர் வீரலட்சுமி.
-
அண்ணாமலைக்குப் போகிறதா கோவை வடக்கு.. சட்டென வானதி சீனிவாசன் கொடுத்த ரியாக்ஷன் -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ்












Click it and Unblock the Notifications